என் மலர்
மேஷம் - வார பலன்கள்
மேஷம்
வார ராசிப்பலன் 19.10.2025 முதல் 25.10.2025 வரை
தன வரவில் தன் நிறைவு உண்டாகும் வாரம். மேஷ ராசிக்கு ஆறாம் அதிபதி புதன் வார இறுதியில் அஷ்டம ஸ்தானத்தில் மறைய போகிறார். இது கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோக அமைப்பாகும். அதிர்ஷ்டம் அரவணைக்கும். தொட்டது துலங்கும். மன நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பல்வேறு சுப பலன்கள் உண்டாகும். தொழிலில் உன்னத நிலையை அடைய முடியும். செல்வாக்கு, திறமை மற்றும் கவுரவத்தோடு செயல்பட்டு சிறப்பும் பெருமையும் அடைய முடியும். திறமைகளின் மூலம் பணியில் பொறுப்புகள் உயரும்.
அசையும், அசையாச் சொத்து வாங்கத் தேவையான கடன் தொகை கிடைக்கும். ஏழரைச் சனியின் காலம் என்பதால் வரனை தேர்வு செய்வதில் சற்று நெருடல் இருக்கும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். 23.10.2025 இரவு 10.06க்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் உடல் சோர்வால் எண்ணிய பணிகளை முடிப்பதில் காலதாமதம் ஏற்படும். புதிய முயற்சிகளில் தடை, தாமதங்கள் ஏற்படலாம். மனக்குழப்பம், பதட்டம் அதிகரிக்கும்.தொழில் உத்தியோகத்தில் நிதானம் தேவை. குல, இஷ்ட தெய்வத்தை மனம் தளராது வழிபட அனைத்தும் சுபமாகவே இருக்கும்.
`பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி, செல்: 98652 20406
மேஷம்
வார ராசிபலன் 12.10.2025 முதல் 18.10.2025 வரை
நன்மைகள் அதிகரிக்கும் வாரம். தனம் வாக்கு குடும்ப ஸ்தான அதிபதி சுக்கிரன் நீச்சபங்க ராஜயோகத்தில் இருக்கிறார். வெற்றிக் கனியை ருசிப்பீர்கள். புத்தி சாதுர்யமும் அறிவுத் திறனும் அதிகரிக்கும். செயல்களில் வேகம் உண்டாகும்.
எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். செல்வாக்கு, சொல்வாக்கு உயரும். தீபாவளி போனஸ் மகிழ்ச்சியை அதிகரிக்கும். தந்தையின் ஆசீர்வாதம் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும். வருமானத்தடை விலகும்.
சிறிய முதலீட்டில் அதிக லாபம் பார்ப்பீர்கள். தடைபட்ட வாடகை வருமானம் வரத் துவங்கும். தம்பதிகளிடம் நல்ல புரிதல் இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் உங்களின் பேச்சிற்கு கட்டுப்படுவார்கள். உடல் நலனில் முன்னேற்றம் அதிகமாகும்.
வாழ்க்கையின் அனைத்து விஷயங்களும் உங்களுக்கு சாதகமாகவே நடக்கும். திருமணத் தடை அகலும். எதிர் பாலினத்தவரால் ஏற்பட்ட இன்னல்கள் விலகும். அரசு, வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான தேர்வுகளில் வெற்றி உறுதி. குழந்தை பாக்கியம் கிடைக்கும். செயற்கை கருத்தரிப்பை நாடியவர்களுக்கு இயற்கையாகவே குழந்தை பிறக்கும். குல தெய்வ வழிபாடு பலன் தரும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மேஷம்
வார ராசிபலன் 5.10.2025 முதல் 11.10.2025 வரை
5.10.2025 முதல் 11.10.2025 வரை
அதிகமாக உழைக்க வேண்டிய வாரம். ராசி அதிபதி செவ்வாய் 3,6-ம் அதிபதி புதனுடன் இணைந்து ராசியை பார்க்கிறார். தீபாவளிக்கு தேவையான ஆடை ஆபரணங்கள் சேகரிக்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். சிலருக்கு வீடு மாற்றம் வேலை மாற்றம் நடக்கலாம். சிறு சிறு உடல் நல, மனநல பாதிப்புகள் வரலாம். கடன் வாங்குவது, ஜாமீன் போடுவதை தவிர்க்கவும்.
