என் மலர்
மேஷம் - வார பலன்கள்
மேஷம்
30.3.2025 முதல் 05.4.2025 வரை
செயல்பாடுகளில் பொறுமை தேவைப்படும் வாரம். ராசி அதிபதி செவ்வாய் சுக ஸ்தானத்தில் நீச்சமடைகிறார். தோற்றப் பொலிவில் மாற்றங்கள் ஏற்படலாம். மனதில் புதுவிதமான ஆசைகள், எண்ணங்கள் உருவாகும். குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். வாழ்க்கைத் துணை பற்றிய புரிதல் உண்டாகும். வேலை மாற்றம், இடமாற்றம் பற்றிய சிந்தனை கூடும். சிலர் புதிய வாகனம், செல்போன் மாற்றி மகிழ்ச்சியடைவீர்கள்.
அரசு பணியாளர்கள் தேவையற்ற செயல்களை தவிர்ப்பது நல்லது. சொத்துக்கள் வாங்குவது விற்பது பங்கு வர்த்தகம் தொடர்பான முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். குழந்தை இல்லாதவர்களுக்கு வாரிசு உண்டாகும். மனக்கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும். சிந்தனை, செயல்பாடுகள் எல்லாம் சிறப்பாக மாறும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் உண்டாகும். தற்பெருமை பேசுவதையும், பேராசையையும் குறைத்துக் கொள்வது நல்லது. மகிழ்ச்சியை அதிகரிக்க குருவாயூரப்பனை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மேஷம்
வார ராசிபலன் 23.3.2025 முதல் 29.3.2025 வரை
23.3.2025 முதல் 29.3.2025 வரை
கடன் தொல்லை தீரும் வாரம். ராசியில் பதியும் சனியின் பார்வை இன்னும் சில நாட்களில் விலகி ஏழரைச் சனி ஆரம்பிக்கப்போகிறது. உடலும் மனதும் புத்துணர்வு பெறும்.உங்கள் கடமையை மன நிறைவாக செய்து முடிக்கக் கூடிய சந்தர்ப்பம் அமையும். நல்லது கெட்டது அறிந்து தைரியமாக விரைந்து முடிவெடுப்பீர்கள். 3,6-ம் அதிபதி புதன் நீசம் பெறுவதால் கடன் தொல்லை குறையும். ஜாமீன் வழக்கில் இருந்து முழுவதுமாக விடுபடுவீர்கள். ஆரோக்கிய குறைபாடுகள் அகலும்.
தொல்லைகள் தந்த எதிரிகள் விலகிச் செல்வார்கள். இளைய சகோதர, சகோதரிகளுடன் ஏற்பட்ட பிணக்கு மறையும்.ஆற்றலும் திறமையும் வெளிப்படும். பணப் பிரச்சினை அகலும். தாய், தந்தையுடன் ஏற்பட்ட மனக் கசப்பு அகலும். புதிய சொத்துககள் வாங்கும் முயற்சி கைகூடும். வேலைப்பளு மிகுதியால் குடும்பத்தி னருக்கு அதிக நேரம் ஒதுக்க முடியாத நிலை இருக்கும். கடன் கேட்கும் உற்றார், உறவினர் நண்பர்களிடம் இருந்து விலகி இருக்க வேண்டும். திருமணம் மற்றும் குழந்தைப் பேறில் நிலவிய தடைகள் அகலும். அமாவாசையன்று பித்ருக்களை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மேஷம்
வார ராசிபலன் 16.3.2025 முதல் 22.3.2025 வரை
16.3.2025 முதல் 22.3.2025 வரை
விரயத்தை கட்டுப்படுத்த வேண்டிய வாரம். 12-ம்மிடமான விரயஸ்தானத்தில் நான்கு கிரகச்சேர்க்கை. தனாதிபதி சுக்ரன் விரயாதிபதி குருவுடன் பரிவர்த்தனை என கிரக நிலவரம் சற்று சுமாராக உள்ளது. பொறுப்புடன் செயல்பட வேண்டிய நேரம்.எல்லா விசயமும் வேகமாகவும் தனக்கு சாதகமாகவும் நடக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மிகுதியாக இருக்கும். வெளியே தைரியமாக இருந்தாலும் உள்ளத்தில் பயமே மேலோங்கி நிற்கும்.வீண் செலவால் மனச் சஞ்சலம் மனக் குழப்பம் உருவாகும்.
