என் மலர்
கும்பம் - வார பலன்கள்
கும்பம் - Kumbam
இந்த வார ராசிப்பலன்
3.10.2022 முதல் 9.10.2022 வரை
முன்னேற்றமான மாற்றங்கள் ஏற்படும் வாரம். தன குருவால் வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும்.பணவரவு அதிகரிக்கும். எதிர்பாராத செலவுகளும் ஏற்படும். பங்குதாரர்கள் உங்கள் முயற்சிகளுக்கு ஆதரவாக இருப்பார்கள். உழைப்பிற்கேற்ற ஊதியம் உண்டு. தொழிலில் ஏற்படும் போட்டி பொறாமைகளை சமாளிக்கப் பழக வேண்டும்.
ஏழரைச் சனியின் காலம் என்பதால் புதிய முயற்சிகளை ஒரு முறைக்குப் பல முறை யோசித்து செய்ய வேண்டும். வேலையில் இருப்பவர்களுக்கு அலுவலகச் சூழ்நிலை மகிழ்ச்சி தருவதாக இருக்கும். சிலருக்கு ஆலயத் திருப்பணிகள் செய்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். ஒரு சிலருக்கு பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு கிடைப்பதற்கு சாத்தியமுண்டு. இரண்டா வது திருமண முயற்சி கைகூடும்.
பெண்கள் விலை உயர்ந்த ஆபரணங்களை இரவல் கொடுப்பதை வாங்குவதை தவிர்க்கவும். மாணவர்களின் கல்வி நிலை சிறப்பாக இருக்கும். 9-ம் அதிபதி சுக்ரன் நீசம் பெற்றதால் தந்தையின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. பாலா திரிபுர சுந்தரியை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கும்பம் - Kumbam
இந்த வார ராசிப்பலன்
26.9.2022 முதல் 2.10.2022 வரை
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான வாரம் இது. கணவரின் அன்பும் ஆதரவும் உற்சாகம் தரும். ராசி அதிபதி சனி விரய ஸ்தானத்தில் இருப்பதால் சுப விரயங்கள் செய்ய உகந்த காலம். விரயச்சனி நடப்பதால் எதையும் யோசிக்காமல் ஒரு வீட்டை வாங்கிப் போடுவது உத்தமம். நிலைமை சீராகும் போது கடன் தானாக அடைபட்டு விடும்.
7ம் அதிபதி சூரியன் 8ல் இருப்பதால் எதிரிகளின் பலம் அதிகரித்திருப்பதால் அமைதியாக இருப்பது தொழிலையும், தொழில் கூட்டாளிகளையும் காக்கும். சிலர் நண்பர்கள் போல் நடித்து காலை வாரி விடுவார்கள். புதிய நண்பர்கள் மூலமாக வீண் அலைச்சலும் காரியத்தடையும் உண்டாகும் என்பதால் கவனம் தேவை.கணவனால் மனைவிக்கும் மனைவியால் கணவனுக்கும் நன்மதிப்பு,பெருமை உண்டாகும்.
27.9.2022 மாலை 6.17 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் தனிமைபடுத்தப்பட்டது போன்ற ஒரு மனநிலையே இருக்கும். குடும்பத்தினருடன் மனவருத்தம், சங்கடம் பேசாமல் இருத்தல் போன்ற நிலைகளை சந்திக்கலாம். ஆரோக்கி யத்தில் கவனம் தேவை. சிவன், பார்வதி, பிள்ளையார், முருகன் இணைந்த குடும்ப படம் வைத்து வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கும்பம் - Kumbam
இந்த வார ராசிப்பலன்
19.9.2022 முதல் 25.9.2022 வரை
திட்டங்கள், எண்ணங்கள் செயலாக்கம் பெறும். எதற்கும் முடிவு காண முடியாமல் தவித்த நிலை மறையும். தன வரவில் தன் நிறைவு உண்டாகும்.3ல் செவ்வாய் இருப்பதால் காவலர்கள், மிலிட்டரி, விளையாட்டுத்து றையினர்களின் சாதனைகள் போற்றப்படும். பங்கு வர்த்தகத்தில் நன்மை, தீமை கலந்து இருக்கும்.