புதிய தொழில் வாய்ப்புகள் தேடி வந்தாலும் சிந்தித்து முடிவு செய்ய வேண்டும். பங்குச் சந்தை ஆதாயம் குறையும். குரு பகவான் அதிசாரமாக கடக ராசிக்குள் நுழைகிறார். வீடு வாங்குவது, வீடு கட்டுவது சம்மந்தமான முயற்சிகளை எடுப்பீர்கள். உத்தியோகத்தில் தனித் தன்மையுடன் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய காலம்.
சனியின் வக்ர நிவர்த்திக்குப் பிறகு திருமணம் நடைபெறக்கூடிய சாத்தியக் கூறுகள் உள்ளது. முக்கிய காரியங்கள் நிறைவேற்றுவதில் இடையூறுகள், தடைகள் இழுபறிகள் வந்தாலும் தைரியமும், தன் நம்பிக்கையும் குறையாது. குழந்தை பேறு கிடைக்கும். ராஜா அலங்கார முருகன் வழிபாடு நிம்மதியை அதிகரிக்கும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மேஷம்
வார ராசிபலன் 28.9.2025 முதல் 4.10.2025 வரை
28.9.2025 முதல் 4.10.2025 வரை
அனுகூலமான வாரம். ராசி அதிபதி செவ்வாய் தன் வீட்டை தானே பார்ப்பதால் பிறருக்கு வழிகாட்டியாக வாழ்வீர்கள். எந்த ஒரு செயலிலும் சுறுசுறுப்பாக செயல்படும் தன்மை கூடும். புதிய நல்ல வாய்ப்புகள் தேடி வரும். அதை பயன்படுத்திக் கூடிய சந்தர்ப்பங்களும் உருவாகும். தடைபட்ட பத்திரப்பதிவு இந்த வாரம் நடந்து முடியும்.
புத ஆதித்ய யோகத்தால் மாணவர்களுக்கு கல்வி ஆர்வம் அதிகரிக்கும். பணிபுரியும் பெண்களுக்கு சம்பள உயர்வும், சலுகைகளும் உற்சாகத்தை அதிகரிக்கும். சிலருக்கு அரசின் இலவச தொகுப்பு வீடு கிடைக்கும். தம்பதிகளிடம் புரிதல் அதிகரிக்கும். வாழ்க்கை துணையால் எதிர்பாராத அதிர்ஷ்ட பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு.
ஆரோக்யத்தில் சிறு சிறு பிரச்சினைகள் வந்து போகலாம். சிலர் ஆயுள் காப்பீட்டு பாலிசி எடுக்கலாம். 29.9.2025 அன்று 3.55 காலை வரை சந்திராஷ்டமம் இருப்பதால் முக்கிய பேச்சு வார்த்தைகளை ஒத்தி வைக்கவும். பணம் விஷயத்தில் சிக்கனமாக இருப்பது நல்லது. சனிக்கிழமை விரதம் இருந்து மகாவிஷ்ணுவை வழிபடுவதால் கடன் சார்ந்த பாதிப்புகள் குறையும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மேஷம்
வார ராசிபலன் 21.9.2025 முதல் 27.9.2025 வரை
21.9.2025 முதல் 27.9.2025 வரை
துணிச்சலும் தைரியமும் மிகுந்த வாரம். 2,7-ம் அதிபதி சுக்கிரன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கேதுவுடன் இணைகிறார். பிள்ளைகளின் நலனில் அதிக அக்கறை செலுத்த வேண்டும். திருமண முயற்சிகள் சற்று காலதாமதம் ஆகலாம். பூர்வீகம் சென்று வருவதில் சற்று சிரமம் இருக்கும். பணம் பொருள் சார்ந்த விஷயங்களில் மிகுந்த எச்சரிக்கை தேவை.
அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு அறிமுகம் அல்லாத நபர்களிடம் பணத்தை கொடுக்கக் கூடாது அதேபோல் உங்களுக்கு உதவி செய்வதாக கூறும் அன்னியர்களை நம்ப வேண்டாம். எது எப்படி இருந்தாலும் ராசி அதிபதி செவ்வாய் தன் வீட்டை தானே பார்ப்பதால் எந்த நிலையிலும் தைரியம் குறையாது.