தவறான போன் தகவலை நம்பி வங்கிக் கணக்கு எண்களை யாரிட மும் தெரிவிக்க கூடாது. சேமிப்பில் உள்ள பணத்தை இழக்கும் வாய்ப்பு இருப்பதால் கவனம் தேவை. ஏழரைச் சனியின் ஆதிக்கம் துவங்க உள்ளதால் முதலீட்டாளர்கள் இயன்றவரை பெரிய முதலீடுகளை தவிர்க்க வேண்டும். 19.3.2025 அன்று மதியம் 2.06 மணி முதல் 22.3.2025 அன்று நள்ளிரவு 1.46 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் கவர்ச்சியான விளம்பரத்தை நம்பி புதிய தொழிலில் இறங்க வேண்டாம். சிலருக்கு கடன் அல்லது பொருள் இழப்பு அல்லது சிறு நோய் தாக்கம் உண்டாகலாம்.தினமும் கந்த சஷ்டி கவசம் படிக்கவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மேஷம்
வார ராசிபலன் 9.3.2025 முதல் 15.3.2025 வரை
9.3.2025 முதல் 15.3.2025 வரை
விரயத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய வாரம். ஏழரைச் சனி ஆரம்பித்தாலும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. ராசியை சனி பார்த்த காலத்தில் ஏற்பட்ட பாதிப்புகளை சமாளித்த உங்களுக்கு இது பெரிய கஷ்டமாகத் தெரியாது. இதுவரை பொருளாதார சிக்கல்களில் இருந்த பின்னடைவுகள் நீங்கி நன்மைகள் ஆரம்பிக்கும். வாக்கால் தொழில் நடத்தும் வழக்கறிஞர்கள், பேச்சாளர்கள், விற்பனை பிரதிநிதிகள், ஜோதிடர்களுக்கு வருமானம் இரட்டிப்பாகும்.வேலை தேடுபவர்களுக்கு நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் படிப்படியான முன்னேற்றம் இருக்கும். உங்களின் திறமையை வெளிக்காட்ட நல்ல சந்தர்ப்பம் கிடைக்கும்.
பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு கட்டுப்படுவார்கள். 12-ம்மிடமான விரயத்தில் அதிக கிரகங்கள் உள்ளதால் அவசியம், அநாவசியம் உணர்ந்து செயல்பட வேண்டும். கேட்ட இடத்தில் கேட்டவுடன் கடன் கிடைக்கும். அப்பாட்மென்ட் வீடு அல்லது பிளாட் வாங்க ஏற்ற காலம். மறைமுக பணப் பரிமாற்றத்தில் கவனம் தேவை. சிலர் பேரன், பேத்தியை பார்க்க வெளிநாடு சென்று வரலாம். திருமண முயற்சிகள் வெற்றி தரும். மாசி மகத்தன்று சந்தன அபிசேகம் செய்து சிவனை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மேஷம்
வார ராசிபலன் 02.03.2025 முதல் 08.03.2025 வரை
02.03.2025 முதல் 08.03.2025 வரை
லாபகரமான வாரம். 11-ம் மிடமான லாப ஸ்தானத்தில் சூரியன், சனி சேர்க்கை இருப்பதால் முன்னேற்றத்திற்கான பாதை தென்படும். உண்மை,நேர்மை உங்களை சுமூகமாக வழி நடத்தும். புதிய திட்டங்கள் தீட்டி சவாலான செயல்களையும் சாமர்த்தியமாக செய்து முடிப்பீர்கள்.
உழைப்பிற்கு ஏற்ற வருமானம் நிச்சயம் உண்டு. குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். மூத்த சகோதர, சகோதரி, சித்தப்பாவால் அதிர்ஷ்டம் உண்டாகும். பல வருடங்களாக எதிர்பார்த்த திடீர் அதிர்ஷ்டம் உயில் சொத்து வரலாம்.
போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம், வாங்கும் யோகம் உண்டாகும். அரசின் உதவித் தொகை கிடைப்பதில் நிலவிய தடைகள் அகலும். ஆரோக்கிய குறைபாடுகள் அதிகரிக்கும். வீடு கட்டும் பணி துரிதமாகும். அதற்கு தேவையான நிதியுதவி கிடைக்கும்.