வெளிநாட்டு தொடர்பு அல்லது வேற்று மதத்தினர் ஆதரவால் புதிய தொழில் வாய்ப்பு கிட்டும். செய்யும் தொழிலில் லாபம், முன்னேற்றம் உண்டு. சிலர் வியாபார முதலீட்டை அதிகரிக்க கடன் தொகைக்கு விண்ணப்பிக்க லாம். பணிவான,நடத்தைகள், செயல்பாடுகள் உயர் அதிகாரி களால் பாராட்டப்படும். திருமணம் பற்றிய நல்ல முடிவுகள் உங்கள் எண்ணம் போல் நிறைவேறும். குடும்பத்தில் நிம்மதி நீடிக்கும். அரசு அதிகாரிகளுக்கு பதவி உயர்வு நிச்சயம்.
பெண்களுக்கு சரளமான பண புழக்கம் இருக்கும்.கொடுத்த கடன் திரும்பி வரும். பாக்கிகள் வசூலாகும். 25.9.2022 அன்று காலை 11.20-க்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் சந்திராஷ்டமம் ஆரம்பிக்கும் முன்பு முக்கியமான பணிகளை விரைந்து முடித்து விடவும். அமாவாசையன்று காக்கைக்கு எள் சாதம் வைக்கவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கும்பம் - Kumbam
இந்த வார ராசிப்பலன்
12.9.2022 முதல் 18.9.2022 வரை
ஆதாயம் நிறைந்த வாரம். 3,10-ம் அதிபதி செவ்வாய் 4ல் சஞ்சரிப்பதால் ஜாதகருக்கு சுகபோக வாழ்க்கை வீடு, வாகனம், வயல்வெளி, தோட்டம் வாங்கும் யோகம் உண்டு. ஆரோக்கியம் அதிகரிக்கும். ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் துறையினர் தொழிலில் சாதனை படைப்பார்கள்.தாய் வழி உறவுகளின் அன்பும், அனுசரனையும் உண்டு. பரிபூரண குல தெய்வ அருள் உண்டு. சமுதாய அந்தஸ்து அதிகரிக்கும். பூர்வ புண்ணிய பலம் உண்டு.
பூர்வீகச் சொத்தால் பயன் உண்டு.உயர்கல்வி படிக்கும் ஆர்வம் அதிகரிக்கும். பெற்றோர்களால் பிள்ளைகளுக்கு பிள்ளைகளால் பெற்றோருக்கு ஆதாயம் உண்டு. குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். பிள்ளையில்லாச் சொத்து, லாட்டரி, பினாமி சொத்து கிடைக்கும் வாய்ப்புள்ளது.வியாபாரத்தில் லாபம் உண்டு.
பணக்கஷ்டம் தீரும். பொருள் பற்றாக்குறை அகலும். குடும்பத்தில் அமையும் நிம்மதியும் நிலவும்.புதிய வேற்று மத நண்பர்கள் நண்பிகள் கிடைப்பார்கள். சில்லரை வணிகர்க ளுக்கு புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். சனிக்கிழமை முருகனை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கும்பம் - Kumbam
இந்த வார ராசிப்பலன்
5.8.2022 முதல் 11.9.2022 வரை
புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறும் வாரம். ராசியை சூரியனும் சுக்ரனும் பார்ப்பதால் புகழையும் செல்வாக்கையும் அதிகரித்துக் கொள்ள புத்துணர்ச்சியோடு செயல்படுவீர்கள். எதிர்ப்புகள் அனைத்தும் விலகி உங்களின் திறமையும், செயல்திறனும் வெளிப்படும். தன லாப அதிபதி குருவால் வாக்கு சாதுரியத்தில் வியாபாரத்தில் பெரிய மாற்றத்தை கொண்டு வருவீர்கள்.ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் புதிய சாதனை படைப்பீர்கள்.
வியாபாரத்தில் நிலவிய முட்டுக்கட்டைகளை நீக்குவீர்கள். தொழிலை மேம்படுத்த வியாபார நிமிர்த்தமாக வெளியூர் பயணங்கள் செல்வீர்கள். தொழிலுக்கு தேவையான உதவிகளை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடம் இருந்து கிடைக்கப்பெறுவீர்கள். கொடுக்கல் வாங்கலில் நிலவிய தடை, தாமதங்கள் விலகும்.