26.9.2025 அன்று மாலை 3.24 மணி முதல் 29.9.2025 அன்று அதிகாலை 3.55 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பொருளாதார முன்னேற்றத்தில் தடை உருவாகக்கூடிய வாய்ப்புகள் உள்ளது. உயர் அதிகாரிகளிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. எதிர்மறை எண்ணங்களை கட்டுப்படுத்த வேண்டும். நவராத்திரி காலங்களில் அம்மன் கோவில்களுக்கு குங்குமம் வாங்கித் தருவதால் மங்களம் உண்டாகும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மேஷம்
வார ராசிபலன் 14.9.2025 முதல் 20.9.2025 வரை
14.9.2025 முதல் 20.9.2025 வரை
புதிய வளர்ச்சிக்கான பாதை உருவாகும் வாரம். ராசி அதிபதி செவ்வாய் சம சப்தம பார்வையால் ராசியை பார்க்கிறார். ராசி பலம் பெறுவதால் செயல்பாடுகளில் ஏற்பட்ட தடை தாமதங்கள் அகலும். வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். பிரச்சினைகளுக்கு மத்தியில் வாழ்ந்த உங்களுக்கு புதிய நம்பிக்கை, தைரியம் கூடும்.
புதிய வீடு கட்டுதல், வீட்டை விரிவு செய்தல், நவீன பொருட்களை சேர்த்தல் போன்ற எண்ணங்கள் அதிகரிக்கும். கூட்டாளிகளின் ஒற்றுமையற்ற செயல்களால் கூட்டுத் தொழிலில் மந்த நிலை ஏற்படும். வேலைப் பளு சற்று அதிகரிக்கும். சிலருக்கு உஷ்ண நோய் அல்லது கண் தொடர்பான மருத்துவ சிகிச்சை செய்ய நேரும். பருவ வயதினருக்கு திருமணம் நிச்சயமாகும்.
பொருளாதாரம் சிறப்பாக அமைந்து குடும்பத் தேவைகள் நிறைவு பெறும். சொத்துக்கள் மீதான வழக்குகள் தள்ளுபடியாகும் அல்லது தீர்ப்பு சாதகமாகும். மாணவர்கள் தடைபட்ட படிப்பை மீண்டும் தொடரக்கூடிய வாய்ப்புகள் உள்ளது. மகாளய பட்ச காலத்தில் விலங்குகளுக்கு உணவிடுவதால் பொருளாதார குற்றம் நீங்கும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மேஷம்
வார ராசிபலன் 7.9.2025 முதல் 13.9.2025 வரை
7.9.2025 முதல் 13.9.2025 வரை
கனவுகள் நனவாகும் வாரம். 7.9.2025 அன்று சந்திர கிரகணம் முடிந்த உடன் கேதுவால் ஏற்பட்ட பாதிப்புகள் குறைந்து பூர்வ புண்ணிய ஸ்தானம் பலம் பெறும். குடும்பத்தை வழி நடத்தக் கூடிய திறமை, துணிச்சல் அதிகரிக்கும். எதிர்பார்த்த மாற்றங்கள் உருவாகும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் உருவாகி அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும்.
தொழில் உத்தியோகத்தில் ஏற்பட்ட இழப்புகள் குறைய துவங்கும். உற்றார் உறவினர்கள் உங்களின் வளர்ச்சியை பார்த்து பொறாமைப்படுவார்கள். தடைபட்ட முன்னோர்களின் சொத்துக்கள் தேடி வரும். திருமணம் குழந்தை பாக்கியத்தில் நிலவிய தடைகள் அகலும். மனதிற்கு பிடித்த வாழ்க்கை துணை அமையும்.
புதிய நிலம் வாங்குவது வீடு கட்டுவது போன்ற புண்ணிய பலன்கள் நடக்கும். அரசியல்வாதிகளுக்கு ஏற்பட்ட அவப்பெயர்கள் விலகும். புண்ணிய காரியங்கள் செய்து மகிழக்கூடிய நேரம் உள்ளது. சின்னத்திரை பெரிய திரை கலைஞர்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் உண்டாகும். தினமும் சூரிய நமஸ்காரம் செய்து ஆதித்ய ஹிருதயம் படிக்க நன்மைகள் கூடும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மேஷம்
வார ராசிபலன் 31.8.2025 முதல் 6.9.2025 வரை
31.8.2025 முதல் 6.9.2025 வரை
நல்ல வாய்ப்புகள் தேடி வரும் வாரம். ராசிக்கு 5-ல் சூரியன், புதன், கேது சேர்க்கை உள்ளது. இதனால் சுக சவுகரியங்கள் அதிகரிக்கும். வாழ்நாள் எண்ணங்கள், லட்சியங்கள், கனவுகள் நிறைவேறும். எந்தச் செயலையும் திறம்படச் செய்யும் செயல்திறன் கூடும். உயர் பதவி கிடைக்கும். அதிர்ஷ்டம் சார்ந்த செயல்களை நோக்கி பயணிப்பீர்கள்.
