என் மலர்
மேஷம் - வார பலன்கள்
மேஷம்
வார ராசிபலன் 27.7.2025 முதல் 2.8.2025 வரை
27.7.2025 முதல் 2.8.2025 வரை
கோபத்தை கட்டுப்படுத்த வேண்டிய வாரம். ராசி அதிபதி செவ்வாய் உப ஜெய ஸ்தானமான ருண ரோகச் சத்ரு ஸ்தானத்தில் சனி பகவானின் பார்வையில் சந்திக்கிறார். 3, 6ம் அதிபதி புதன் வக்ரம் பெறுவதால் கிணற்றில் போட்ட கல்லாக கிடந்த சில முயற்சிகள் முடிவிற்கு வரும். பூர்வீக சொத்து சம்பந்தமாக உங்களுக்கும் சகோதரருக்கும் உள்ள பிரச்சினையை சித்தப்பா தூண்டி விட்டு வேடிக்கை பார்ப்பார்.
உடன் பிறந்தவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. சினத்தை அடக்கினால் சிரமங்கள் குறையும். பணம் சம்பாதிப்பதில் ஆக்கமும், ஊக்கமும் ஏற்படும். பணியில் உள்ளவர்கள் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டால், பதவி உயர்வுகள் தேடி வரும். தடைபட்ட பணிமாற்றம், ஊதிய உயர்வு, இடமாற்றம் உங்களை மகிழ்விக்கும்.
அனைத்து வசதிகளுடன் கூடிய அழகிய தனிவீடு அமையும். தொழில் விருத்திக்காக சிலர் சொத்தை அடமானம் வைத்து கடன் வாங்கக் கூடும். ஆடிப்பூரம் அன்று சுமங்கலி பெண்களுக்கு வளையல் தானம் வழங்கவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மேஷம்
வார ராசிபலன் 20.7.2025 முதல் 26.7.2025 வரை
20.7.2025 முதல் 26.7.2025 வரை
கடன் சார்ந்த பாதிப்புகள் குறையும் வாரம். மேஷ ராசிக்கு தன ஸ்தான அதிபதி சுக்ரன் ஆட்சி பலம் பெறுவது மிக அற்புதமான கிரக அமைப்பு. வாழ்க்கைத் தரம் உயரும் நேரம். இருண்டு கிடந்த வாழ்க்கை வெளிச்சமாகும். தைரியமும், தன்னம்பிக்கையும் கூடும். பொருளாதார மேன்மை உண்டாகும்.
ஆன்லைன் வர்த்தகம், தகவல் தொடர்பு துறை, ஊடகங்களில் பணிபுரிபவர்களுக்கு, கமிஷன் தொழில் செய்பவர்களுக்கு வருமானம் இரட்டிப்பாகும். வெளிநாட்டுப் பயணம் மற்றும் வாணிபத்தால் தனலாபம் அதிகரிக்கும். புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும். பிள்ளைகள் பெயரில் நிரந்தர வைப்புத் தொகையை ஏற்படுத்துவீர்கள்.
தங்கத்தில் முதலீடு செய்வீர்கள். பெண்கள் ஆன்லைனில் பொருட்கள் வாங்கும் மோகம் கூடும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். அரசியல் பிரமுகர்களுக்கு கட்சி மாறும் எண்ணம் மேலோங்கும். நோய்க்கு உரிய வைத்தியம் கிடைக்கும். சொந்தமாக வீடு, நிலம், பூமி, வாகனம் வாங்கக் கூடிய நேரம் உள்ளது. ஆடி வெள்ளிக் கிழமை அம்மனுக்கு குங்கும அர்ச்சனை செய்யவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மேஷம்
வார ராசிபலன் 13.7.2025 முதல் 19.7.2025 வரை
13.7.2025 முதல் 19.7.2025 வரை
புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும் வாரம். தன ஸ்தான அதிபதி சுக்ரன் ஆட்சி. சவாலான பணிகள் கூட இலகுவாக முடியும். தடை தாமதமான உங்களின் முயற்சிகள் காரிய சித்தியை ஏற்படுத்தி தரும். பேச்சை மூலதனமாக கொண்டவர்கள் மார்க்கெட்டிங், வங்கிப் பணி, ஆடிட்டிங், ஆசிரியர், ஜோதிடம் போன்ற பணியில் உள்ளவர்களின் வாழ்வாதாரம் உயரும்.
