என் மலர்
மேஷம் - வார பலன்கள்
மேஷம்
வார ராசி பலன்கள்
4-7-2022 முதல் 10-7-2022 வரை
தொழில் வளம் சிறக்கும் வாரம். தன ஸ்தானத்தில் சுக்ரன் ஆட்சி பலம் பெற்று இருப்பதால் வாக்கு சாதுர்யத்தால் தொழிலில் நல்ல வருமானம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலக டென்ஷன் குறையும்.
குடும்பத்திலும் நட்பு வட்டாரத்திலும் சுமூகமான நிலை நீடிக்கும். முயற்சிகளில் முன்னேற்றமும் வெற்றியும் உண்டாகும். ராசியில் செவ்வாய் ராகு சேர்க்கை இருப்பதால் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. புதிய சொத்து வாங்கும் போது முக்கிய ஆவணங்களை சரிபார்க்கவும். சிறு கடன் சுமை இருந்தாலும் கடன்காரர்களின் கெடுபிடி குறையும்.
வாழ்க்கைத் துணையால் நல்ல மாற்றமும் ஏற்றமும் உண்டு. கோட்சார ராகு, கேதுவின் பாதிப்பு குறைய திருமணத் தடைவிலக துர்க்கை அல்லது காளியை வழிபடவும். தம்பதிகளிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடு மாறி புரிதல் உண்டாகும். புதிய வாகனம் வாங்கி மகிழ்வீர்கள். கனவாக இருந்த சொந்த வீட்டு ஆசை நனவாகும்.
10.7.2022 அதிகாலை 4.20 மணிக்குள் சந்திராஷ்டமம் ஆரம்பமாக இருப்பதால் வாழ்க்கையை பாதிக்கும் தடாலடியான முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். தினமும் ஸ்ரீ தன்வந்திரி பகவானை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மேஷம்
வார ராசி பலன்கள்
27-6-2022 முதல் 03-7-2022 வரை
விபரீத ராஜயோகத்தில் மகிழும் வாரம். ராசி அதிபதி செவ்வாய் ராசியில் ஆட்சி பலம் பெறும் அற்புதமான வாரம். அவரே அஷ்டமாதிபதி என்பதால்மேஷ ராசியினருக்கு இது பொற்காலமாகும். அத்துடன் தன வாக்கு, குடும்ப ஸ்தான அதிபதி சுக்ரன் தன ஸ்தானத்தில் ஆட்சி.
10, 11-ம் அதிபதி சனி ஆட்சி என பெரும்பான்மை யான கிரகங்கள் சாதகமாக இருப்பதால் தடை, தாமதங்கள் விலகி நினைத்ததை நிறைவேற்றக் கூடிய சந்தர்ப்பம் கூடிவரும். கடந்த சில வாரங்க ளாகஏற்பட்ட பொருள் விரயம், வைத்திய செலவு, காரியத் தடை முற்றிலும் நீங்கும்.திருமண முயற்சிகள் சித்திக்கும். கடன் தொல்லைகள் அகலும்.
பிரிந்து வாழ்ந்த குடும்ப உறவுகள் ஒற்றுமையுடன் இணைந்து வாழும் யோகம் உண்டாகும். சிலர் வாழ்க்கைத் துணையின் பெயரில் தொழில் துவங்கலாம். தொழில் வளர்ச்சி, உத்தியோக உயர்வு, வாழ்க்கை முன்னேற்றம் போன்ற அனைத்தும் சீராக அமையும். பெண்கள் திறமையான பேச்சினால் குடும்பத்தை கட்டுக் கோப்பாக வழி நடத்துவார்கள். அரச மரத்து எறும்பு களுக்கு சர்க்கரை இடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மேஷம்
வார ராசி பலன்கள்
இந்த வாரம் எப்படி 20-6-2022 முதல் 26-6-2022 வரை
கவலைகள் அகலும் வாரம்.தனம், வாக்கு, குடும்ப, களத்திரஸ்தான அதிபதி சுக்ரன் ஆட்சி பலம் பெறுவதால் சாமர்த்தியமான இனிமையான பேச்சால் அனைவரையும் விரும்பச் செய்வீர்கள். பல வருட குடும்ப சிக்கல்கள் மறைந்து மகிழ்ச்சி ஏற்படும்.
