என் மலர்
மேஷம் - வார பலன்கள்
மேஷம்
இந்த வார ராசிப்பலன்
26.9.2022 முதல் 2.10.2022 வரை
உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும் வாரம். ராசி அதிபதி செவ்வாய் தன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பொரு ளாதார பற்றாக்குறை அகலும்.ஏற்றுமதி, இறக்கு மதி தொழிலில் இருப்பவர்களுக்கு ஏற்றமான வாரம்.புதிய தொழில் வாய்ப்புகள், முயற்சிகள் மன நிறைவு தரும். அரசு வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு அப்பா யின்மென்ட் ஆர்டர் வரும். சிலருக்கு தந்தையின் அரசு வேலை கிடைக்கும்.
நீண்ட காலமாக விற்க முடியாத சொத்துக்கள் விற்பனை ஆகும். இழுபறியாக இருந்த காரியங்கள் கூட துரித வேகத்தில் நடந்து முடியும். 5-ம் அதிபதி சூரியன் 3,6ம் அதிபதி புதன் மற்றும் 2,7ம் அதிபதி சுக்கிரனுடன் 6ல் சேர்க்கை பெற்று இருப்பதால் காதலர்கள் பெற்றோரின் நல்லாசியுடன் திருமணம் செய்வது உத்தமம்.
சில தம்பதிகள் தொழில் உத்தியோகத்திற்காக பிரிந்து வாழலாம்.சிறு உடல் உபாதைகள் அவ்வப்போது தோன்றும். 29.9.2022 இரவு 11.25 முதல் 2.10.2022 அதிகாலை 3.10 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் மனக்கவலை, முக்கிய பணிகளை குறித்த நேரத்தில் முடிப்பதில் தடை, தாமதம் போன்ற அசவுகரியங்கள் இருக்கும். விநாயகருக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மேஷம்
இந்த வார ராசிப்பலன்
19.9.2022 முதல் 25.9.2022 வரை
விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய வாரம். 5-ம் அதிபதி சூரியன் 6-ம் அதிபதி புதனுடன் இணைவதால் பூர்வீகச் சொத்தால் வம்பு வழக்கு உண்டு. உயர் கல்வியில் தடை உண்டாகலாம். குழந்தைகளால் சிறு மன வேதனை ஏற்படும். ஆன்மீக ஈடுபாடு இருக்காது. நான்காம் இடத்தை வக்ரம் பெற்ற சனி, குரு பார்ப்பதால் வீடு, வாகனம் சொத்து, படிப்பு சார்ந்த விஷயங்களில் இழப்பு, விரயம், ஏமாற்றங்கள், தர்மசங்கடங்கள் உண்டாகலாம்.
வாரத்தின் இறுதி நாட்களில் நிலைமை சீராகும். பெரிய பாதகம் எதுவும் நடக்காது என்பதை உறுதியாகக் கூறலாம். மனைவிக்கு ஊதிய உயர்வு கிடைக்கும். திருமண முயற்சிகள் சாதகமாகும். தாய்,தந்தையின் நல்லாசிகள் உங்களை காக்கும். காதல் திருமணம் நடக்கும். விரய அதிபதி குருவால் புதிய சொத்து வாங்கும் முயற்சி கைகூடும்.
ஆறாம் அதிபதி புதன் பலம் பெற்று இருப்பதால் கடன் வாங்குவது,ஜாமீன் போடுவதை தவிர்க்கவும். வர வேண்டிய தொகையில் காலதாமதம் ஏற்படும். கொடுக்கல் வாங்கல், ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பெண்களுக்கு வீட்டிலும் வேலை பார்க்கும் இடத்திலும் நிம்மதியான சூழல் நிலவும். அமாவாசையன்று பட்சிகளுக்கு தானியம் வழங்கவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மேஷம்
இந்த வார ராசிப்பலன்
12.9.2022 முதல் 18.9.2022 வரை
முழுமையான அனுகூலம் கிடைக்கும் வாரம். ராசி அதிபதி செவ்வாய் தன ஸ்தானத்தில் ஆறு மாத காலத்திற்கு சஞ்சரிக்கப் போவதால் தங்கு தடை இல்லாத பணவரவு ஏதாவது ஒரு வழியில் இருந்து கொண்டே இருக்கும். நிலையற்ற வருமானத்தில் தள்ளாடிய குடும்பம் நிலையான வருமானத்தில் தலை நிமிர்ந்து நிற்கும்.