குடும்பத்தில் நிலவிய தர்ம சங்கடமான நிலை குழப்பங்கள் மறையும். நட்பு வட்டம் விரிவடையும். தள்ளிப்போன பணிகள் சாதகமாக முடியும். தொழிலில் கணிசமாக லாபம் உயரும். உத்தியோகஸ்தர்கள் மற்றவர்களை குறை கூற வேண்டாம். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் உதவி கிடைக்கும். கணவன், மனைவி ஒற்றுமை மேலோங்கும்.
கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். ஆடித் தள்ளுபடியில் ஆடை ஆபரணம் வாங்க வாய்ப்பு உள்ளது. வீடு கட்ட, வாகனம் வாங்க எடுத்த முயற்சி பலிக்கும். ஆரோக்கியம் சீராகும். மலைபோல் வந்த பிரச்சினைகள் பனி போல் விலகும். தினமும் கந்த சஷ்டி கவசம் படிக்கவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மேஷம்
வார ராசிபலன் 6.7.2025 முதல் 12.7.2025 வரை
6.7.2025 முதல் 12.7.2025 வரை
விழிப்புடன் செயல்பட வேண்டிய வாரம். ராசி அதிபதி செவ்வாய் கேதுவுடன் இணைந்து நிற்பதால் மனசஞ்சலம் அதிகரிக்கும். முக்கிய பணிகளில் தடை, தாமதங்கள் ஏற்படலாம். குடும்ப பிரச்சினை தீர்க்கும் முயற்சியில் சில மன ஸ்தாபங்கள் அதிகரிக்கும். வீட்டின் தோற்றத்தை மேம்படுத்த வீட்டைச் சுற்றிய சிறிய மாற்றங்கள் செய்வீர்கள்.
சொத்துக்களின் பராமரிப்பு செலவு அதிகரிக்கும். புதிய சொத்துக்களை வாங்கும் போதும், பழைய சொத்துக்களை விற்கும் போதும் விலை நிர்ணயம் செய்வதில் கவனம் தேவை. கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு நண்பர்களால் எதிர்மறை விளைவுகள் ஏற்படும். இளம் பெண்களுக்கு செவ்வாய்க் கேதுவை கடக்கும் வரை திருமணத்தடை இருக்கலாம்.
திருமணமான தம்பதியினர் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டிய காலம். 6.7.2025 அன்று மாலை 4.01 மணி முதல் 9.7.2025 அன்று காலை 3.15 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வரவை விட செலவு அதிகமாகும். அண்டை அயலாருடன் சிறுசிறு மனபேதம் ஏற்பட வாய்ப்புள்ளது. பவுர்ணமி அன்று முருகனை வழிபாடு செய்வது நல்லது.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மேஷம்
வார ராசிபலன் 29.6.2025 முதல் 5.7.2025 வரை
29.6.2025 முதல் 5.7.2025 வரை
முயற்சிகளில் முன்னேற்றமும் வெற்றியும் உண்டாகும் வாரம். தனம், வாக்கு, குடும்ப ஸ்தான அதிபதி சுக்ரன் ஆட்சி பலத்துடன் உள்ளார். துன்பங்களும், துயரங்களும் நீங்கும். விழிப்புடன் செயல்படுவீர்கள். வாக்கு சாதுர்யத்தால் மனநிறைவும், நிம்மதியும் அதிகரிக்கும்.
பேச்சை மூலனமாகக் கொண்டவர்களின் வாழ்வாதாரம் உயரும். தங்களின் செயல் திறனில் மாற்றம் ஏற்பட்டு எளிதாக பணியாற்றி நற்பெயர் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். மருமகன், மகன் ஸ்தானத்தில் நின்று உங்கள் தேவைகளை நிறைவு செய்வார். குழந்தைபேறு இல்லாதவர்களுக்கு வாரிசு உருவாகும்.