பல சாதகங்கள் நடந்தாலும் ஏழரைச் சனி துவங்கும் காலம் என்பதால் மன உளைச்சலும் இருக்கும். வாழும் கலையை உணர்ந்தவர்களை வாழ்நாள் வினைகள் பாதிக்காது என்பதால் பிரபஞ்சத்திடம் உங்கள் கோரிக்கையை சமர்ப்பிக்கவும். முருகன் வழிபாடு செய்வதால் பய உணர்வு அகலும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மேஷம்
வார ராசிபலன் 23.2.2025 முதல் 01.03.2025 வரை
23.2.2025 முதல் 01.03.2025 வரை
தொழில் வளர்ச்சி உண்டாகும் வாரம். ராசி அதிபதி செவ்வாய் சகாய ஸ்தானத்தில் வக்ர நிவர்த்தி பெறுகிறார். உங்களின் பலமும், வளமும் அதிகரிக்கும். முயற்சிகளில் ஏற்பட்ட தடைகள், தாமதங்கள் அகலும். சகல விதத்திலும் அனுகூலங்கள் உண்டாகும்.
சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். பிறரை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் காலதாமதம் ஏற்படுவதால் தன் கையே தனக்கு உதவி என்று உணர்வீர்கள். பெயர், புகழ், அந்தஸ்து உயர்ந்து சமுதாயத்தில் நல்லதொரு இடத்தினை பிடிக்க முடியும். பணிச்சுமைகள் குறைந்து மன நிம்மதியுடன் பணிபுரிய முடியும்.
சிறப்பான பணவரவால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சிலருக்கு இடமாற்றம் ஏற்படும். உயர் கல்விக்கு சிலர் வெளிநாடு செல்லலாம். குறைந்த சம்பளத்தில் வேலை பார்த்தவர்களின் திறமைக்கு தகுந்த ஊதியம் கிடைக்கும்.
ஏழரைச் சனியின் காலம் என்பதால் சுய தொழில் புரிபவர்கள் சிந்தித்து செயல்பட வேண்டும். கணவன் மனைவிக்குள் நிலவிய வாக்குவாதம் விலகும். தேக நலனில் இருந்த குறைபாடுகள் அகலும். மகா சிவராத்திரியன்று பச்சரிசி மாவினால் அபிசேகம் செய்து சிவனை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மேஷம்
வார ராசிபலன் 16.2.2025 முதல் 22.2.2025 வரை
16.2.2025 முதல் 22.2.2025 வரை
தடைகள் தகரும் வாரம். பொதுவாக ராசி மற்றும் லக்னத்திற்கு அசுப கிரகங்களான சனி, ராகு, கேது, செவ்வாய் சம்பந்தம் இல்லாமல் இருப்பது நல்லது. அந்த வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ராசியை சனி பார்த்ததால் ஏற்பட்ட சங்கடங்கள் அதிகம்.
தற்போது ஏழரைச் சனி துவங்கினாலும் சனியின் பார்வை ராசியில். பதிந்த காலத்தில் ஏற்பட்ட துன்பத்துடன் ஒப்பிட்டால் எதுவும் நடக்காதது போல் இருக்கும். எனவே மனதை அலட்டாமல் நேர்மையுடன், நியாயத்துடன் செய்யக் கூடிய அனைத்து முயற்சிகளும் வெற்றியடையும். தடைகள் தகரும்.
இதுவரை இருந்து வந்த சகோதர, சகோதரி பிணக்குகள் இருந்த இடம் தெரியாமல் மறையும். நல்ல வரன்கள் தேடி வரும். வாழும் கலையை உணர்ந்த உங்களை எந்த வினையும் பாதிக்காது. மாணவர்கள் அதிக கவனத்துடன் படிக்க வேண்டிய காலமாகும். 20.2.25 அன்று காலை 6.49 மணி முதல் 22.2.25 அன்று மாலை 5.40 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் அனைத்து செயலிலும் நிதானம் மற்றும் பொறுமை மிக முக்கியம். நேர் மறையான எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்.கருமாரியம்மனை வழிபட்டால் மன நிம்மதி கூடும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மேஷம்
வார ராசிபலன் 9.2.2025 முதல் 15.2.2025 வரை
9.2.2025 முதல் 15.2.2025 வரை
மேன்மையான வாரம்.பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சூரியன் லாப ஸ்தானம் சென்று தன் வீட்டைத் தானே பார்ப்பதால் ஆன்ம பலம் பெருகும்.தோற்றப் பொலிவில் புத்துணர்ச்சி பெறுவீர்கள். குடும்பத்தினரால் ஏற்பட்ட மன சஞ்சலம் சீராகும். தொழில் வளம் சிறப்பாக இருக்கும். பூர்வீகச் சொத்திற்கு நல்ல விலை கிடைக்கும். அரசு உத்தியோக முயற்சி வெற்றி தரும். புதிய பொறுப்புகளும் பதவி உயர்வும் வந்து சேரும். வங்கிக் கடன் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். கடன் பிரச்சனைகள் தீரும். இழந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள்.