பிள்ளைகளின் நடவடிக்கைகள் மற்றும் கல்வி ஆர்வம் பெற்றோர்களுக்கு பெருமையைத் தேடித்தரும். இதுவரை சொந்தவீடு அமையாதவர்களுக்கு இப்போது கிடைக்கும்.பெண்களுக்கு புகுந்த வீட்டினரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். எதிர்கால நல்வாழ்விற்கான அடித்தளங்கள் அமைய சக்ரத்தாழ்வாரை வழிபட்டால் முன்னேற்றம் அதிகரிக்கும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கும்பம் - Kumbam
இந்த வார ராசிப்பலன்
29.8.2022 முதல் 4.9.2022 வரை
பொருளாதார முன்னேற்றம் உண்டாகும் வாரம். ராசி அதிபதி சனியும், தன, லாப அதிபதி குருவும் வக்ர கதியில் சஞ்சரிப்பதால் நேரத்திற்கு சாப்பிட முடியாமல் கடுமையாக உழைக்க நேரும். அடிமைத் தொழிலில் இருப்பவர்களுக்கு சொந்த தொழில் செய்யும் எண்ணம் உதயமாகும்.
கூடுதல் வருவாய்க்கு ஆசைப்பட்டு புதிய நிதி நிறுவனங்களில் முதலீடு செய்வதை தவிர்க்கவும். மாறாக ஸ்திர சொத்துக்களில் முதலீடு செய்யலாம். சிலர் ஏழரைச் சனியின் காலம் என்பதை மறந்து பரம்பரைச் சொத்து, முன்னோர்களின் வங்கி சேமிப்பு இவற்றை பிரிக்க உற்றார் உறவினர்களை நிர்பந்திப்பார்கள் ஆடம்பர விருந்து, விழாக்களில் கலந்து இன்பம் அடைவீர்கள்.
வராக்கடன்கள் வசூலாகும். தம்பதிகளிடம் நெருக்கம் ஏற்படும்.பெண்களின் திறமைகள் வீட்டிலும் வேலை செய்யும் இடத்திலும் பிரமிக்க வைப்பதாக இருக்கும்.
29.8.2022 காலை 4.15 மணி முதல் 31.8.2022 பகல் 12.03 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய நபர்களுக்கு கடன் கொடுப்பதை தவிர்க்கவும். வெளியூர் பயணத்தை ஒத்தி வைக்கவும். சுப பலனை அதிகரிக்க திருக்கடையூர் அபிராமி அம்மனை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கும்பம் - Kumbam
இந்த வார ராசிப்பலன்
22.8.2022 முதல் 28.8.2022 வரை
நினைத்ததை சாதித்துக் கொள்ளக் கூடிய வாரம். தன குருவால் தொழில் சிறப்பாக இருக்கும். பேச்சுத் திறமையால் வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுப்பீர்கள். கூட்டாளிகளிடம் இருந்து வந்த பிரச்சினைகள் அகலும்.பிறமொழி பேசுபவர்களின் உதவிகள் கிடைக்கும். இழந்த பொருட்கள் மீண்டும் திரும்ப உங்களிடமே வந்து சேரும்.
குடும்பத்தில் மனம் மகிழும் படியான நல்ல நிகழ்வுகள் நடக்கும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு, புதிய பொறுப்புகள் வந்து சேரும். பெண்கள் சாதுரியமாக பேசி எல்லா காரியத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். அனுபவப் பூர்வமான அறிவுத் திறன் அதிகரிக்கும்.உடல் ஆரோக்கியம் மேம்படும். பணவரத்து கூடும். பொறுப்புகள் அதிகரிக்கும்.
பூமி, நிலம், வீடு வாங்கும் யோகம் அதிகரிக்கும். திருமண வயதினருக்கு திருமணம் உறுதியாகும்.சந்தான பாக்கியம் இல்லாதவர்களுக்கு தெய்வ அனு கூலத்தில் குழந்தை பிறக்கும். தம்பதிகள் ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வதன் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். சுவாமி ஐயப்பனை ஆத்மார்த்தமாக வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கும்பம் - Kumbam
இந்த வார ராசிப்பலன்
15.8.2022 முதல் 21.8.2022 வரை
நினைத்த காரியங்கள் கைகூடிவரும் வாரம். 3,10-ம் அதிபதி செவ்வாய் 4-ம் இடத்தில் நின்று தன் வீட்டை தானே பார்ப்பதால் கடந்த காலத்தில் வாங்கிய நிலத்தை பத்திரப் பதிவு செய்வீர்கள். புதிய முயற்சியில் வியாபாரத்தில் அதிக லாபம் பார்ப்பீர்கள். தொழிலுக்குத் தேவையான உதவிகளை வங்கியில் இருந்து பெறுவீர்கள். முதலாளியின் அன்பைப் பெறுவதற்கு கடுமையாக உழைக்க நேரும். பொருளாதார முன்னேற்றம் சிறப்பாக இருக்கும்.