ஆபரணச் சேர்க்கை அதிகமாகும். சிலருக்கு மறுமணம் நடக்கும். சுப விசேஷங்கள் மன நிறைவையும், நிம்மதியையும் அதிகரிக்கும்.தொழிலில் நல்ல வருமானம் உண்டாகும். புதிய தொழில் ஒப்பந்தங்கள் கிடைக்கும். நல்ல புதிய வாடிக்கையாளர்கள் உருவாகுவார்கள். தொழில் கூட்டாளிகளிடையே நல்லிணக்கம் நீடிக்கும். தேவையற்ற கடனை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். செவ்வாய் கிழமை அங்காரகனை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மேஷம்
வார ராசிபலன் 22.6.2025 முதல் 28.6.2025 வரை
22.6.2025 முதல் 28.6.2025 வரை
எண்ணங்களும் லட்சியங்களும் செயல் வடிவம் பெறும் வாரம். ராசி அதிபதி செவ்வாய் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். நிம்மதியாக சுதந்திரமாக செயல்படுவீர்கள். பொதுப்பணியில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். மிகப் பெரிய அரசியல் தலைவர்களின் நட்பு கிடைக்கும்.
தாய் மாமா அல்லது தாய்வழி தாத்தா மூலம் நிதி உதவி கிடைக்கலாம். தொழிலில் சிறிய முயற்சியில் பெரிய லாபம் கிடைக்கும். சொத்துக்கள் வாங்கும் யோகம் உள்ளது. பொருளாதார ரீதியாக சிறப்பான முன்னேற்றம் உண்டாகும். கொடுக்கல், வாங்கல் சீராகும். உயில் சொத்து, பணம், பங்குச் சந்தை ஆதாயம் போன்ற மறைமுக வகையில் பொருளா தாரம் கிடைக்கும்.
உயர் கல்வி முயற்சிக்கு சாதகமான சூழல் உண்டாகும். சுபகாரிய பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும். பணிச்சுமை அதிகரித்தாலும் அதற்கு தகுந்த வருமானமும் அதிகரிக்கும். விரயம், வைத்திய செலவு, காரியத் தடை முற்றிலும் நீங்கும். சம்பந்தம் இல்லாத குற்றத்தில் சிக்கியவர்கள் வம்பு, வழக்கிலிருந்து முழுமையாக விடுபடுவார்கள். அமாவாசையன்று சிவ வழிபாடு செய்வது நல்லது.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மேஷம்
வார ராசிபலன் 15.6.2025 முதல் 21.6.2025 வரை
15.6.2025 முதல் 21.6.2025 வரை
முன்னேற்றமான வாரம். ராசி அதிபதி செவ்வாய் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கேதுவுடன் சேர்க்கை பெறுகிறார். தான, தர்மம் செய்வதில் ஆர்வம் அதிகரிக்கும். பிரமிக்கத்தக்க வகையில் வாழ்வாதாரம் உயரும். நேர்மறை எண்ணங்களால் மனதில் நிம்மதி கூடும். பெயரும் புகழும் அதிகமாகும். நேர்மையும், கடுமையான உழைப்பும் உங்களை உயர்த்தி விடும்.
வீடு, மனை வாங்குவது தொடர்பான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு பயனுள்ளதாக இருக்கும். பிள்ளைகளால் பெருமை சேரும். ஆரோக்கியம் சிறக்கும். தொழில் ரீதியாக அடிக்கடி அலைச்சல் மிகுந்த பயணத்தை சந்திக்க நேரும். பெண்கள் உடல் நலனை பராமரிக்க தியானம், யோகா மற்றும் இயற்கை உணவில் ஆர்வம் செலுத்துவீர்கள்.
தங்கம், வெள்ளி பொருட்களின் சேர்க்கை அதிகரிக்கும். தந்தையால் நன்மைகள் கிடைக்கும். சிலர் கற்பனையில் எதையாவது நினைத்து மனசஞ்சலத்தை அதிகரிப்பார்கள். பங்குச் சந்தை காலை வாரலாம். காதல் விசயங்களால் மன உளைச்சல் அதிகரிக்கும். தினமும் ஸ்ரீ ருத்ரம் கேட்கவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மேஷம்
வார ராசிபலன் 08.06.2025 முதல் 14.06.2025 வரை
08.06.2025 முதல் 14.06.2025 வரை
மகிழ்ச்சியான வாரம். ராசியில் தன அதிபதி சுக்ரன். சிறிய செயலுக்கு கடினமாக முயற்சி செய்த நிலை மாறும். சுறுசுறுப்பாக உற்சாகமாக செயல்படுவீர்கள். எளிய உழைப்பில் பெரிய லாபம் கிடைக்கும். கணவரால் மனைவிக்கும், மனைவியால் கணவருக்கும் எதிர்பாராத அதிர்ஷ்டமான யோகங்கள் உண்டாகலாம்.