குல தெய்வ அருளும் முன்னோர்களின் நல்லாசி களும் உண்டாகும். திருமண முயற்சிகள் பலிதமாகும். சுப விரயங்கள் உண்டாகும். பிள்ளைகளுக்கு சுப நிகழ்வு செய்து மகிழ்வீர்கள். வாழ்க்கைத் துணையோடு ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும். பெண்களுக்கு ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். விரைவில் பொதுத் தேர்வு துவங்க உள்ளதால் மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்துவது அவசியம். விரைவில் ஏழரைச் சனி துவங்க உள்ளது. தைப்பூசம் அன்று அரளி மாலை அணிவித்து முருகனை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மேஷம்
வார ராசிபலன் 2.2.2025 முதல் 8.2.2025 வரை
2.2.2025 முதல் 8.2.2025 வரை
இழந்த இன்பங்கள் துளிர்க்கும் காலம். தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் வக்ர நிவர்த்தி பெற்ற குரு பகவான் சஞ்சரிக்கிறார். விறுவிறுப்பான நல்ல மாற்றங்கள் நிகழும்.முயற்சிகள் வெற்றியாகும். மகிழ்ச்சியாக இருப்பீர்கள். புத்திர பிராப்தம் கிட்டும். தொழில், வேலைக்காக குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள் மீண்டும் குடும்பமாக இணைந்து வாழும் சூழ்நிலை அமையும்.சிலர் வெளிநாடு அல்லது வெளி மாநிலத்திற்கு இன்பச் சுற்றுலா சென்று வரலாம். ஒத்தி வைத்த அறுவை சிகிச்சை வெற்றி கரமாக நடக்கும்.சுப விரயங்கள் அதிகரிக்கும். படித்து முடித்த மகன், மகளுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
சிலர் உயர் கல்விக்காக கடன் பெறலாம். வியா பாரிகள் புதிய முதலீட்டைத் தவிர்க்கவும்.உயர் அதிகாரிகளின் தொல்லைகள் அகலும்.வர வேண்டிய பாக்கிகள் வசூலாகும்.பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக சேமிப்பதில் ஆர்வம் அதிகரிக்கும்.பெண்களுக்கு தாய் வழி உறவுகள் மூலம் அன்பளிப்பு கிடைக்கும்.பூர்வீகச் சொத்துக்கள் விற்பனையில் முட்டுக்கட்டையாக இருந்த பங்காளிகள் மனம் மாறுவார்கள்.படுத்தவுடன் நிம்மதியாக தூங்குவீர்கள். ஆஞ்சநேயரை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மேஷம்
வார ராசிபலன் 26.1.2025 முதல் 1.2.2025 வரை
26.1.2025 முதல் 1.2.2025 வரை
தடை தாமதங்கள் விலகும் வாரம். ராசி அதிபதி செவ்வாய் வக்ர கதியில் முயற்சி ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்கிறார். தனம், வாக்கு, குடும்ப ஸ்தான அதிபதி சுக்ரன் உச்சம் பெற்று குருவுடன் பரிவர்த்தனை பெற்றுள்ள இந்த கிரக நிலவரம் மேஷ ராசிக்கு மிக சாதகமாக உள்ளது. குடும்பத்தில் நிலவிய பிரச்சனைகள் படிப்படியாக குறையும். விரயமான சேமிப்புகளை ஈடுகட்டும் படியாக நிரந்தர வருமானத்திற்கான வழி பிறக்கும். நிலுவையில் உள்ள தொகைகள். சம்பள பாக்கிகள் கைக்கு வந்து சேரும். அரசாங்கத்தால் நன்மை உண்டாகும். தொழிலில் நல்ல லாபம் உண்டாகும்.