சிக்கலான சில காரியங்கள் கூடநல்லவிதமாக முடியும். சமுதாயத்தில் பிறரை ஆச்சரியப்பட வைக்கும் உயர்வான நிலையை எட்டும் வாய்ப்பு உள்ளது. உத்தியோகத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைப்பதோடு உழைப்பிற்கேற்ற அங்கீகாரமும் கிடைக்கும். வாக்கு சாதுர்யத்தால் தொழிலில் சாதனை படைப்பீர்கள்.தொடர் பண வரவு இருந்து கொண்டே இருக்கும்.
வளமான நிம்மதியான எதிர் காலத்திற்கான அறிகுறிகள் தென்படும். மனக்குழப்பம் நீங்கி நிம்மதியும் தெளிவும் பிறக்கும். புதிய மனையில் வீடு கட்டும்முயற்சிகளை மேற்கொள்வீர்கள். பெண்களுக்கு மங்களகரமான மகிழ்சியான இல்லறம் அமையும்.உடல்நலம் சீராகி உற்சாகமாக செயல்படுவீர்கள். பிரதோஷத்தன்று பிரதோஷ வேளையில் லட்சுமி நரசிம்மருக்கு சிவப்பு அரளி மாலை சாற்றி வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மேஷம்
வார ராசி பலன்கள்
இந்த வாரம் எப்படி 13-6-2022 முதல் 19-6-2022 வரை
தடைகள் விலகும் வாரம்.தன அதிபதி சுக்ரன் ராசியில் ராகுவுடன் சேர்வதால் பணத்தை எவ்வாறு சம்பாதித்து சேமிப்பது என்ற கலையை கற்றுக் கொள்வீர்கள். வைத்திய செலவு குறையும். குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள் மீண்டும் இணைவார்கள். இல்லத்தில் நிலவிய கூச்சல் குழப்பம் விலகி நன்மைகள் உண்டாகும்.
அரசு பணியாளர்களுக்கு விரும்பிய இடப்பெயர்ச்சியால் அதிக நன்மைகள் நடக்க வாய்ப்புள்ளது.தொழில், வியாபாரத்தில்தடை, தாமதங்கள் விலகி நன்மைகள் அதிகரிக்கும். ராசி அதிபதி செவ்வாய் 12ல்மறைந்து விரயங்களைத் தந்தாலும் அது வீடு, வாகனம், கல்விச் செலவு எனசுப விரயமாக மாறும்.
வெளிநாட்டு,உத்தியோக, வேலை முயற்சியில் நல்லது நடக்கும். உடன் பிறப்புகளால் சகாயமான பலன்கள் ஏற்படும். 12.6.2022 மாலை 6.33 முதல் 14.6.2022 மாலை 6.32 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பேச்சை குறைத்து அமைதி காப்பது நல்லது. பண உதவி செய்வது, பண உதவி பெறுவது ஆகியவற்றை தவிர்க்கவும். பொறுப்புடன் நடந்து கொண்டால் இந்த வாரம் சிரமங்களைத் தவிர்க்கலாம்
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மேஷம்
வார ராசி பலன்கள்
6.6.2022 முதல் 12.6.2022 வரை
திட்டங்கள், எண்ணங்கள் செயலாக்கம் பெறும். எதற்கும் முடிவு காண முடியாமல் தவித்த நிலை மறையும்.தன அதிபதி சுக்ரன் ராசியில் ராகுவுடன் கூடுவதால் தன வரவில் தன் நிறைவு உண்டாகும். வெளிநாட்டு தொடர்பு அல்லது வேற்று மதத்தினர் ஆதரவால் புதிய தொழில் வாய்ப்பு கிட்டும். 5-ம் அதிபதி சூரியன் தன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பங்குச் சந்தை ஆதாயம் உண்டு. சிலர் பங்கு பத்திரத்தில் அதிக முதலீடு செய்யலாம். குடும்பத்தில் நிம்மதி நீடிக்கும். செய்யும் தொழிலில் லாபம், முன்னேற்றம் உண்டு.
