என் மலர்
மேஷம் - வார பலன்கள்
மேஷம்
வார ராசிபலன் 15.6.2025 முதல் 21.6.2025 வரை
15.6.2025 முதல் 21.6.2025 வரை
முன்னேற்றமான வாரம். ராசி அதிபதி செவ்வாய் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கேதுவுடன் சேர்க்கை பெறுகிறார். தான, தர்மம் செய்வதில் ஆர்வம் அதிகரிக்கும். பிரமிக்கத்தக்க வகையில் வாழ்வாதாரம் உயரும். நேர்மறை எண்ணங்களால் மனதில் நிம்மதி கூடும். பெயரும் புகழும் அதிகமாகும். நேர்மையும், கடுமையான உழைப்பும் உங்களை உயர்த்தி விடும்.
வீடு, மனை வாங்குவது தொடர்பான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு பயனுள்ளதாக இருக்கும். பிள்ளைகளால் பெருமை சேரும். ஆரோக்கியம் சிறக்கும். தொழில் ரீதியாக அடிக்கடி அலைச்சல் மிகுந்த பயணத்தை சந்திக்க நேரும். பெண்கள் உடல் நலனை பராமரிக்க தியானம், யோகா மற்றும் இயற்கை உணவில் ஆர்வம் செலுத்துவீர்கள்.
தங்கம், வெள்ளி பொருட்களின் சேர்க்கை அதிகரிக்கும். தந்தையால் நன்மைகள் கிடைக்கும். சிலர் கற்பனையில் எதையாவது நினைத்து மனசஞ்சலத்தை அதிகரிப்பார்கள். பங்குச் சந்தை காலை வாரலாம். காதல் விசயங்களால் மன உளைச்சல் அதிகரிக்கும். தினமும் ஸ்ரீ ருத்ரம் கேட்கவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மேஷம்
வார ராசிபலன் 08.06.2025 முதல் 14.06.2025 வரை
08.06.2025 முதல் 14.06.2025 வரை
மகிழ்ச்சியான வாரம். ராசியில் தன அதிபதி சுக்ரன். சிறிய செயலுக்கு கடினமாக முயற்சி செய்த நிலை மாறும். சுறுசுறுப்பாக உற்சாகமாக செயல்படுவீர்கள். எளிய உழைப்பில் பெரிய லாபம் கிடைக்கும். கணவரால் மனைவிக்கும், மனைவியால் கணவருக்கும் எதிர்பாராத அதிர்ஷ்டமான யோகங்கள் உண்டாகலாம்.
சிலருக்கு தந்தையின் வாரிசு வேலை கிடைக்கும். வியாபாரிகள் புத்தி சாதுர்யத்துடன் புதிய முதலீடு செய்வது அவசியம். உங்களை புண்படுத்திய சகோதரி மன்னிப்பு கேட்பார். திருமண முயற்சி சாதகமாகும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். புதிய வீடு கட்டுதல் கட்டிய வீடு வாங்குதல் பழைய வாகனங்களை புதுப்பித்தல் புதிய வாகனங்களை வாங்குதல் போன்ற மகிழ்ச்சியான சம்பவங்கள் நடக்கும்.
9.6.2025 அன்று காலை 8.50 மணி முதல் 11.6.2025 அன்று காலை 8.30 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் பொறுமையுடன் செயல்பட வேண்டும். கொள்கை பிடிப்பை தளர்த்திக் கொள்வது நல்லது. வேலை பார்க்கும் இடத்தில் சில மனக்கசப்பு ஏற்படலாம். நவகிரக செவ்வாய் பகவானை வணங்கவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மேஷம்
வார ராசிபலன் 01.06.2025 முதல் 07.06.2025 வரை
01.06.2025 முதல் 07.06.2025 வரை
திருமணத் தடை நீங்கும் வாரம். 2, 7-ம் அதிபதி சுக்கிரன் ராசியில் சஞ்சாரம் செய்வதால் தன வரவில் தன்னிறைவு உண்டு. நிலுவையில் உள்ள பாக்கித் தொகை வசூலாகும். கடன் சற்று அடையும். புதிய கூட்டாளிகள் கிடைப்பார்கள். தொழில், உத்தியோகத்திற்காக வெளியூர், வெளிநாடு செல்ல வேண்டும் என்ற எண்ணம் செயல் வடிவம் பெறும்.