தலைமைப்பதவி தேடி வரும். சகோதர, சகோதரியால் ஆதாயம் உண்டு. திருமணத்தடை அகலும். சிலருக்கு மறுமண யோகம் உண்டாகும். மாணவர்களுக்கு பெற்றோர்கள், ஆசிரியர்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் கிடைக்கும். உண்மையான நண்பர்களையும் எதிரிகளையும் அடையாளம் காணக்கூடிய சந்தர்ப்பம் உருவாகும். பணியில் கவுரவம் நிலைத்திருக்கும். விவாகரத்து வழக்கு பிரச்சினை முடிவுக்கு வரும். பெண்களுக்கு ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். தை அமாவாசையன்று இயன்ற வரை உணவு தானம் வழங்கவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மேஷம்
வார ராசிபலன் 19.1.2025 முதல் 25.1.2025 வரை
19.1.2025 முதல் 25.1.2025 வரை
முயற்சிகளில் வெற்றி பெறும் வாரம். ராசி அதிபதி செவ்வாய் வக்ர கதியில் 3ம்மிடமான சகாய ஸ்தானத்திற்கு செல்கிறார். தனம், வாக்கு, குடும்ப ஸ்தான அதிபதி சுக்ரன் தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். எதிலும் வெற்றியே காண்பீர்கள். குடும்ப உறவுகளுடன் முக்கிய விசயங்களை மனம் விட்டுப் பேசும் படியான சூழல் உருவாகும்.தன வரவில் தன் நிறைவு உண்டாகும். எதிர்பார்த்த கடன் தொகை கிடைக்கும். பேச்சை மூலதனமாக கொண்ட வர்களின் வாழ்வாதாரம் உயரும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம் போல சிறப்பாக இருக்கும். அடிக்கடி அலைச்சல் மிகுந்த பயணம் செய்ய நேரும்.
வெளிநாட்டு வேலை முயற்சி பலன் தரும்.திருமணத் தடை அகலும். புத்திரப் பிராப்தம் கிடைக்கும். விரைவில் ஏழரைச் சனி துவங்க உள்ளது. ஜாமீன் கையெழுத்து போடுதல், வங்கியில் பணம் இல்லாமல் காசோலை கொடுத்தல் போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது. 23.1.2025 அன்று இரவு 10.32 மணிக்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் வேலைப்பளு கூடுதலாக இருக்கும்.ஓய்வு நேரம் குறையும். அலைச்சல் மிகுந்த பயணங்களைத் தள்ளி வைப்பது நல்லது.வில்வ அர்ச்சனை செய்து சிவனை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மேஷம்
12.01.2025 முதல் 18.01.2025 வரை
நன்மைகள் மிகுந்த வளமான வாரம். ராசி அதிபதி செவ்வாய்க்கு பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சூரியனின் பார்வை. இது மேஷ ராசிக்கு வளமான வாரம் என்றால் அது மிகையாகாது. தொழில் ரீதியாக உறவுகள் ரீதியாகவும் அனுபவித்த மன சங்கடங்கள் விலகும். பொருளாதார நிலையில் மிக உன்னதமான நிலையை அடைவீர்கள். கடனால் பட்ட கவலைகள், அவமானம் அகலும். அதிகாரப் பதவிகள் தேடி வரும்.
பொது வாழ்க்கையில் உள்ளவர்களுக்கு இது மேன்மையான காலம். குடும்பத்திற்கு குல தெய்வ அருள் கிடைக்கும். புத்திர பிராப்தம் கிடைக்கும். பூர்வீகம் தொடர்பான பிரச்சனைகள் தலை தூக்கினாலும் முடிவு உங்களுக்கு சாதகமாகும்.
திருமணம், கல்வி, புத்திரப் பேறு, உத்தியோகம், தொழில் போன்ற சுப பலன்கள் அதிகரிக்கும். அதற்கான சுப விரயங்களும் உண்டாகும். சிறு சிறு உட்பூசலுக்காக வேலை மாற்றம் செய்வதை தவிர்க்கவும். வெகு விரைவில் ஏழரைச் சனி துவங்க உள்ளதால் தொழில், வேலை தொடர்பாக முக்கிய முடிவுகளை சுய ஜாதக பரிசீலனைக்கு பிறகு செயல்படுத்துவது நல்லது. பவுர்ணமியன்று முருகனை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406