சிலர் வியாபார முதலீட்டை அதிகரிக்க கடன் தொகைக்கு விண்ணப்பிக்கலாம். பெண்களுக்கு மாமியார், மாமனாரின் மனமார்ந்த பாராட்டுகள் கிடைக்கும். திருமணம் பற்றிய நல்ல முடிவுகள் உங்கள் எண்ணம் போல் நிறைவேறும். சிலரின் இரண்டாம் திருமண முயற்சி பலன் தரும்.
லாப அதிபதி சனி வக்ரம் பெற்றதால் வழக்குகள் விசாரணை தள்ளிப்போகும். மூத்த சகோதர சகோதரிகள் முன்னுக்கு பின் முரணாக பேசி குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தலாம். அரசு அதிகாரிகளுக்கு பதவி உயர்வு நிச்சயம். பிரதோஷத்தன்று சிவனுக்கு தேன் அபிசேகம் செய்து வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மேஷம்
வார ராசி பலன்கள்
30.5.22 முதல் 5.6.22 வரை
பொருளாதார மேன்மை உண்டாகும் வாரம். ராசி அதிபதி செவ்வாய் 12-ல் மறைந்தாலும் லாப ஸ்தான அதிபதி சுக்ரன் ராசியில் சஞ்சரிப்பதால் பொருளாதாரத்தில் தன் நிறைவு உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் நிலவும். இதுவரை கடனை திரும்பத் தராத உறவினர்கள் இந்த வாரம் கடனை செலுத்துவார்கள். 2,7ம் அதிபதி சுக்ரன் ராசியில் ராகுவுடன் இணைவதால் வாழ்க்தைத் துணை வழிகளில் வருமானமும் திரண்ட சொத்தும் கிடைக்கும்.
பங்குச் சந்தை ஆதாயம் உண்டு. நண்பர்கள், உறவினர்களின், சந்திப்பால் உற்சாகம் அதிகரிக்கும் சிலர் உயர் ஆராய்ச்சிக் கல்விக்காக செல்லலாம். சிலரின் மறுமண முயற்சி கை கொடுக்கும். பெண்களுக்கு விலை உயர்ந்த ஆபரண, ஆடை என சுப விரயம் உண்டாகும். வீடு, மனை வாகனம் வாங்குவதில் மாமியாரின் பங்களிப்பு இருக்கும்.
முதலாளிகளுக்கு வேலையாட்களால் அனுகூலம் உண்டு. 6-ம் அதிபதி புதன் தன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் முக்கிய பணிகளுக்கு கடன் தொகைக்கு முயற்சிக்கலாம். செவ்வாய்க்கிழமை ஸ்ரீ வீர லட்சுமியை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மேஷம்
வார ராசிப்பலன் 23.5.22 - 29.5.22
ராசி அதிபதி செவ்வாய் விரய ஸ்தானத்தில் விரயாதிபதி குருவுடன் சேர்க்கை பெற்றதால் சுப விரயங்கள் அதிகரிக்கும். சிலர் வெளிநாடு, வெளி மாநிலத்திற்கு தொழில் ரீதியான பயணம் அல்லது சுற்றுலா சென்று வரலாம்.