விதவிதமான பொன், பொருள், ஆபரணங்கள் கிடைக்கும். கர்மம் செய்ய புத்திரன் பிறப்பான். புகழ், அந்தஸ்தை நிலைப்படுத்தும் கவுரவப் பதவிகள் தேடி வரும். சிலருக்குப் புண்ணியத் திருத்தல யாத்திரைகள் செல்வதால் மகிழ்ச்சியும் மன அமைதியும் ஏற்படும். பணப்புழக்கம் சரளமாக இருக்கும். எதிர்பாராத தன லாபம் உண்டாகும். விவசாயிகளுக்கு நல்ல விளைச்சல் உண்டாகும்.
கண் அறுவை சிகிச்சை வெற்றியாகும். கணவன்- மனைவி நெருக்கம் அதிகரிக்கும். 1.9.2025 அன்று இரவு 7.55 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால் தொலை தூரப் பயணங்களை தவிர்க்கவும். குடும்ப பிரச்சினையை வெளி நபர்களுடன் பகிரக் கூடாது. பிரதோஷ காலங்களில் நந்தி பகவானுக்கு பச்சரிசி மாவினால் அர்ச்சனை செய்ய கடன் தொல்லைகள் குறையத்து வங்கும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மேஷம்
வார ராசிபலன் 24.8.2025 முதல் 30.8.2025 வரை
பொருளாதாரத்தில் தன்னிறைவு உண்டாகும் வாரம். தனஸ்தான அதிபதி சுக்கிரன் சுகஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். மனக் கவலைகள் அகலும்.லாபம் இல்லாத செயல்களில் ஈடுபடமாட்டீர்கள். வாழ்க்கையே போராட்டமாக இருந்த நிலை மாறும்.சீரான தொழில் வளர்ச்சியால் மன நிம்மதி கூடும். முடங்கி கிடந்த, தடைபட்ட அனைத்து செயல்களும் வெற்றி வாய்ப்பை தேடித்தரும். வெளிநாட்டு வேலை கிடைக்கும். செலவுகள், விரயங்கள் குறையும். சேமிப்புகள் கூடும்.
ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். புதிய வாகனம் வாங்குதல் அல்லது நிலத்தில் முதலீடு செய்தல் போன்ற நல்ல பலன்கள் நடக்கும். தடைபட்ட வாடகை வருமானம், குத்தகை பணம் வரத்துவங்கும். சிலருக்கு புதிய நகைகள், ஆபரணங்கள் வாங்கும் யோகம் ஏற்படும். பெற்றோர்கள் பெரியோர்களின் நல்லாசிகள் கிடைக்கும். ஆரோக்கியத்தில் தெளிவு ஏற்படும். குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு பெருகும். 30.8.2025 அன்று காலை 7.53-க்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் எந்த செயலையும் பலமுறை யோசித்து செயல்பட வேண்டும். விநாயகருக்கு அவல், பொரி படைத்து வழிபடவும்.
மேஷம்
வார ராசிபலன் 17.8.2025 முதல் 23.8.2025 வரை
17.8.2025 முதல் 23.8.2025 வரை
திட்டமிட்டு வெற்றி பெறும் வாரம். பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சூரியன் ஆட்சி பலம் பெற்று இருக்கிறார். மனதில் நிறைவும் நெகிழ்ச்சியும் உண்டாகும். கடன் வாங்கி, அட்வான்ஸ் வாங்கி போனசில் கடனை கழித்து வாழ்க்கையை நடத்திய நடுத்தர வர்க்கத்தினரின் வருமானம் உயரும். மேல் அதிகாரிகளின் அன்பும், ஆதரவும், பாராட்டும் கிடைக்கும்.