செவ்வாய் குடும்ப ஸ்தானத்தை கடக்கும் வரை இயற்கை சுபாவமான முன் கோபத்தைக் குறைத்து எதிலும் நிதானமாக செயல்பட வேண்டும்.உத்தியோகஸ்தர்களுக்கு உச்சபுதனால் வேலைப் பளு அதிகரிக்கும். மேலதிகாரிகளின் ஆதரவால் பணியில் முன்னேற்றங்களைக் காண்பீர்கள். விரும்பிய கடன் அல்லது உதவித் தொகை தேடி வரும்.
கடன் தொல்லை , சகோதர விரோதம், அரசு வகைச் சிக்கல்கள் அகலும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான முயற்சியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். சிலர் உயர் கல்விக்காக இடம் பெயரலாம். வாழ்க்கைத் துணை, நண்பர்களின் உதவியால் சில முக்கிய பணிகளை செய்து முடிப்பீர்கள். மங்களகரமான சுப நிகழ்வுகள் கைகூடும்.விநாயகருக்கு வெள்ளெருக்கு மாலை அணிவித்து வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மேஷம்
இந்த வார ராசிப்பலன்
5.8.2022 முதல் 11.9.2022 வரை
யோகமான வாரம். குடும்ப ஸ்தான அதிபதி சுக்ரன் பூர்வ புண்யாதிபதி சூரியனுடன் ராசிக்கு 5-ல் நிற்பதால் புதிய தொழில் தொடங்கும் முயற்சி கைகூடும். தொலை நோக்கு சிந்தனையோடு செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள்.
வருமானம் திருப்தி தரும். வறுமை நீங்கும்.
துரத்திய அவமானங்கள் விலகும். தொழில் தொடர்பான முக்கிய பிரச்சினைகளை கூட்டாளியின் உதவியால் பேசித் தீர்ப்பீர்கள். விலகிச் சென்ற உறவுகள் விரும்பி வந்து சேருவார்கள். மகன், மகளின் படிப்பிற்கு தகுந்த வேலை கிடைக்கும். எதிர்காலம் குறித்த கவலைகள் அகலும்.ரத்தம் சம்பந்தப்பட்ட உறவுகளால்செலவுகள் அல்லது கடன் வரலாம்.
உத்தியோகஸ்தர்களுக்கு இடமாற்ற சிந்தனை மேலோங்கும்.கடுமையாக உடலால் உழைக்க வேண்டிய தொழிலில் இருந்தவர்கள் நிம்மதியாக மூளைக்கு வேலை தரும் வேலைக்கு மாறுவார்கள்.நிலம், தோட்டம், வீடு போன்ற சொத்துக்கள் விற்பனையில் பெரிய லாபத்தை அடைவீர்கள்.
பெற்றோர்கள் உங்கள் உணர்வுகளை புரிந்து கொள்வார்கள். கணவன்-மனைவி உறவில் அன்பு மிளிரும்.கற்பக விநாயகரை வழிபட்டால் முன்னேற்றங்கள் விருட்சமாக வளரும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மேஷம்
இந்த வார ராசிப்பலன்
29.8.2022 முதல் 4.9.2022 வரை
பொறுப்புடன் செயல்பட வேண்டிய வாரம். ராசி அதிபதி செவ்வாய் தன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பொருளாதாரம் சிறப்பாக அமைந்து குடும்பத் தேவைகள் நிறைவு பெறும். எதிர்பார்த்த இடங்களில் இருந்து பணம் வரும். பிள்ளைகளுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை முழுமையாக மன நிறைவுடன் செய்து முடிப்பீர்கள். வீட்டை விரிவு செய்தல், புதிய வீடு கட்டுதல், நவீன பொருட்களை சேர்த்தல் போன்ற எண்ணங்கள் அதிகரிக்கும். கூட்டுத் தொழிலில் கூட்டாளிகளின் ஒற்றுமையற்ற செயல்களால் சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் லாபம் குறையாது.
உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப் பளு சற்று அதிகரிக்கும். 3, 6-ம் அதிபதி புதன் உச்சம் பெற்றதால் கடன் பெறுவதையும், கொடுப்பதையும் தவிர்க்கவும். இளம் மங்கையர்கள் மணாளனைக் காணும் நாள் நெருங்கிவிட்டது. 2.9.2022 மாலை 5.55 முதல் 4.9.2022 இரவு 9.42 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் சிலர் கட்டுப்படுத்த முடியாத ஈகோ மற்றும் கோப உணர்வினால் தேவையற்ற வாக்கு வாதத்தில் ஈடுபட்டு பகையை வளர்ப்பார்கள். எனவே பேச்சில் நிதானம் தேவை. திருமணத் தடை இருப்பவர்கள் ஸ்ரீ காளஹஸ்திக்கு சென்று வரவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மேஷம்
இந்த வார ராசிப்பலன்
22.8.2022 முதல் 28.8.2022 வரை
குடும்ப ஸ்தானம் வலுப்பெறும் வாரம். ராசி அதிபதி செவ்வாய் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தொழிலில் லாபம் அதிகரிக்கக் கூடிய நல்ல சந்தர்ப்பங்கள் தாமே உருவாகும். உணவு சார்ந்த தொழில் செய்வோருக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். சிலருக்கு கடல் கடந்து வாணிபம் செய்ய நல்ல யோகம் உண்டாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வாங்கிய பணத்தை திரும்ப செலுத்தி கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.
வரவிற்கு ஏற்ற செலவும் இருந்து கொண்டே இருக்கும். வாரிசுகளுடன் ஏற்பட்ட மனஸ்தாபம் சரியாகும். இளம் வயதினருக்கு குடும்ப உறவுகளின் ஆசிர்வாதத்தால் திருமணம் நடக்கும். சிலருக்கு மறுமணம் நடக்கும். பூர்வ புண்ணியாதிபதி சூரியனால் ஆண் வாரிசு பிறக்கும். ஆன்ம பலம் பெருகும்.
உயர் கல்வியில் நிலவிய தடை, தாமதங்கள் அகலும். அலுவலகத்தில் நிலவிய சிக்கல்கள் தீரும். ஜென்ம ராகுவால் தேவையற்ற சிந்தனையும் பயமும் தோன்றி மறையும். சகோதர சகோதரிகள் மனக்கசப்பை மறைத்து வெளியில் பாசத்தை வெளிப்படுத்துவார்கள். வள்ளி, தெய்வானை சமேத முருகப் பெருமானை நெய்தீபம் ஏற்றி வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மேஷம்
இந்த வார ராசிப்பலன்
15.8.2022 முதல் 21.8.2022 வரை
புதிய முயற்சிகளால் வருமானம் அதிகரிக்கும் வாரம். ராசி அதிபதி செவ்வாய் தன ஸ்தானத்திலும், தனம், வாக்கு, குடும்ப ஸ்தான அதிபதி சுக்ரன் சுக ஸ்தானத்திலும், பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சூரியன் முயற்சி ஸ்தான அதிபதி புதனுடன்பூர்வ புண்ணிய ஸ்தானத்திலும் என கிரக நிலைகள் மேஷத்திற்கு மிகச் சாதகமாக உள்ளது.
இதனால் உங்கள் புதிய முயற்சிகள் அனைத்தும் செயலாக்கம் பெறும். மன பாரம் குறைந்து நிம்மதியும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். நல்ல பல கருத்துக்களைக் கேட்பதின் மூலமாக உங்களுக்கு ஞான தன்மைஅதிகரிக்கும். புதிய கொள்முதல் மூலமாக தொழிலில் அதிகமான வருவாய் பெருகும்.சொத்துக்கள் மீதான வாடகை வருமானம் அதிகரிக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கி மகிழ்வீர்கள். அழகிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டு.
உயர் அதிகாரிகளின் நட்பால் ஆதாயம் பெறுவீர்கள். நல்ல வேலையில் சேரும் யோகம் ஏற்படும். பணிபுரியும் பெண்கள் பதவி உயர்வுகளை எதிர்பார்க்கலாம். பல புண்ணியத் தலங்களுக்கு பயணம் செய்யும் வாய்ப்புக் கிட்டும். தினமும் கந்த சஷ்டி கவசம் படிக்கவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மேஷம்
இந்த வார ராசிப்பலன்
8.8.2022 முதல் 14.8.2022 வரை
சுக சவுகரியங்கள் அதிகரிக்கும் வாரம். ராசி அதிபதி செவ்வாய் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பல வழிகளிலும் பண வரவு உண்டாகும்.லாபத்தால் வசதிகள் பெருகும். சுபகாரிய நிகழ்வுகளால் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். உறவுகள் வருகையால் சந்தோஷமும், செலவும் பெருகும். பூமி வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும்.