சிலருக்கு இடது கண்ணில் அறுவை சிகிச்சை செய்ய நேரும். 5-ம் அதிபதி சூரியன் தன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் படித்து முடித்த மகன், மகளுக்கு நல்ல வேலை கிடைக்கும். சிலர் பிள்ளைகளின் உயர்கல்விக்காக கடன் பெறலாம். கர்ப்பிணிகளுக்கு ஆண் குழந்தை பிறக்கும். 2,7-ம் அதிபதி சுக்ரன் ராசியில் ராகுவுடன் நிற்பதால் தம்பதிகள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். திருமண முயற்சிகள் சித்திக்கும்.
வியாபாரிகள் புதிய முதலீட்டைத் தவிர்க்க வும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு சற்று மிகைப்படுத்தலாக இருக்கும். சகோதர, சகோதரிகளிடம் நிலவிய பகைமை மறையும். இந்த வாரம் முழுவதும் விறுவிறுப்பான நல்ல மாற்றங்கள் நிகழ்ந்து உங்களை மகிழ்விக்கும். அமாவாசையன்று பசுவிற்கு அகத்திக்கீரை அளித்து வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மேஷம்
வார ராசிப்பலன் 16.5.2022 - 22.5.2022 வரை
பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சூரியன் தன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வியாபாரத்தில் நிலவிய மந்தநிலை நீங்கி நல்ல முன்னேற்றமான பலன்கள் ஏற்படும். வியாபாரிகளுக்கு அரசின் மானியம் கிடைக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். 6-ம் அதிபதி புதன் வக்ரம் பெற்றதால் கொடுத்த கடன்கள் வசூலாகும். மருத்துவச் செலவுகள் குறையும்.
தாய்வழிச் சொத்துப் பிரச்சினையில் எதிர்பாராத திருப்புமுனை உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் சிறப்பாக செயல்படுவார்கள். 7-ம் அதிபதி சுக்ரன் உச்சம் பெற்றதால் ஆடம்பர பொருட்களை பரிசளித்து வாழ்க்கைத் துணையை மகிழ்ச்சியடையச் செய்வீர்கள். 7-ல் கேது இருப்பதால்வா டிக்கையாளர்களின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும்.
16.5.2022 காலை 7.53 முதல் 18.5.2022 காலை 8.09 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் திடீர் செலவுகள் ஏற்படலாம். தினமும் கந்த சஷ்டி கவசம் கேட்கவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மேஷம்
வார ராசிப்பலன்
இந்த வாரம் எப்படி 16-5-2022 முதல் 22-5-2022 வரை
பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சூரியன் தன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வியாபாரத்தில் நிலவிய மந்தநிலை நீங்கி நல்ல முன்னேற்றமான பலன்கள் ஏற்படும். வியாபாரிகளுக்கு அரசின் மானியம் கிடைக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். 6-ம் அதிபதி புதன் வக்ரம் பெற்றதால் கொடுத்த கடன்கள் வசூலாகும். மருத்துவச் செலவுகள் குறையும்.
தாய்வழிச் சொத்துப் பிரச்சினையில் எதிர்பாராத திருப்புமுனை உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் சிறப்பாக செயல்படுவார்கள். 7-ம் அதிபதி சுக்ரன் உச்சம் பெற்றதால் ஆடம்பர பொருட்களை பரிசளித்து வாழ்க்கைத் துணையை மகிழ்ச்சியடையச் செய்வீர்கள். 7-ல் கேது இருப்பதால்வா டிக்கையாளர்களின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும்.
16.5.2022 காலை 7.53 முதல் 18.5.2022 காலை 8.09 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் திடீர் செலவுகள் ஏற்படலாம். தினமும் கந்த சஷ்டி கவசம் கேட்கவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மேஷம்
இந்த வாரம் எப்படி 16-5-2022 முதல் 22-5-2022 வரை
பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சூரியன் தன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வியாபாரத்தில் நிலவிய மந்தநிலை நீங்கி நல்ல முன்னேற்றமான பலன்கள் ஏற்படும். வியாபாரிகளுக்கு அரசின் மானியம் கிடைக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். 6-ம் அதிபதி புதன் வக்ரம் பெற்றதால் கொடுத்த கடன்கள் வசூலாகும். மருத்துவச் செலவுகள் குறையும்.