சக ஊழியர்கள் மூலம் புதிய வாய்ப்புகள் தேடி வரும். பெண்களுக்கு கணவரின் புரிதல் மகிழ்ச்சியை அதிகரிக்கும். குடும்பப் பிரச்சினைகளை தம்பதிகள் தங்களுக்குள் பேசி சீராக்கு வார்கள். குடும்பத்தில் ஆனந்தமும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும். புத்திர தோஷத்தில் நிலவிய தடை தாமதங்கள் அகலும். தன வரவில் தன்னிறைவு உண்டாகும். வேலைக்காக தனித்தனி ஊரில் வசித்த தம்பதிகள் சேர்ந்து வாழ்வார்கள். திருமணம் பற்றிய நல்ல முடிவுகள் எடுப்பீர்கள்.
எதிர்காலம் பற்றிய கனவுகள் நினைவாகும். சிலரின் இரண்டாம் திருமண முயற்சி பலன் தரும். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு உள்ளது. தடைபட்ட வீடு கட்டும் பணி துரிதமாகும். ஆரோக்கியம் சார்ந்த இன்னல்கள் அகலும். ஸ்ரீ சவுபாக்கிய லட்சுமியை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மேஷம்
வார ராசிபலன் 25.05.2025 முதல் 31.05.2025 வரை
25.05.2025 முதல் 31.05.2025 வரை
பொருளாதார மேன்மை உண்டாகும் வாரம். தனம், வாக்கு குடும்ப ஸ்தான அதிபதி சுக்ரன் ராசிக்குள் நுழைகிறார். ராசிக்கு 11-ம்மிடமான லாபஸ்தானம் முதல் ராசிக்கு 5-ம்மிடம் வரை கிரகங்கள் வரிசையாக நிற்பது கிரக மாலிகா யோகம். பொருளாதாரத்தில் தன் நிறைவு உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் நிலவும்.
இதுவரை கடனை திரும்பத் தராத உறவினர்கள் இந்த வாரம் கடனை செலுத்து வார்கள். வாழ்க்தைத் துணை வழிகளில் வருமானமும் திரண்ட சொத்தும் கிடைக்கும். பங்குச் சந்தை ஆதாயம் உண்டு. பூர்வீகச் சொத்து தொடர்பான பேச்சு வார்த்தைகளை, முக்கிய முடிவுகளை இந்த வாரத்திற்குள் முடிப்பது நல்லது. தொழில், உத்தியோகம் காரணமாக சிலரின் தந்தை குடும்பத்தை பிரிந்து வெளியூர் செல்லலாம்.
பெண்களுக்கு விலை உயர்ந்த ஆபரண, ஆடை என சுப விரயம் உண்டாகும். வீடு, மனை வாகனம் வாங்குவதில் மாமியாரின் பங்களிப்பு இருக்கும். சிந்தித்து நிதானமாக திட்டமிட்டால் எதிர்பார்த்த இலக்கை அடைய முடியும். புதிய நண்பர்களிடம் எச்சரிக்கையாக பழக வேண்டும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். அமாவாசையன்று சாம்பார் சாதம் தானம் வழங்கவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மேஷம்
வார ராசிபலன் 18.05.2025 முதல் 24.05.2025 வரை
18.05.2025 முதல் 24.05.2025 வரை
சிந்தித்து செயல்பட வேண்டிய காலம். சகாய ஸ்தானத்திற்கு குரு பகவானும் 5ம்மிடத்திற்கு கேதும், லாப ஸ்தானத்திற்குள் ராகுவும் செல்கிறார்கள். வார இறுதியில் ராசியை விட்டு புதன் செல்கிறார். தன ஸ்தானத்தில் பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சூரியன். பேச்சு திறமை மிளிரும். மனதில் ஆசை கடல் அலை போல் பெருகும். லவுகீக நாட்டம் அதிகரிக்கும். புதிய எண்ணங்கள் மற்றும் திட்டங்கள் தோன்றும்.
தொழில் முன்னேற்றம் மகிழ்ச்சியில் ஆழ்த்தும். தனிப்பட்ட வாழ்க்கையிலும் மனநிறைவு உண்டாகும்.
வருமானத்திற்கான சாத்தியக் கூறுகள் அதிகரிக்கும். ஓரிரு வாரங்கள் கொடுக்கல், வாங்கலில் நிதானம் தேவை. பதவி மாற்றம், இடமாற்றம், உத்தியோக மாற்றம் வரலாம். காது, மூக்கு, தொண்டை தொடர்பான ஆரோக்கிய கேடுகளை அறுவை சிகிச்சையால் சரி செய்ய உகந்த நேரம்.
