என் மலர்
கும்பம் - வார பலன்கள்
கும்பம் - Kumbam
இந்த வார ராசிப்பலன்
19.12.2022 முதல் 25.12.2022 வரை
முயற்சிகள் நிறைவேறும் வாரம். ராசி அதிபதி சனி ராசியை நோக்கி முன்னேறுவதால் தொழில் முன்னேற்றம், திருமணம், குழந்தை, வீடு வாகன யோகம் போன்ற அனைத்து விதமான பாக்கியங்களும் உண்டாகும். தொழிலாளர்கள் உங்களுக்கு ஆதரவாக உதவிக்கரம் நீட்டுவார்கள். நல்ல நம்பிக்கையான விசுவாசமான வேலையாட்கள் கிடைப்பார்கள்.
இதுவரையில் யோசிக்காத வகையில் விவேகமாக சிந்தனை செய்து தொழிலை வளப்படுத்து வீர்கள். கூலித் தொழிலாளிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். தன லாப அதிபதி குருவால் பணப் புழக்கம் சரளமாக இருக்கும். சீட்டு, ரேஸ், பங்குச் சந்தை மூலம் வருமானம் பெருகும்.
பொருளாதாரத்தில் நல்ல மாற்றமும் ஏற்றமும் உண்டாகும். பொன், பொருள் சேர்க்கை அதி கரிக்கும். ஆரோக்கியம் அதிகரிக்கும். படுத்தவுடன் நிம்மதியான தூக்கம் வரும். அமாவாசையன்று உடல் ஊனம் உள்ளவர்களுக்கு இயன்ற உணவு தானம் வழங்கவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கும்பம் - Kumbam
இந்த வார ராசிப்பலன்
12.12.2022 முதல் 18.12.2022 வரை
புகழ், அந்தஸ்து, ஆளுமை அதிகரிக்கும் வாரம்.ராசிக்கு 11-ம் இடமான லாப ஸ்தானத்தில் 4,9-ம் அதிபதியான சுக்கிரனும், 5,8-ம் அதிபதியான புதனும் சேர்ந்து நிற்கிறார்கள். அதாவது ஒரு கேந்திராதிபதியும், திரிகோணாதிபதியும் இணைவது மாபெரும் யோகமாகும். ஜனன கால ஜாதக ரீதியாக நன்மையான தசாபுத்திகள் நடந்தால் நன்மையின் அளவை அளவிட முடியாத வளர்ச்சி உண்டு.
எதிர் காலத்தில் உங்கள் பெயர் பிரகாசிக்குமளவு புகழ், பெருமை, கவுரவம் சேரும். இது வரை உங்களைத் துரத்திய அவமானம், நஷ்டம், கவலைகள் விலகும். பொறுப்புகள், கடமைகள் அதிகரிக்கும். பிறரை நம்பி களத்தில் இறங்கி ஏமாற்றம் அடைந்த நீங்கள் சுய நம்பிக்கையில் இழந்ததை ஈடுகட்டுவீர்கள். ஏழரை சனி பற்றிய பயம் விலகும். பூர்வீக நிலப் பிரச்சினை தீரும். பூர்வீகத்தால் யோகம் உண்டாகும். மனை வியால், உடன் பிறந்தவர்களால், தாய்மாமனால் அனு கூலமான பலன்கள் நடைபெறும்.
16.12.2022 மதியம் 2.03 முதல் 18.12.2022 இரவு 10.30 மணி வரை சந்தி ராஷ்டமம் இருப்பதால் புதிய முயற்சிகளை ஒத்தி வைக்கவும். ஆஞ்சநேயரை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கும்பம் - Kumbam
இந்த வார ராசிப்பலன்
5.12.2022 முதல் 11.12.2022 வரை
மகிழ்ச்சியான வாரம். லாப ஸ்தான குருவால் தன வரவில் தன் நிறைவு உண்டாகும். வராக்கடன்கள் வசூலாகும். கடனுக்காக விண்ணப்பித்தவர்களுக்கு எதிர்பார்த்த கடன்தொகை கிடைக்கும். குடும்பத்தேவைகள் பூர்த்தியாகும் நோய்த் தொல்லை குறையும். நினைத்ததை நிறைவேற்றக் கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள்.
திருமணம், குழந்தை பாக்கியம் போன்ற சுப காரியங்கள் அனுகூலமாகும். புதிய சேமிப்பு திட்டங்கள் பற்றிய எண்ணம் உண்டாகும். தொழில், உத்தியோக நிமித்தமாக குறுகிய காலத்திற்கு தந்தை வெளியூர் அல்லது வெளிநாடு சென்று வரலாம். மாணவர்களுக்கு விரும்பிய உயர் கல்வி வாய்ப்பு கிடைக்கும். பொறுப்புடன் வேலை செய்து அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்ப உறவுகளுடன் எல்லா விசயங்களையும் மனம் விட்டுப் பேசும் படியான சூழல் உருவாகும்.
பெண்களுக்கு உறவினர்களிடையே மதிப்பு மரியாதை அதிகரிக்கும். நண்பிகள் வட்டாரத்தில் உங்கள் செயல்பாடுகள் பாராட்டப்படும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தை வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். வில்வ அர்ச்சனை செய்து சிவனை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கும்பம் - Kumbam
இந்த வார ராசிப்பலன்
28.11.2022 முதல் 4.12.2022 வரை
லாபகரமான வாரம். ஆட்சி பெற்ற சனியும், குருவும் ராஜயோகத்தை தரப்போவதால் மகிழ்ச்சியும் மன நிம்மதியும் அதிகரிக்கும். பொருளாதார நிலை நன்றாக இருக்கும். எதிரிகள் தொந்தரவு நீங்கும். கடன் பிரச்சினை முடிவுக்கு வரும். திருமணம், வளைகாப்பு போன்ற சுபநிகழ்ச்சிகளால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும்.