சிலருக்கு தந்தையின் வாரிசு வேலை கிடைக்கும். வியாபாரிகள் புத்தி சாதுர்யத்துடன் புதிய முதலீடு செய்வது அவசியம். உங்களை புண்படுத்திய சகோதரி மன்னிப்பு கேட்பார். திருமண முயற்சி சாதகமாகும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். புதிய வீடு கட்டுதல் கட்டிய வீடு வாங்குதல் பழைய வாகனங்களை புதுப்பித்தல் புதிய வாகனங்களை வாங்குதல் போன்ற மகிழ்ச்சியான சம்பவங்கள் நடக்கும்.
9.6.2025 அன்று காலை 8.50 மணி முதல் 11.6.2025 அன்று காலை 8.30 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் பொறுமையுடன் செயல்பட வேண்டும். கொள்கை பிடிப்பை தளர்த்திக் கொள்வது நல்லது. வேலை பார்க்கும் இடத்தில் சில மனக்கசப்பு ஏற்படலாம். நவகிரக செவ்வாய் பகவானை வணங்கவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மேஷம்
வார ராசிபலன் 01.06.2025 முதல் 07.06.2025 வரை
01.06.2025 முதல் 07.06.2025 வரை
திருமணத் தடை நீங்கும் வாரம். 2, 7-ம் அதிபதி சுக்கிரன் ராசியில் சஞ்சாரம் செய்வதால் தன வரவில் தன்னிறைவு உண்டு. நிலுவையில் உள்ள பாக்கித் தொகை வசூலாகும். கடன் சற்று அடையும். புதிய கூட்டாளிகள் கிடைப்பார்கள். தொழில், உத்தியோகத்திற்காக வெளியூர், வெளிநாடு செல்ல வேண்டும் என்ற எண்ணம் செயல் வடிவம் பெறும்.
சக ஊழியர்கள் மூலம் புதிய வாய்ப்புகள் தேடி வரும். பெண்களுக்கு கணவரின் புரிதல் மகிழ்ச்சியை அதிகரிக்கும். குடும்பப் பிரச்சினைகளை தம்பதிகள் தங்களுக்குள் பேசி சீராக்கு வார்கள். குடும்பத்தில் ஆனந்தமும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும். புத்திர தோஷத்தில் நிலவிய தடை தாமதங்கள் அகலும். தன வரவில் தன்னிறைவு உண்டாகும். வேலைக்காக தனித்தனி ஊரில் வசித்த தம்பதிகள் சேர்ந்து வாழ்வார்கள். திருமணம் பற்றிய நல்ல முடிவுகள் எடுப்பீர்கள்.
எதிர்காலம் பற்றிய கனவுகள் நினைவாகும். சிலரின் இரண்டாம் திருமண முயற்சி பலன் தரும். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு உள்ளது. தடைபட்ட வீடு கட்டும் பணி துரிதமாகும். ஆரோக்கியம் சார்ந்த இன்னல்கள் அகலும். ஸ்ரீ சவுபாக்கிய லட்சுமியை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மேஷம்
வார ராசிபலன் 25.05.2025 முதல் 31.05.2025 வரை
25.05.2025 முதல் 31.05.2025 வரை
பொருளாதார மேன்மை உண்டாகும் வாரம். தனம், வாக்கு குடும்ப ஸ்தான அதிபதி சுக்ரன் ராசிக்குள் நுழைகிறார். ராசிக்கு 11-ம்மிடமான லாபஸ்தானம் முதல் ராசிக்கு 5-ம்மிடம் வரை கிரகங்கள் வரிசையாக நிற்பது கிரக மாலிகா யோகம். பொருளாதாரத்தில் தன் நிறைவு உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் நிலவும்.
இதுவரை கடனை திரும்பத் தராத உறவினர்கள் இந்த வாரம் கடனை செலுத்து வார்கள். வாழ்க்தைத் துணை வழிகளில் வருமானமும் திரண்ட சொத்தும் கிடைக்கும். பங்குச் சந்தை ஆதாயம் உண்டு. பூர்வீகச் சொத்து தொடர்பான பேச்சு வார்த்தைகளை, முக்கிய முடிவுகளை இந்த வாரத்திற்குள் முடிப்பது நல்லது. தொழில், உத்தியோகம் காரணமாக சிலரின் தந்தை குடும்பத்தை பிரிந்து வெளியூர் செல்லலாம்.