தூர தேசங்களுக்கு ஆன்மீகச் சுற்றுலா சென்று வரும் வாய்ப்பு ஏற்படும். கணவன், மனைவி உறவில் இணக்கமும், அன்பும் இருக்கும். நிறைய அலைச்சலும், விரயச் செலவும் உண்டாகும். உலக வாழ்வில் பற்றற்ற நிலையை அடையச் செய்யும். அம்பிகை வழிபாடு சிறப்பைத் தரும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மேஷம்
வார ராசிபலன் 11.5.2025 முதல் 17.5.2025 வரை
11.5.2025 முதல் 17.5.2025 வரை
அமைதியான வாரம். இந்த வாரத்தில் சூரியன் தன ஸ்தானத்திற்கும் குரு பகவான் உப ஜெய ஸ்தானமான 3ம் மிடத்திற்கும் செல்கிறார்கள். வெற்றி மீது வெற்றி வந்து உங்களை சேரும் அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் குரு பகவானை சேரும். முக்கிய கிரக அமைப்புகள் மேஷ ராசிக்கு மிக மிக சாதகமாக உள்ளது.
எடுக்கப்பட்ட தொழில், உத்தியோக முயற்சிக்கான முழு பலனும் அங்கீகாரமும், வெற்றியும் உண்டு. சிலருக்கு தொழில் மாற்ற சிந்தனை அதிகரிக்கும். மனதை மகிழ்விக்கும் பதவி உயர்வு, பாராட்டு, இடப்பெயர்ச்சியும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. சிலர் தவணை முறையில் புதிய வாகனம் வாங்கலாம். திருமணத்திற்கு நல்ல வரன் தேடிவரும்.
பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். சாமர்த்தியமாகப் பேசி முக்கிய காரியங்களை சாதிப்பீர்கள். கணவனால் மனைவிக்கும் மனைவியால் கணவனுக்கும் நிம்மதி கிடைக்கும். 13.5.2025 அன்று அதிகாலை 2.27 மணி முதல் 15.5.2025 அன்று மதியம் 2.07 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளது. எனவே அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பதுடன் யாரையும் நம்பக்கூடாது. சித்ரா பவுர்ணமி அன்று தண்ணீர் தானம் வழங்கவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மேஷம்
வார ராசிபலன் 4.5.2025 முதல் 10.5.2025 வரை
4.5.2025 முதல் 10.5.2025 வரை
நிதானமாக செயல்பட வேண்டிய வாரம். ராசியில் 5ம் அதிபதி சூரியனுடன் 3,6 ம் அதிபதி புதன் சேர்க்கை. புத ஆதித்ய யோகம். உயர் கல்விக்கு நல்ல கல்லூரியில் விரும்பிய பாடத்திட்டத்தில் படிக்க முடியும். பள்ளி விடுமுறைக்கு பூர்வீகம் சென்று வரலாம். குடும்ப சுப விசேஷங்கள் மற்றும் ஊர் பண்டிகைகளில் கலந்து மகிழ்வீர்கள். கவுரவப் பதவிகள் கிடைக்கும். வேலையில் இடமாற்றம் வரலாம். அரசு உத்தியோக முயற்சி பலன் தரும்.
சிலர் பூர்வீகத்தை விட்டு வெளியேறலாம். பூர்வீகச் சொத்து விற்பனையில் நிலவிய சர்ச்சைகள் அகலும். பரம்பரை நோய்க்காக வைத்தியம் செய்ய நேரும். பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக கடன் பெற நேரும். காதல் மோதலில் முடியும். அதிர்ஷ்டம் சார்ந்த விஷயங்களான ரேஸ், பங்குச்சந்தை, லாட்டரி கடனை உற்பத்தி செய்யும். குல, இஷ்ட தெய்வத்திற்கு சிலர் புதிய பிரார்த்தனைகள் வைப்பார்கள். புதிய முயற்சிகளால் அதிக அலைச்சல் கடன் உருவாகலாம். சரியான நேரத்திற்கு உண்ண, உறங்க முடியாது. ஜாமீன் சார்ந்த விசயங்கள், சங்கடங்கள் மற்றும் தடுமாற்றம் வரலாம். காவல் தெய்வங்களை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மேஷம்
வார ராசிபலன் 27.4.2025 முதல் 03.5.2025 வரை
27.4.2025 முதல் 03.5.2025 வரை
புதிய வாய்ப்புகள் தேடி வரும் வாரம். ராசியில் உச்ச சூரியன் இருப்பதால் புதியதாக அரசியல் ஆர்வம் அதிகரிக்கும். சிலருக்கு அரசுத் துறை அல்லது அறநிலையத் துறை சார்ந்த பொறுப்புகள், அரசாங்க வேலை, கவுரவப் பதவிகள் கிடைக்கும். தங்கம் விலை உயர்வை பொருட்படுத்தாமல் தங்கத்தில் முதலீடு செய்வீர்கள்.
