என் மலர்tooltip icon

    மேஷம் - இன்றைய ராசி பலன்கள்

    மேஷம்

    இன்றைய ராசிபலன் - 20 ஜனவரி 2025

    ஆதாயம் தரும் தகவல் அதிகாலையிலேயே வந்து சேரும் நாள் அஸ்திவாரத்தோடு நின்ற கட்டிடப் பணி மீதியும் தொடரும். உத்தியோக முன்னேற்றம் கருதி எடுத்த புது முயற்சி வெற்றி தரும்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன் - 19 ஜனவரி 2025

    நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும் நாள். நெஞ்சம் மகிழும் சம்பவம் இல்லத்தில் நடைபெறும். தூரதேசத்திலிருந்து உத்தியோகம் சம்பந்தமான அழைப்புகள் வரலாம். தொழில் முன்னேற்றம் உண்டு.

    மேஷம்

    இன்றைய ராசிபலன் - 18 ஜனவரி 2025

    சொந்த பந்தங்களால் நன்மை கிடைக்கும் நாள். நிதி நிலை உயரும். சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் உயர்ந்தநிலை அடைய சந்தர்ப்பம் கைகூடி வரும். தொழில் சீராக நடைபெறும். 

    மேஷம்

    இன்றைய ராசிபலன் - 17 ஜனவரி 2025

    நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும் நாள். உத்தியோக நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். வீட்டுப் பராமரிப்பில் ஆர்வம் காட்டுவீர்கள். கூட்டுத்தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன் - 16 ஜனவரி 2025

    ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும் நாள். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். பயணத்தில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்கள் கைகொடுத்து உதவுவர்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன் - 15 ஜனவரி 2025

    நந்தி வழிபாடு நன்மை தரும் நாள். பெரிய மனிதர்களின் சந்திப்பால் பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்வீர்கள். சேமிப்பு அதிகரித்தாலும் சிக்கனத்தைக் கையாளுவீர்கள். தொழில் ரீதியான பயணங்கள் ஏற்படலாம்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன் - 14 ஜனவரி 2025

    நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும் நாள். எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். ஆலய வழிபாட்டில் ஆர்வம் கூடும். உத்தியோகத்தில் தற்காலிகப் பணி நிரந்தரப் பணியான தகவல் கிடைக்கும். 

    மேஷம்

    இன்றைய ராசிபலன் - 13 ஜனவரி 2025

    நிலவு வழிபாட்டால் நிம்மதி கிட்டும் நாள். உடன்பிறப்புகளின் உதவி கிடைக்கும். பயணத்தால் பலன் உண்டு. தொழில் பங்குதாரர்கள் இணக்கமாக நடந்து கொள்வர். கடன் சுமை குறையும். 

    மேஷம்

    இன்றைய ராசிபலன் - 12 ஜனவரி 2025

    ஆதாயம் அதிகரிக்கும் நாள். அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். வருங்கால நலன் கருதி தீட்டிய திட்டங்கள் வெற்றி பெறும். தொழில் ரீதியாக வரவேண்டிய பணவரவுகள் வந்து சேரலாம்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன் - 11 ஜனவரி 2025

    சிவாலய வழிபாட்டால் சிறப்புகள் வந்து சேரும் நாள். பணத்தேவைகள் பூர்த்தியாகும். ஆரோக்கியத்தில் ஏற்பட்ட அச்சுறுத்தல்கள் அகலும். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன் - 10 ஜனவரி 2025

    விருப்பங்கள் நிறைவேற விஷ்ணுவை வழிபட வேண்டிய நாள். வீடு, வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோக மாற்றச் சிந்தனை மேலோங்கும் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது.

    மேஷம்

    இன்றைய ராசிபலன் - 9 ஜனவரி 2025

    திட்டமிட்ட காரியமொன்றில் திடீர் மாற்றம் ஏற்படும் நாள். உடல் நலத்தில் கவனத்தைச் செலுத்துவது நல்லது. மறதி அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஒத்துழைப்புக் குறையும்.

    ×