ஆன்லைன் வியாபாரம் அதிக லாபத்தைக் கொடுக்கும். எல்லோரையும் மகிழ்விக்கக் கூடிய செயல்கள் செய்து குடும்பத்தில் நிம்மதியை அதிகரிப்பீர்கள். 4,9-ம் அதிபதி சுக்ரன் 6-ம் இடத்தில் நிற்பதால் சுகவீனத்தால் வேலைக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டால் நிர்வாகத்திற்கு முறையாகத் தெரியப்படுத்துங்கள்.
அலட்சியமாக இருந்து வேலையை இழந்து விடாதீர்கள்.7-ம் அதிபதி சூரியன் 5-ம் அதிபதி புதனுடன் 7-ல் ஆட்சி பலம் பெறுவதால் கணவன்-மனைவி இரு வரும் மனமொன்றி நடந்துகொள்வார்கள். சிலருக்கு காதல் திருமணம் நடக்கும்.குடும் பத்துடன் உல்லாசப் பயணம் செல்வீர்கள். பெண்கள் யாருக்கும் நகைகளை இரவல் கொடுக்க கூடாது. தின மும் திருக்கோளாற்று பதிகம் படிக்கவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கும்பம் - Kumbam
இந்த வார ராசிப்பலன்
8.8.2022 முதல் 14.8.2022 வரை
புத்திசாலித்தனத்தால் சாதனை படைக்கும் வாரம். தன ஸ்தான குருவிற்கு சனி பார்வை கிடைப்பதால் பணவரத்து அதிகமாகி, வெற்றி கரமான தொழில் முன்னேற்றங்கள் ஏற்படும். சிறிய முதலீட்டில் அதிக லாபம் பார்ப்பீர்கள். எதிர்பாராத இடங்களில் இருந்து பண வரவு உண்டாகும். பங்குச்சந்தை வியாபாரம் சிறப்பாக இருக்கும்.
ஆன்லைன் வர்த்தகங்கள் அபரிமிதமான லாபத்தைக் கொடுக்கும். தன குருவால் உங்கள் வாக்கு நிறைவேறும். பெண் பணியாளர்களுக்கு அரசு உதவிகள் உடனடியாகக் கிடைக்கும். தந்தை வழி உறவுகளால் நன்மை ஏற்படும்.விவசாயிகளுக்கு மகசூல் நன்றாக இருக்கும்.கால்நடைகளுக்கு சிறு பராமரிப்புச் செலவுகள் ஏற்படும்.
வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொள்வீர்கள். அரசுத்துறை ஊழியர்கள் புதிய வீடு கட்ட திட்டம் போடுவார்கள். முதலாளிகளின் பாராட்டுதலால் பணியாளர்கள் பெருமிதம் அடைவார்கள். புதிய வீடு வாங்கலாம், அல்லது மாறலாம். 7-ம் அதிபதி சூரியன் 6-ல் சஞ்சரிப்பதால் உங்கள் நண்பர்களால் பண இழப்பு ஏற்பட்டு மன நிம்மதி குறையும். திருமண முயற்சிகள் காலதாமதமாகும். சாலையோர வாசிகளுக்கு உணவு, உடை மருத்துவ உதவி வழங்கவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கும்பம் - Kumbam
இந்த வார ராசிப்பலன்
1.8.2022 முதல் 7.8.2022 வரை
கடந்த காலத்தில் நிறைவேறாத சில எண்ணங்கள் ஈடேறும் வாரம். ராசி அதிபதி சனி 12-ல் மறைந்தாலும் தன, லாப அதிபதி குருவின் சாதகமான சஞ்சாரத்தால் மூத்த சகோதர வழி ஆதாயம், திடீர் அதிர்ஷ்டம், கவுரவப் பதவிகள், மூதாதையர் சொத்துக்கள் கிடைக்கும். நல்ல மாற்றங்கள் வந்து சேரும்.
பொருளாதாரப் பற்றாக் குறை அகலும். ஆடை, ஆபரணச் சேர்க்கை அதிகரிக்கும். மனதை வாட்டி வதைத்த தொழில் கடன்கள் குறையத் துவங்கும். குடும்ப உறுப்பி னர்களிடையே ஒற்றுமை உணர்வு உண்டாகும். ஏழரைச் சனியின் காலம் என்பதால் சுய ஜாதக ரீதியாக எத்தகைய திருமணத் தடை இருந்தாலும் நீங்கி திருமண பாக்கியம் கூடி வரும்.
