என் மலர்
கும்பம் - வார பலன்கள்
கும்பம் - Kumbam
இந்த வார ராசிப்பலன்
11.7.2022 முதல் 17.7.2022 வரை
நிலையான வருமானத்திற்காக புதிய திட்டங்களைத் தீட்டும் வாரம்.கடந்த சில வாரங்களாக அதிசார சனிபகவானால் ஏற்பட்ட இன்னல்கள் அகலும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரித்தாலும் உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கும். ஆனால் விரும்பிய இடமாற்றங்கள் கிடைக்காது. சக ஊழியர்கள் நட்புடன் பழகுவார்கள்.அரசு வேலைக்கான வாய்ப்பு உள்ளது.
வெளிநாட்டு வேலை வாய்ப்பு மற்றும் கல்வி முயற்சிகளில் நன்மைகள் நடைபெறும். தீய சகவாசத்தால் தடம் மாறிப் போனவர்கள் நல்வழிப்படுவார்கள். உடன் பிறந்தவர்களின் நலனுக்காக ஒரு பெரிய தொகை செலவிட நேரும். தந்தை உயில் எழுதுவதில் சர்ச்சைகள் உண்டாகும். பாகப்பிரிவினை இழுபறியாகும்.வீடுஅல்லது வேலைமாற்றம் செய்யலாம்.
மூட்டு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் நீங்கும். பிள்ளைகளின் திருமணம், உத்தியோகம், உயர்கல்வி போன்றவற்றால் மகிழ்ச்சி இரட்டிப்பாகும்.சிலருக்கு மறுமணம் நடக்கும். பெண்களுக்கு கணவருடனான ஒற்றுமை திருப்திகரமாக இருக்கும். 3-ம் இடத்தில் செவ்வாய் ராகு சேர்க்கை இருப்பதால் சொத்துக்கள் தொடர்பான முயற்சிகளை ஒத்தி வைக்கவும். சனிக்கிழமை சனிபகவானையும், ஆஞ்சநேயரையும் வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கும்பம் - Kumbam
வார ராசி பலன்கள்
4-7-2022 முதல் 10-7-2022 வரை
மனோதிடம்கூடும் வாரம். மூன்றாம் இடமான முயற்சி, இளைய சகோதர ஸ்தானத்தில் செவ்வாய் ஆட்சி பலம் பெற்றதால் மனதில் தெம்பு, தைரியம் ஏற்படும். இழுபறி நிலைமாறி துரிதமாக காரியங்கள் நடைபெறும். திட்டமிட்டு வெற்றிக் கனியை சுவைப்பீர்கள். உங்களின் முயற்சிக்கு பெற்றோர்கள், உடன் பிறந்தவர்கள், மனைவி, மக்கள் உதவியாக இருப்பார்கள்.குடும்பத்தில் ஒற்றுமை நிம்மதி ஏற்படும்.
வங்கி கடன் மூலம் புதிய வாகனம் வாங்கு தல் அல்லது நிலத்தில் முதலீடு செய்தல் போன்ற அமைப்பு உருவாகும். சிலர் குடியிருப்பை மாற்றம் செய்யலாம். புது வேலையில் நிறைவான ஊதியமும் மனத் திருப்தியும் ஏற்படலாம்.பொருளாதாரத்தில் சீரான முன்னேற்றம் நிலவும். சுய சம்பாத்தியம் பெருகும்.காதல் திருமணத்திற்கு வாய்ப்பு உள்ளது. சிலருக்கு புதிதாக எதிர்பாலின நட்பு கிடைக்கும். புது உறவுகள் பலப்படும். பிள்ளைகளால் ஏற்பட்ட தொல்லைகள் அகலும். மதிப்பும், மரியாதையும் காப்பாற்றப்படும். பூர்வீகச் சொத்துப் பிரச்சினைகள் தொடர் கதையாக இருக்கும்.