கணவன்-மனைவி ஒற்றுமையால் மகிழ்ச்சி கூடும். ஆன்ம பலம் பெருகி ஆரோக்கியத் தொல்லை குறையும். கைவிட்டுப் போகும் நிலையில் இருந்த பூர்வீகச் சொத்துக்களின் தீர்ப்பு சாதகமாகும். திட்டமிட்டு வெற்றி பெறுவீர்கள். தங்கம், வெள்ளி, அழகு, ஆடம்பரப் பொருட்கள் அதிகம் சேரும். காரியத்தடை, மன சஞ்சலம் குறையும். வாடகை வீட்டில் வசித்தவர்கள் சொந்த வீட்டில் குடியேறுவார்கள்.
உங்களின் கவுரவம், அந்தஸ்து உயரும். பணப் புழக்கம் சரளமாக இருக்கும். சீட்டுப் பணம், ரேஸ், பங்குச் சந்தை மூலம் வருமானம் பெருகும். ஒரு சிலர் பூர்வீகச் சொத்தை விற்று புதிய சொத்து வாங்குவார்கள். மறுமணம் கைகூடும். ஸ்ரீ ரங்கநாதரை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மேஷம்
வார ராசிபலன் 10.8.2025 முதல் 16.8.2025 வரை
10.8.2025 முதல் 16.8.2025 வரை
புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறும் வாரம். 9ம்மிடமான பாக்கிய ஸ்தானத்திற்கு குரு செவ்வாய் சனி பார்வை. இந்த அமைப்பு நல்ல எதிர்காலத்திற்கான அஸ்திவாரமாக அமையும். லவுகீக உலகில் அனுபவிக்க வேண்டிய அனைத்து இன்பங்களையும் அடைவீர்கள். மனதிற்கு மகிழ்ச்சி தரும் இனிய சம்பவங்கள் நடைபெறும்.
தலைமைப் பண்பு மிகுதியாகும். கவுரவப் பதவிகள் தேடி வரும். நீண்ட கால திட்டங்களும் லட்சியங்களும் நிறைவேறும். குல கவுரவத்தை கட்டி காப்பீர்கள். உற்றார், உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். எதிர்பாராத அதிர்ஷ்டமான யோகங்கள் உண்டாகலாம். உள்நாட்டு பணம், வெளிநாட்டு பணம் உங்கள் கையில் தாராளமாக புழங்கும்.
எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். திருமணம், குழந்தை பேறு, வீடு, வாகன யோகம், பொன், பொருள் சேர்க்கை என பல்வேறு பாக்கிய பலன்கள் நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுடன் கூடிய பணிமாற்றம் கிடைக்கும். ஆயுள் ஆரோக்கியம் பற்றிய பயம் அகலும். கோகுல அஷ்டமி அன்று வெண்ணை படைத்து கிருஷ்ணரை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மேஷம்
வார ராசிபலன் 3.8.2025 முதல் 9.8.2025 வரை
3.8.2025 முதல் 9.8.2025 வரை
குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் விலகும் வாரம். ராசி அதிபதி செவ்வாய் தனது எட்டாம் பார்வையால் ராசியை பார்க்கிறார். தன வரவுகள் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். குடும்ப குழப்பங்கள் குறையும். ஆடம்பர மோகம், ஆசை அதிகமாகும். வியாபாரிகளுக்கு வங்கிக் கடன்கள் உடனடியாக கிடைக்கும். அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும்.
இதுவரை கடனால் வம்பு வழக்கால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் நேரம் வந்துவிட்டது. சின்னத்திரை கலைஞர்கள் மற்றும் சினிமா துறையினர் அதிக நற்பலன் அடைவர். குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய சிந்தனை மிகையாகும். காதலில் அவசரமான நடவடிக்கையை தவிர்க்கவும்.
அரசியல் பிரமுகர்கள் தொண்டர்களிடம் நல்லுறவைத் தக்க வைத்துக் கொள்வீர்கள். 5.8.2025 அன்று காலை 11.23 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பிறருக்கு நல்லது செய்தாலும் அது தீமையாகவே முடியும் என்பதால் அடுத்தவர்களின் விசயத்தில் தலையிடுவதைத் தவிர்க்கவும். தொலை தூர பயணங்களை தவிர்க்க வேண்டும். வரலட்சுமி விரத நாட்களில் மங்களப் பொருட்கள் தானம் வழங்கவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406