தொழிலில் புதிய திட்டங்களைத் தீட்டி முன்னேற முயல்வீர்கள். தொழிலை விரிவாக்கம் செய்யும் சிந்தனைகள் அதிகரிக்கும். எந்தக் காரியத்தையும் திறம்படச் செய்யும்செயல்திறன் கூடும். உயர் பதவி கிடைக்கும். அதனால்பணி இலக்கை அடைவீர்கள்.புதிதாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல காலம் பிறக்கும்.பெண்களின் நற்குணங்கள் அனைவரின் பாராட்டையும் பெற்றுத் தரும்.
விதவிதமான பொன், பொருள், ஆபரணங்கள்கிடைக்கும். சிலருக்குப் புண்ணியத் திருத்தல யாத்திரைகள் செல்வதால் மகிழ்ச்சியும் மன அமைதியும் ஏற்படும். துக்கத்தால் தூக்கமின்றி தவித்தவர்களுக்கு நிம்மதியான தூக்கம் வரும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த மந்த நிலை மாறி படிப்பில் நாட்டம் அதிகரிக்கும். பார்வை இல்லாதவர்களுக்கு இயன்ற தானம் வழங்கவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மேஷம்
இந்த வார ராசிப்பலன்
1.8.2022 முதல் 7.8.2022 வரை
நல்ல வாய்ப்புகள் தேடி வரும் வாரம். சகாய ஸ்தான அதிபதி புதன் பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் இடத்தில் சஞ்சரிப்பதால் திறமைகளை வெளிப்படுத்தக் கூடிய நல்ல சந்தர்ப்பம் அமையும். மன சஞ்சலம் குறையும். குடும்பத்தில் மங்களகரமான சுப நிகழ்வுகள் கைகூடும். பழைய சம்பள பாக்கிகள் தற்போது கிடைத்து குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். விரும்பிய இடத்திற்கு இடப்பெயர்ச்சி உண்டாகும்.
சிலர் தொழில் உத்தியோகத்திற்காக பூர்வீகத்தை விட்டு வெளியேறலாம். 9,12-ம் அதிபதி குரு வக்ரம் பெறுவதால் வீண் விரயங்களும் வைத்தியச் செலவும் குறையும். சிலருக்கு தந்தையுடன் சிறு மன பேதம் ஏற்படலாம். பூர்வீகச் சொத்து மற்றும் பாகப்பிரிவினை தொடர்பான முக்கிய ஆவணங்கள் எழுத ஏற்ற காலம்.
புதிய திட்டங்களில் ஏற்பட்ட தடைகள் தாமதங்கள் அகலும். வியாபாரிகள் புதிய வியாபார நுணுக்கங் களைப் புகுத்தி ஆதாயம் காண்பர். பணிபுரியும் பெண்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவால் பணியில் முன்னேற்றங்கள் ஏற்படும்.
6.8.2022 பகல் 12.062022 முதல் 8.8.2022 பகல் 2.37 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மனதில் எதிர்காலம் பற்றிய கற்பனை பயம் அதிகரிக்கும். சஷ்டி திதியில் முருகனுக்கு பால் அபிசேகம் செய்யவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மேஷம்
வார ராசி பலன்கள்
25.7.2022 முதல் 31.7.2022 வரை
முன்னேற்றங்கள் உண்டாகும் வாரம். ஐந்தாம் அதிபதி சூரியனுக்கு ராசி அதிபதி செவ்வாயின் நான்காம் பார்வைபதிவதால் இருண்டு கிடந்த வாழ்க்கையில் மெதுவாக வெளிச்சம் பரவும். எதிர்பாராத நல்லவை நடக்கும். தன அதிபதி சுக்ரன் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் கமிஷன் தொழில், ஆன்லைன் வர்த்தகம், தகவல் தொடர்பு துறை, ஊடகங்களில் பணிபுரிபவர்களுக்கு வருமானம் இரட்டிப்பாகும்.
வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சரளமாக இருக்கும். பொருளாதார நெருக்கடி குறையும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகள்தேடிவரும்.சகோதரர் வீடு மாற்றம், வேலை மாற்றம் செய்ய வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். பெண்கள்வீட்டிற்கு தேவையான மங்கலப் பொருட்கள் வாங்குவார்கள்.திருமணப் பேச்சுவார்த்தை சுமூகமாக முடியும்.
விவசாயிகளுக்குத் தடைபட்ட குத்தகை வருமானம் வந்து சேரும்.குடியிருப்புகளுக்கு புதிய வாடகைதாரர் வரலாம். சொந்த வீட்டுக் கனவைபிள்ளைகள் நனவாக்குவார்கள். பிரதோசத்தன்று சிவனுக்கு சந்தனஅபிசேகம் செய்யவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மேஷம்
இந்த வார ராசிப்பலன்
18-7-2022 முதல் 24-7-2022 வரை
நீண்ட காலமாக தடைப்பட்ட பணிகள் துரிதமாக நடக்கும் வாரம்.ராசி அதிபதி செவ்வாயின் 4-ம் பார்வை பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சூரியனின் மேல் பதிவதால் பூர்வீகத்தில் வீடு, மனை வாங்கும் விருப்பங்கள் நிறைவேறும். தொழில் ரீதியாக நீங்கள் எடுக்கும் நடவடிக்கைகள் சிறப்பாக இருக்கும்.
கல்லூரிஇறுதியாண்டு மாணவர்கள் சிலர் பெரிய நிறுவனத்தின் கேம்பஸ் இன்டர்வியூவில் வெற்றி பெறுவார்கள். அன்றாட பணியில் உள்ள சில சிக்கலான வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். கூட்டு குடும்பத்தின் சில சிறிய விஷயங்களால் வாழ்க்கை துணையுடன் விரிசல் ஏற்படலாம்.
வார்த்தைகளில் நிதானத்தை கடைபிடித்தால் பெரிய பாதிப்பு ஏற்படாது.விரயாதி பதி குருவால்செலவுகள் அதிகரித்தாலும் சில புத்திசாலித்தனமான செயல்களால் செலவை கட்டுப்படுத்துவீர்கள். சுப மங்கல நிகழ்வுகள்ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன. ராசியில் செவ்வாய் ராகு சேர்க்கை இருப்பதால் சில நேரங்களில் பலவீனமாகவும் சோர்வாக உணர்வீர்கள். கோவில் திருப்பணி நடக்கும் ஆலயங்களுக்கு செங்கல் தானம் தரவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மேஷம்
இந்த வார ராசிப்பலன்
11.7.2022 முதல் 17.7.2022 வரை
எதிர்பாராத நல்ல செய்திகள் வந்து உற்சாகப்படுத்தும் வாரம். தொழில் ரீதியான லட்சியங்களை அடைவதற்கான சிந்தனையில் ஈடுபடுவீர்கள். 10, 11-ம் அதிபதி சனி வக்ர கதியில் மீண்டும் 10-ம் இடமான மகரத்திற்குள் நுழைவதால் தொழில் ஆர்வம் மிகும். பணவரவு நன்றாக இருந்தாலும் சிறு விரயங்களும் ஏற்படும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் சுமூகமாக இருக்கும்.
சனி வக்ர கதியில் இருப்பதால் அதிக முதலீட்டில் தொழிலை அபிவிருத்தி செய்வதை தவிர்க்கவும். சிலரின் வாழ்க்கைத் துணை விரும்பத்தகாத இடமாற்றங் களை சந்திக்க நேரிடும். உத்தியோகஸ் தர்களுக்கு வேலைப்பளு கூடும்.குழந்தைகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும். அரசியல்வாதிகளின் அந்தஸ்து உயரும். மேலிடப் பார்வை உங்கள் மீது விழுந்துபெரும் புகழ்அடைவீர்கள்.
பெண்களுக்கு தேவையற்ற மனக்கவலையால் வேலைகளில் மனம் லயிக்காது. 12.7.2022 காலை 5.15 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் தீய சிந்தனைகள், டென்ஷன் ஏற்படும். தேவையில்லாத பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. செவ்வாய் கிழமை அங்காரகனை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406