பட்ட மேற்ப டிப்பு படிக்க விரும்புவர்களின் முயற்சி சாதகமாகும். உத்தியோகத்தில் சக பணியாளர்களால், உயர் அதிகாரிகளால் நிலவிய தொல்லைகள் மாறும். சிலர் விருப்ப ஓய்வு பெறலாம்.
1.8.2022 இரவு 10.30 முதல் 4.8.2022 காலை 6.40 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மனதில் தோன்றும் திட்டங்களை செயல்படுத்துவதில் சற்று கால தாமதம் உண்டாகும். சனிக்கிழமை கால பைரவரை மிளகு தீபம் ஏற்றி வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கும்பம் - Kumbam
வார ராசி பலன்கள்
25.7.2022 முதல் 31.7.2022 வரை
முயற்சிகள் நிறைவேறும் வாரம். எந்த முயற்சி எடுத்தாலும் அதில் வெற்றிக்கனியை பறிக்காமல் விடமாட்டீர்கள். தடைபட்ட நிலுவையில் உள்ள சம்பள பாக்கிகள் இந்த வாரம் கிடைத்துவிடும்.3ல் செவ்வாய், ராகு சம்பந்தம் இருப்பதால் உடன் பிறந்தவர்களுடன் சொத்து தொடர்பான வம்பு வழக்கு அதிகரிக்கும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும்.
சிலருக்கு ரெயில்வேயில் வேலை கிடைக்கும். சிலருக்கு கைநழுவிப் போன ஒப்பந்தங்கள் திரும்ப கிடைக்கும்.விவசாயிகள் புதிய தோட்டங்களை குத்தகைக்கு எடுத்து பயன் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல்பாடுகள் திருப்திகரமாக இருக்கும். உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி மற்றும் சக ஊழியர்கள் வியந்து போவார்கள்.
திருமண முயற்சி கைகூடும். பிரிந்த தம்பதிகள் மீண்டும் இணைவார்கள். இறை வழிபாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். இந்த வாரத்தில் எல்லா வகையிலும் உங்களுக்கு சாதகமான நன்மைகள் உண்டாகும். பிரதோசத்தன்று சிவனுக்கு நெய்அபிசேகம் செய்யவும்.
மீனம்
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கும்பம் - Kumbam
இந்த வார ராசிப்பலன்
18-7-2022 முதல் 24-7-2022 வரை
சாதகமான வாரம். வார ஆரம்பத்தில் பல நல்ல விஷயங்கள் நிறைவேற வாய்ப்புள்ளது. சமூகத்தில் நன்மதிப்பு பெறவும் தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் பெறவும் சாத்தியமான வாரமாக இருக்கும். ஆடித் தள்ளுபடியில் ஆடை ஆபரணம் வாங்க வாய்ப்பு உள்ளது. தாயின் அன்பும் அரவணைப்பும் மகிழ்ச்சி தரும்.
உயர்கல்விக்கு விரும்பிய கல்லூரியில் அட்மிஷன் கிடைக்கும். செவ்வாய் 3ல் ராகுவுடன் இணைந்ததால் முயற்சிகளில் தடை, தாமதங்கள் ஏற்படலாம். சிலருக்கு மதம் மாறும் சிந்தனை மேலோங்கும். சிலருக்கு ஞாபகசக்தி குறைவும். சிலருக்குத் தேவையற்ற, அலைச்சல் தரும் பயணங்கள் மேற்கொள்ள நேரும். வீடு மாற்றம், வேலை மாற்றம் உண்டாகும். சிலருக்கு தெய்வ நம்பிக்கை குறையும். சொத்துதகராறு,பாகப்பிரிவினை போன்றவற்றால் மன சஞ்சலமும் உண்டாகும்.
பேச்சில் நிதானத்துடன் இருந்து உடன் பிறந்தவர்களை அனுசரித்துச் சென்றால் நிம்மதி நீடிக்கும். வாழ்க்கைத் துணையும், தொழில் பங்குதாரரும் நிறையச் செலவை இழுத்து விடு வார்கள். வெளியூரில் வசிப்பவர்கள் பூர்வீகம் வந்து செல்வார்கள். பராமரிப்பு இல்லாத கோவில்களுக்கு பூஜை பொருட்கள் வழங்கவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406