புதிய தொழில் ஒப்பந்தங்கள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வால் மனதில் மகிழ்ச்சி பொங்கும். உடன் பிறப்புகளால் ஏற்பட்ட மனக் கசப்பு சுமூகமாகும். ஆரோக்கிய குறைபாடு அகலும். சிலருக்கு வாழ்க்கை மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய இடப் பெயர்ச்சி உண்டாகும். குல, இஷ்ட, தெய்வ அனுகிரகம் கிடைக்கும். பிரார்த்தனைகள், நிறைவேற்ற உகந்த காலம். பிள்ளைகளுக்கு சுப விசேஷங்கள் செய்து மகிழ்வீர்கள்.
தேவைக்கு பணம் கிடைக்கும். பெண்களுக்கு ஆடம்பர பொருட்களில் ஆர்வம் மற்றும் சேர்க்கை அதிகரிக்கும். பிள்ளைகளின் எதிர்காலத் தேவைக்காக திட்டமிட்டு செயல்படுவீர்கள். புத்திர பாக்கியம் உண்டாகும். காதல் திருமணம் நடக்கும். தினமும் துக்க நிவாரண அஷ்டகம் படிக்கவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மேஷம்
வார ராசிபலன் 20.4.2025 முதல் 26.4.2025 வரை
20.4.2025 முதல் 26.4.2025 வரை
எண்ணங்கள் பூர்த்தியாகும் வாரம். ராசியில் உச்சம் பெற்ற பூர்வ புண்ணிய அதிபதி சூரியன். பூர்வ புண்ணிய ஸ்தானம் பலம் பெறுகிறது ஆன்ம பலம் பெருகும். சிலருக்கு அரசு வேலை கிடைக்கும். குல தெய்வ இஷ்ட தெய்வ பிரார்த்தனைகள் நிறைவேறும்.
குழந்தைப்பேறுக்கான வைத்தியம் பலன் தந்து புத்திர பாக்கியம் கிடைக்கும். சிந்தனைகள், எண்ணங்களில் வேகம் அதிகரிக்கும். தொழில் ஞானம், தந்திரம் மிகுதியாகும். வியாபாரத்தில் வீண் செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். காதல் திருமணத்திற்கு பெற்றோர்கள் சம்மதிப்பார்கள்.
சரளமான பணப்புழக்கம் இருக்கும். நிறைவேறாத அனைத்து ஆசைகளும் நிறைவேறும். எதிலும் முழு முயற்சியுடன் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். சிலர் அதிர்ஷ்டத்தை துரத்தி ஏமாறவும் வாய்ப்பு உள்ளது. பெண்களுக்கு பிள்ளைகளால் பெருமையும், நிம்மதியும் உண்டாகும். கருத்து வேறுபாட்டால் விலகி சென்ற நண்பர்கள் மீண்டும் நட்பு பாராட்டுவார்கள். வீடு, வாகன யோகம் சித்திக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். நவகிரக குரு பகவானை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மேஷம்
வார ராசிபலன் 13.4.2025 முதல் 19.4.2025 வரை
13.4.2025 முதல் 19.4.2025 வரை
சாதகமான வாரம். தனஅதிபதி சுக்ரன் வக்ர நிவர்த்தி ஆவதால் பெரும் செல்வம் வரப்போகிறது. செல்வத்தைச் சேர்ப்பதிலும் உலக இன்பங்களை அனுபவிப்பதிலும் நாட்டம் மிகுதியாகும். திட்டமிட்டு செயல்படுவதில் வல்லவர்கள். பொறுமையாகவும், இளகிய மனம் உடையவர்களாகவும் இருப்பீர்கள். கற்பனை கலந்து பிறரை ஈர்க்கும் படி பேசுவதால் பொது ஜனத் தொடர்பு உண்டாகும். மனதின் வேகத்திற்கு ஏற்ப செயல்களில் விவேகம் இருக்கும். காரணமற்ற கற்பனைக் கவலைகள் அகலும். சமுதாய மதிப்பு நிறைந்த இடத்தில் சம்பந்தம் அமையும்.