5.7.2022 மாலை 4.50 முதல் 7.7.2022 அன்று காலை 12.20 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மனதை அமைதியாக வைத்திருக்க முயற்சிக்கவும். தேவையற்ற கற்பனை, சிந்தனைகளை தவிர்க்கவும். ஸ்ரீ தட்சிணா மூர்த்தியை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கும்பம் - Kumbam
வார ராசி பலன்கள்
27-6-2022 முதல் 03-7-2022 வரை
எதிர்மறை எண்ணங்கள் நீங்கி மனதில் தன்னம்பிக்கை ஏற்படும் 3-ம் அதிபதி செவ்வாய் 3-ல் ஆட்சி பலம் பெறுவதால் தடை, தாமதமாகி வந்த உங்களின் முயற்சிகள் சிறு மன சஞ்சலத்திற்கு பிறகு காரிய சித்தியை ஏற்படுத்தி தரும்.இடப்பெயர்ச்சி செய்ய நேரும். சிலருக்கு வேலை மாற்ற எண்ணம் அதிகரிக்கும்.
பணிபுரியும் துறையில் சாதனை செய்து புகழ் அடைவீர்கள். பணம் கொடுக்கல் வாங்கல் சீராகும்.வராக்கடன்கள் வசூலாகும். வறுமையில் வாடியவர்களுக்கு வாழ்வில் வசந்தம் வீசும். நீண்ட கால பரம்பரை நோய்க்கு மாற்று மருத்துவத்தின் மூலம் தீர்வு காண முயல்வீர்கள். உயில் எழுத ஏற்ற காலம். கைமறதியாக வைத்த ஆவணங்கள் கிடைக்கும்.
மாணவர்களுக்கு கல்வியை விட வெளிப்புற செயல்களில் அதிகம் ஈடுபாடு உண்டாகும். சிலர் முன்னோர்கள் கடை பிடித்து வந்த கொள்கைகளில் இருந்து மாறுபட்டு செயல்பட நேரும். பெண்கள் அழகு, ஆடம்பரப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பணிபுரியும் இடத்தில் பாராட்டும் புகழும் கூடும். ஆரோக்கி யத்தைப் பொறுத்த வரை மிக நல்ல வாரம். உடல் ஊனம் உள்ளவர்களின் தேவையறிந்து உதவவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கும்பம் - Kumbam
வார ராசி பலன்கள்
இந்த வாரம் எப்படி 20-6-2022 முதல் 26-6-2022 வரை
எதிர்பார்த்த நல்ல திருப்பங்கள் ஏற்படும் வாரம். தன லாப அதிபதி குரு வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வாக்கு சாதுர்யத்தால் வட்டித் தொழில், வாக்குத் தொழில், கமிஷன் தொழிலில் இருப்பவர்களுக்குலாபம் அதிகரிக்கும். முந்தைய முதலீட்டில் இருந்து வருமானம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
3-ம்மிட ராகு உடன் பிறந்த சகோதரிகளால் சில கஷ்டங்களை எதிர்கொள்ளச் செய்வார் என்பதால் சம நிலை தவறாதீர்கள். குறிப்பாக கோபத்தை கட்டுப்படுத்துங்கள். ஏழரை சனியால் பணி நீக்கமானவர்களுக்கு மீண்டும் பணி நியமன உத்தரவு வரும்.திருமண முயற்சிகள் சற்று இழு பறிக்குப் பிறகு சாதகமாகும்.
பிள்ளைகள் தீய நட்பு, பழக்கங்களில் இருந்துவிடுபடுவார்கள்.பெண்களுக்கு ஆடை ஆபரண சேர்க்கை மகிழ்ச்சியை அதிகரிக்கும்.பிரதோஷத்தன்று பிரதோஷ வேளையில் லட்சுமி நரசிம்மருக்கு ரோஜா மாலை சாற்றி வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கும்பம் - Kumbam
வார ராசி பலன்கள்
இந்த வாரம் எப்படி 13-6-2022 முதல் 19-6-2022 வரை
பொறுமையுடன் செயல்பட வேண்டிய காலம். 3 ,10ம் அதிபதி செவ்வாய் தன, லாப அதிபதி குருவுடன் இணைவு பெற்றதால் சம்பாத்தியம் பற்றிய சிந்தனை இல்லாதவர்களுக்கு கூட தொழில், நல்ல வேலை வாய்ப்புகளை தேடத் துவங்குவார்கள். புதிய தொழில் தொடங்கும் திட்டங்கள் நிறைவேறும்.
