என் மலர்tooltip icon

    மேஷம் - இன்றைய ராசி பலன்கள்

    மேஷம்

    இன்றைய ராசிபலன் - 8 ஜனவரி 2025

    வளர்ச்சியில் ஏற்பட்ட தளர்ச்சி அகலும் நாள். நட்பால் நல்ல காரியம் நடைபெறும். தொழில் முன்னேற்றம் கூடும். உதிரி வருமானங்கள் உண்டு. உயர் அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன் - 7 ஜனவரி 2025

    சவால்களை சமாளிக்க வேண்டிய நாள். தனித்து செயல்படும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். அதிகாலையிலேயே ஆதாயம் தரும் தகவல் வரலாம். இடமாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன் - 6 ஜனவரி 2025

    கல்யாண முயற்சி கைகூடும் நாள். விருப்பங்கள் நிறைவேற நண்பர்கள் உதவி செய்வர். வழக்குகள் சாதகமாகும். வருமானத்தை உயர்த்த புதிய திட்டம் தீட்டு வீர்கள்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன் - 5 ஜனவரி 2025

    அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் கிடைக்கும் நாள். உடன்பிறப்புகளின் வழியில் உள்ளம் மகிழும் செய்தியொன்று வந்து சேரலாம். சொத்து சம்பந்தமான வழக்குகள் சாதகமாக முடியும்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன் - 4 ஜனவரி 2025

    வழிபாட்டின் மூலம் வளர்ச்சி கூடும் நாள். நல்லவர்களின் தொடர்பு நீடிக்கும். மூத்த சகோதரர்கள் உங்களின் முன்னேற்றத்திற்கு ஒத்துழைப்பு செய்வர். மாமன், மைத்துனர்களின் உதவி கிட்டும். 

    மேஷம்

    இன்றைய ராசிபலன் - 3 ஜனவரி 2025

    அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். அரசு தொடர்பான காரியங்களில் அனுகூலம் உண்டு. தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன் - 2 ஜனவரி 2025

    வளர்ச்சி கூடும் நாள். வாங்கல் கொடுக்கல்கள் திருப்தி தரும். வரன்கள் வாயில் தேடி வரும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். தொழிலில் தொல்லை தந்தவர்கள் விலகுவர்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன் - 1 ஜனவரி 2025

    வாழ்த்துச் செய்திகளால் மகிழ்ச்சி கூடும் நாள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள். உறவினர்கள் வழியில் சந்தோஷமான தகவல் உண்டு.

    மேஷம்

    இன்றைய ராசிபலன் - 31 டிசம்பர் 2024

    சாமர்த்தியமான பேச்சுக்களால் சாதனை படைக்கும் நாள். இல்லத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கருத்துக்களை ஏற்றுக்கொள்வர்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன் - 30 டிசம்பர் 2024

    நன்மைகள் வந்து சேர ராம தூதனை வழிபட வேண்டிய நாள். நம்பிக்கைகள் நடைபெறும். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள் வந்து சேரலாம். கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழ்வீர்கள்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன் - 29 டிசம்பர் 2024

    மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். எடுத்த முயற்சியில் தாமதம் ஏற்படலாம். வரவைக் காட்டிலும் செலவு கூடும். உடல்நலத்தில் அக்கறை தேவை. உத்தியோகத்தில் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்காது.

    மேஷம்

    இன்றைய ராசிபலன் - 28 டிசம்பர் 2024

    திட்டமிட்ட காரியங்களில் திடீர் மாற்றம் ஏற்படும் நாள். வீண் விரயங்கள் ஏற்படும். தொழில் வளர்ச்சியில் குறுக்கீடுகள் உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரிகள் கோபத்திற்கு ஆளாக நேரிடும். 

    ×