சம்பந்தி நல்ல பொருளாதார வசதி மிகுந்தவராக இருப்பார்கள். விலை உயர்ந்த பட்டு, துணிகள் நகைகள், அழகு, ஆடம்பர பொருட்கள், வாசனை திரவியங்களில் பயன்படுத்தும் ஆர்வம் கூடும். சுவையான உணவுகளை சாப்பிடுவீர்கள். தம்பதிகளுக்குள் ஈகோ குறையும். 15.4.2025 அன்று இரவு 8.27 முதல் 18.4.2025 அன்று காலை 8.21 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் கிடைக்க வேண்டிய நல்ல வாய்ப்புகளில் தடை ஏற்படும். நெருங்கியவர்களிடையே மன வருத்தம் ஏற்படலாம். தினமும் துர்க்கா அஷ்டகம் படிக்கவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மேஷம்
வார ராசிபலன் 06.4.2025 முதல் 12.4.2025 வரை
06.4.2025 முதல் 12.4.2025 வரை
வேகத்துடன், விவேகத்தையும் கடைபிடிக்க வேண்டிய வாரம். ராசி அதிபதி செவ்வாய் சுக ஸ்தானத்தில் நீசம் பெறுவதால் ஓய்வின்றி உழைக்க நேரும். எந்த காரியமும் அதிக முயற்சிக்குப் பிறகே பலன் தரும். சிலருக்கு சிறு சிறு ஆரோக்கிய தொல்லை ஏற்படும்.எதையும் திட்டமிட்டு செய்தால் சிக்கல்கள் மற்றும் சிரமங்களில் இருந்து விடுபட முடியும். பூமி, மனை வாங்குவது பற்றிய சிந்தனை மேலோங்கும். பத்திரப் பதிவில் நிலவிய தடை தாமதங்கள் விலகும். வீடு, வேலை மாற்றம் அல்லது திடீர்ப் பயணங்கள் உருவாகும்.
உடன் பிறந்தவர்களுடன் சிறு சிறு மனத்தாங்கல் உருவாகும். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பிள்ளைகளால் ஏற்பட்ட தொல்லைகள் அகலும். சிலருக்கு விபரீத ராஜ யோகத்தால் தங்கம், வெள்ளி, அதிர்ஷ்ட பணம் கிடைக்கும். மனைவி மூலம் மட்டற்ற மகிழ்ச்சி நிலவும். இரண்டாவது குழந்தை பிறக்கும். இளம் பெண். ஆண்களுக்கு திருமணத்துக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். பஞ்சமி திதியில் வாராகியை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மேஷம்
வார ராசிபலன் 30.3.2025 முதல் 5.4.2025 வரை
30.3.2025 முதல் 5.4.2025 வரை
செயல்பாடுகளில் பொறுமை தேவைப்படும் வாரம்.ராசி அதிபதி செவ்வாய் சுக ஸ்தானத்தில் நீச்சமடைகிறார். தோற்றப் பொலிவில் மாற்றங்கள் ஏற்படலாம்.மனதில் புதுவிதமான ஆசைகள், எண்ணங்கள் உருவாகும். குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். வாழ்க்கைத் துணை பற்றிய புரிதல் உண்டாகும். வேலை மாற்றம், இடமாற்றம் பற்றிய சிந்தனை கூடும். சிலர் புதிய வாகனம், செல்போன் மாற்றி மகிழ்ச்சியடைவீர்கள்.அரசு பணியாளர்கள் தேவையற்ற செயல்களை தவிர்ப்பது நல்லது. சொத்துக்கள் வாங்குவது விற்பது பங்கு வர்த்தகம் தொடர்பான முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும்.
குழந்தை இல்லாதவர்களுக்கு வாரிசு உண்டாகும். மனக்கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும். சிந்தனை, செயல்பாடுகள் எல்லாம் சிறப்பாக மாறும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் முன்னேற்றம் உண்டாகும். தற்பெருமை பேசுவதையும், பேராசையையும் குறைத்துக் கொள்வது நல்லது. மகிழ்ச்சியை அதிகரிக்க குருவாயூரப்பனை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406