வியாபாரத்தில் லாபம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் சிறப்பாக செயல்படுவார்கள். அஷ்டம ஸ்தானத்திற்கு குரு செவ்வாய் பார்வை பதிவதால் எச்சரிக்கையாக செயல்படும் காரியங்களில் கூட சறுக்கல் ஏற்படலாம். 3ல் ராகு இருப்பதால் உங்களால் உயர்ந்த சகோதர, சகோதரிகள் உங்களைப் பற்றி புறம் பேசுவது உங்களின் கவனத்திற்கு வரும்.
இதனால் உங்கள் குடும்பத்தில் அமைதி குறைவது போன்ற இனம் புரியாத மன உணர்வு தோன்றும். அது நிம்மதி குறைவை அதிகரிக்கும்.குடும்பத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கலாம். குடும்பத்தை விட்டுப் பிரிந்து தனிக் குடித்தனம் சென்ற வாரிசுகள் வீடு வந்து சேருவார்கள். திடீர் செலவுகள் ஏற்படலாம்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கும்பம் - Kumbam
வார ராசி பலன்கள்
6.6.2022 முதல் 12.6.2022 வரை
திட்டமிடாத வழிகளில் பணம் வந்து இந்த வாரத்தினை பிரகாசமாக்கும். தொடர்ச்சியான லாபத்தால் அதிக முதலீடின்றி வியாபாரம் பெருகும்.கூட்டாளிகள் நட்பால் ஆதாயம் உண்டு. புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு உள்ளது. தடைபட்ட வீடு கட்டும் பணி துரிதமாகும். தேவையற்ற இடமாற்றத்தால் மன சஞ்சலம் அதிகரிக்கும். திருமணம் நிச்சயமானவர்கள், நிச்சயித்த வரனிடம் அதிகம் பேசுவதை தவிர்க்கவும்.
வார இறுதியில் வாழ்க்கையின் பல முக்கியமான விஷயங்களை குடும்ப உறுப்பினர்களுடன் உட்கார்ந்து பேசி முடிவு எடுக்கும் வாய்ப்பு உள்ளது. உங்கள் வார்த்தைகள் குடும்பத்தினரை காயப்படுத்தலாம். உரிமையை விட உறவுகளே முக்கியம் என்பதை உணர்ந்து பேசவும். பெண்கள் ஆடம்பர பொருட்கள் வாங்கி வீட்டை அழகு படுத்துவார்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
8.6.2622 காலை 10.03 முதல் 10.6.2022 மாலை 4.06 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் சற்று குழப்பமான மன நிலை உண்டாகும். உங்களால் முடியும் என நிச்சயமாக தெரியாத எந்த விசயத்திற்கும் பிறருக்கு வாக்குறுதி தருவதை தவிர்க்கவும். பிரதோஷத்தன்று சிவனுக்கு பச்சை கற்பூரம் அபிசேகம் செய்து வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கும்பம் - Kumbam
வார ராசி பலன்கள்
30.5.22 முதல் 5.6.22 வரை
சிந்தித்து செயல்பட வேண்டிய காலம். 5,8-ம் அதிபதி புதன் வக்ர நிவர்த்தி பெறுவதால் ஆசைகளால் மனம் அலைபாயும். வழக்குகளால் நிம்மதி குறையும். மனத் தடுமாற்றம் உண்டாகும்.
எனினும் தைரிய ஸ்தான அதிபதி செவ்வாய் குடும்ப ஸ்தானத்தில் குருவுடன் நிற்பதால் குடும்ப உறுப்பினர்கள் உங்களுடைய வேகமான செயல்பாடுகளுக்கு துணையாக இருப்பார்கள். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடந்தேறும். விவசாயிகளுக்கு அரசு வழி ஆதாயம் உண்டு. பேச்சை மூலதனமாக கொண்ட வக்கீல்கள், ஆசிரியர்கள், விற்பனை பிரதிநிதிகள் ஏற்றம் பெறுவார்கள். மூத்த சகோதர சகோதரிக்கு வேலை கிடைக்கும். திருமணம் நடக்கும்.குடும்பத் தேவைக்கு ஏற்ற சரளமான பணப்புழக்கம் உண்டு.