பெண்களுக்கு விலை உயர்ந்த ஆபரண, ஆடை என சுப விரயம் உண்டாகும். வீடு, மனை வாகனம் வாங்குவதில் மாமியாரின் பங்களிப்பு இருக்கும். சிந்தித்து நிதானமாக திட்டமிட்டால் எதிர்பார்த்த இலக்கை அடைய முடியும். புதிய நண்பர்களிடம் எச்சரிக்கையாக பழக வேண்டும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். அமாவாசையன்று சாம்பார் சாதம் தானம் வழங்கவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மேஷம்
வார ராசிபலன் 18.05.2025 முதல் 24.05.2025 வரை
18.05.2025 முதல் 24.05.2025 வரை
சிந்தித்து செயல்பட வேண்டிய காலம். சகாய ஸ்தானத்திற்கு குரு பகவானும் 5ம்மிடத்திற்கு கேதும், லாப ஸ்தானத்திற்குள் ராகுவும் செல்கிறார்கள். வார இறுதியில் ராசியை விட்டு புதன் செல்கிறார். தன ஸ்தானத்தில் பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சூரியன். பேச்சு திறமை மிளிரும். மனதில் ஆசை கடல் அலை போல் பெருகும். லவுகீக நாட்டம் அதிகரிக்கும். புதிய எண்ணங்கள் மற்றும் திட்டங்கள் தோன்றும்.
தொழில் முன்னேற்றம் மகிழ்ச்சியில் ஆழ்த்தும். தனிப்பட்ட வாழ்க்கையிலும் மனநிறைவு உண்டாகும்.
வருமானத்திற்கான சாத்தியக் கூறுகள் அதிகரிக்கும். ஓரிரு வாரங்கள் கொடுக்கல், வாங்கலில் நிதானம் தேவை. பதவி மாற்றம், இடமாற்றம், உத்தியோக மாற்றம் வரலாம். காது, மூக்கு, தொண்டை தொடர்பான ஆரோக்கிய கேடுகளை அறுவை சிகிச்சையால் சரி செய்ய உகந்த நேரம்.
தூர தேசங்களுக்கு ஆன்மீகச் சுற்றுலா சென்று வரும் வாய்ப்பு ஏற்படும். கணவன், மனைவி உறவில் இணக்கமும், அன்பும் இருக்கும். நிறைய அலைச்சலும், விரயச் செலவும் உண்டாகும். உலக வாழ்வில் பற்றற்ற நிலையை அடையச் செய்யும். அம்பிகை வழிபாடு சிறப்பைத் தரும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மேஷம்
வார ராசிபலன் 11.5.2025 முதல் 17.5.2025 வரை
11.5.2025 முதல் 17.5.2025 வரை
அமைதியான வாரம். இந்த வாரத்தில் சூரியன் தன ஸ்தானத்திற்கும் குரு பகவான் உப ஜெய ஸ்தானமான 3ம் மிடத்திற்கும் செல்கிறார்கள். வெற்றி மீது வெற்றி வந்து உங்களை சேரும் அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் குரு பகவானை சேரும். முக்கிய கிரக அமைப்புகள் மேஷ ராசிக்கு மிக மிக சாதகமாக உள்ளது.
எடுக்கப்பட்ட தொழில், உத்தியோக முயற்சிக்கான முழு பலனும் அங்கீகாரமும், வெற்றியும் உண்டு. சிலருக்கு தொழில் மாற்ற சிந்தனை அதிகரிக்கும். மனதை மகிழ்விக்கும் பதவி உயர்வு, பாராட்டு, இடப்பெயர்ச்சியும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. சிலர் தவணை முறையில் புதிய வாகனம் வாங்கலாம். திருமணத்திற்கு நல்ல வரன் தேடிவரும்.
பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். சாமர்த்தியமாகப் பேசி முக்கிய காரியங்களை சாதிப்பீர்கள். கணவனால் மனைவிக்கும் மனைவியால் கணவனுக்கும் நிம்மதி கிடைக்கும். 13.5.2025 அன்று அதிகாலை 2.27 மணி முதல் 15.5.2025 அன்று மதியம் 2.07 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளது. எனவே அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பதுடன் யாரையும் நம்பக்கூடாது. சித்ரா பவுர்ணமி அன்று தண்ணீர் தானம் வழங்கவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406