தாய்வழிச் சொத்துப் பிரச்சினையில் எதிர்பாராத திருப்புமுனை உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் சிறப்பாக செயல்படுவார்கள். 7-ம் அதிபதி சுக்ரன் உச்சம் பெற்றதால் ஆடம்பர பொருட்களை பரிசளித்து வாழ்க்கைத் துணையை மகிழ்ச்சியடையச் செய்வீர்கள். 7-ல் கேது இருப்பதால்வா டிக்கையாளர்களின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும்.
16.5.2022 காலை 7.53 முதல் 18.5.2022 காலை 8.09 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் திடீர் செலவுகள் ஏற்படலாம். தினமும் கந்த சஷ்டி கவசம் கேட்கவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மேஷம்
மார்ச் 26 முதல் மே 2 வரை
வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் சம்பத் இன்று தொரப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
வேலூர்:
வேலூர் தொரப்பாடி பள்ளியில் படிக்கும் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு நேற்று முன்தினம் மாலை வழக்கமான நேரத்தை விட ஒருமணி நேரம் முன்பாக பள்ளி விடப்பட்டது. ஆனால் 12-ம் வகுப்பு மாணவர்கள் சிலர் வகுப்பறையில் அமர்ந்து அட்டகாசத்தில் ஈடுபட்டனர்.
அவர்களை வீட்டுக்கு செல்லும்படி ஆசிரியர்கள் அறிவுறுத்தி உள்ளனர். ஆனால் மாணவர்கள் ஆசிரியர்களின் அறிவுறுத்தலையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து அட்டகாசம் செய்தனர்.
அதன் உச்சகட்டமாக வகுப்பறையில் உள்ள இரும்பு மேஜை, டெஸ்க், பெஞ்சுகளை தரையில் போட்டும், காலால் எட்டி உடைத்தனர். இதைக்கண்ட ஆசிரியர்கள் பாகாயம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சிறிது நேரத்தில் போலீசார் பள்ளி வளாகத்துக்குள் வந்தனர்.
இதைக்கண்ட பிளஸ்-2 மாணவர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். பிளஸ்-2 மாணவர்கள் டெஸ்க், பெஞ்சுகளை உடைக்கும் காட்சிகள் வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் சம்பத் இன்று தொரப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
இந்நிலையில் 10 மாணவர்களை மே 4ந்தேதி வரை இடைநீக்கம் செய்து மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும், மாணவர்கள் ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும் மாணவர்களை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.
மேஷம்
மார்ச் 28 முதல் ஏப்ரல் 6-ந்தேதி வரை
திருப்பங்கள் நிறைந்த வாரம். ராசி அதிபதி செவ்வாய் உச்சம் பெற்று சனியுடன் இணைந்து தன் வீட்டைத் தானே பார்ப்பதால் சொத்து வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான முக்கிய முடிவு களை எடுக்க நல்ல நேரம். 5-ம் அதிபதி சூரியன் 12-ல் மறைவு பெற்றதால் தொழில் மற்றும் உத்தியோகத்திற்காக பூர்வீகத்தை விட்டு வெளியேறலாம். சிலர் வெளிநாட்டு வேலைக்குச் செல்லலாம்.
வேலை இழந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக் கும். தொழிலில் போட்டி, பொறாமை மிகுதியாகும். பணவரவுகள் திருப்தியாக இருக்கும். சுமாரான நிலையில் இருப்பவர்கள் கூட படிப்படியாக உயர்ந்து நல்ல நிலையை அடையக் கூடிய சந்தர்ப்பம், சூழ்நிலை அமையும். பெயர், புகழ் அதிகரிக்கும். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். விலகிச் சென்ற குடும்ப உறவுகள் தவறுகளை உணர்ந்து மீண்டும் உங்களிடம் வருவார்கள்.