சனியின் 10-ம் பார்வை தொழில் ஸ்தானத்தில் பதிவதால் புதிய தொழில் வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். ஏழரைச் சனியின் காலம் என்பதால் பொறுமையாக செயல்படுவது அவசியம். சிலர் ஒப்பந்த வேலைக்காக வெளிமாநிலம் செல்லலாம். வியாழக்கிழமை ஸ்ரீ சவுபாக்கிய லட்சுமியை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கும்பம் - Kumbam
வார ராசிப்பலன் 23.5.22 - 29.5.22
எதிர்காலம் பற்றிய பயம் விலகும். தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். தன லாப அதிபதி குருவுடன் 3,10ம் அதிபதி செவ்வாய் சேர்க்கை பெறுவதால் தொழில், உத்தியோக ரீதியான பயணங்கள் லாபம் பெற்றுத்தரும். ஆன்லைன் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களில் வணிகம் புரிபவர்களுக்கு தொழில் வளர்ச்சி பெருகும். பொருளாதாரத்தில் நிலவிய சிக்கல், சிரமங்கள் விலகும். அடமான நகைகள் மீண்டு வரும்.
மாமியாரை சமாதானமாக பேசி சமரசம் செய்வீர்கள். பெண்கள் விடுமுறைக்கு தாய் வீடு செல்வார்கள். கணவன்-மனைவி உறவில் பாசமும், நேசமும் அதிகரிக்கும். ஜென்மச் சனியின் காலம் என்பதால் சுய தொழில் புரிபவர்கள் சிந்தித்து செயல்பட வேண்டும். பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேரும் வாய்ப்பு கிடைக்கும். ஊதிய உயர்வுடன் கூடிய பணிமாற்றம் கிடைக்கும். அமாவாசையன்று பசுவிற்கு பச்சரிசி, வெல்லம் வழங்கவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கும்பம் - Kumbam
வார ராசிப்பலன்
இந்த வாரம் எப்படி 16-5-2022 முதல் 22-5-2022 வரை
குடும்ப ஸ்தான குருவால் குடும்பத்தில் சந்தோசம் கூடும். சங்கடங்கள் அகலும். முன்னேற்றத்திற்கான முட்டுக்கட்டைகள் அகலும். தொழிலில் எதிர்பார்த்ததைக் காட்டிலும் இரு மடங்கு லாபம் கிடைக்கும். பணப்பற்றாக்குறை அகலும். இந்த வாரம் முழுவதும் மன மகிழ்ச்சியைத் தரும் சம்பவங்கள் நடக்கும். சிலர் வெளிநாட்டு கம்பெனிக்கு வேலையை மாற்றுவார்கள். சிலர் பிள்ளைகளின் கல்விக்காக இடம் பெயர நேரும்.
சிலரின் காதல் காலை வாரும். மனைவி வழிச் சொத்தில் நிலவிய இடையூறுகள் அகலும். பெண்களுக்கு கணவரால் ஏற்பட்ட மன உளைச்சல் நீங்கும். கணவர் உங்கள் நிலையைப் புரிந்து கொண்டு அன்பை பொழிவார். பொழுது போக்கு செலவுகள் அதிகரிக்கும். தரகு மற்றும் ஒப்பந்த தொழில் நடத்து பவர்களுக்கு தொழில் ஆதாயம் சிறப்பாக இருக்கும். அடகு வைத்த நகையை மீட்பீர்கள். வீட்டில் சுப மங்கள நிகழ்விற்கான பேச்சு வார்த்தைகள் நடக்கும். சிலருக்கு புதிய தொழில் கூட்டாளிகள் கிடைப்பார்கள். தினமும் சிவபுராணம் கேட்கவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406