குடும்ப உறவுகளிடையே இருந்த பிரச்சினைகள் நீங்கும். கணவன்-மனைவி இடையே நெருக்கம் கூடும். முன்பு வாங்கிப் போட்ட நிலத்தின் மதிப்பு உயரும். உயர்கல்வி படிப்பவர்களுக்கு எடுத்த காரியம் வெற்றி கிடைக்கும். விரைவில் ஜென்மச் சனியின் ஆதிக்கம் துவங்க உள்ளதால் முதலீட்டா ளர்கள் இயன்றவரை பெரிய முதலீடுகளை தவிர்க்க வேண்டும். எதிர்பார்த்த வங்கிக் கடன்கள் கிடைக்கும்.
பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய அரசாங்க ஒப்பந்தங்கள் கிடைக்கும்.சகோதர உறவுகளால் சஞ்சலங்கள் உண்டாகும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகமாகும். கையில் பணம் புரள்வதால் கவர்ச்சியான விளம்பரத்தை நம்பி புதிய தொழிலில் இறங்க வேண்டாம். சுய ஜாதக தசா புக்தி சாதகம் அறிந்து சுய தொழில் துவங்க வேண்டும். சிவனுக்கு தயிர் அபிசேகம் செய்து வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கும்பம் - Kumbam
இந்த வார ராசிப்பலன்
21.11.2022 முதல் 27.11.2022 வரை
லாபகரமான வாரம். தன, லாபாதிபதி குரு வக்ர நிவர்த்தி பெறுவதால் குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் நன்மை அளிக்கக்கூடிய வகையில் இருக்கும். அனைத்து வேலைகளும் சிறிய முயற்சியிலேயே சிறப்பாக நடைபெறும். தடைகளை தகர்த்து வெற்றிநடை போடுவீர்கள். உடலிலும் உள்ளத்திலும் புதிய தெம்பு, தைரியம் குடிபுகும். வைத்தியம் பலன் தரும்.
தொழிலில் இருந்து வந்த தேக்க நிலை அடியோடு மாறி நிறைவான லாபம் காண்பீர்கள். கையில் காசு சரளமாக புரளும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். விற்காமல் தேங்கிய சரக்குகள், கையிருப்பில் இருக்கும் பொருட்கள் அதிக விலைக்கு விற்பனையாகும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். உத்தியோகஸ்தர்கள் வீண் வாக்குவாதங்களைத் தவிர்த்து மேல் அதிகாரிகளின் சொல்படி நடப்பது முன்னேற்றத்துக்கு உதவும்.
கலைத்துறையினர் கலை நிகழ்ச்சிக்காக வெளிநாட்டு பயணம் செல்லலாம். நீங்கள் விரும்பிய அப்பார்ட்மென்டில் விரும்பிய வீடு கிடைக்கும். அடுத்த வாரத்தில் திருமண முயற்சி கைகூடும். கால பைரவரை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கும்பம் - Kumbam
இந்த வார ராசிப்பலன்
14.11.2022 முதல் 20.11.2022 வரை
நிதானத்துடன் செயல்பட வேண்டிய வாரம். தனம், குடும்ப ஸ்தான அதிபதி குரு வக்ரமாக இருப்பதால் வரவுக்கு மீறிய செலவுகள் மனதை வருத்தும். அடுத்தவருக்கு ஜாமீன் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. தொழில், உத்தியோக ரீதியான பாதிப்பு எதுவும் இருக்காது. பங்குதாரர்களிடம் இருந்து வந்த பிரச்சினைகள் அகலும்.
மேல் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. நல்ல சொந்த வீட்டிற்குச் செல்வீர்கள். குடும்பத்தில் இருப்பவர்களது செய்கைகள் உங்களது கோபத்தை தூண்டும்படியாக இருந்தாலும் நிதானத்தை கடைபிடிப்பது வீண் பிரச்சினைகளைத் தடுக்கும். பிள்ளைகளின் திருமணம், கல்வி போன்ற சுப நிகழ்விற்கு எதிர்பார்த்திருந்த தொகை கிடைத்து பணவரவு சரளமாகும்.
19.11.2022 காலை 5.28 முதல் 21.11.2022 பகல் 12.30 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உங்கள் பேச்சால், முன் கோபத்தால் நல்ல வாய்ப்புகள் தள்ளிப்போகும். பணியாளர்களால் சில அசவுகரியங்கள் ஏற்படலாம். நவகிரக காயத்திரி படிக்கவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கும்பம் - Kumbam
வார ராசிப்பலன்
7.11.2022 முதல் 13.11.2022 வரை
தடைக் கற்கள் படிக்கற்களாக மாறும் வாரம். விரயச் சனியின் தாக்கத்தால் ஏற்பட்ட மருத்துவமனைச் செலவுகள் முற்றிலும் அகலும். கை, கால், வலி அசதி நீங்கும். வீட்டில் முடங்கி கிடந்தவர்கள் வெளியில் சென்று வரும் அளவிற்கு ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். தன, லாப குருவால் தொழில் முன்னேற்றம் மற்றும் உத்தியோக உயர்வில் சாதகமான பலன் உண்டு. எதிர்பாராத திடீர் தனலாபத்தால் ஆடம்பர வாழ்க்கையை மனம் விரும்பும். சிலருக்கு வாழ்வில் மறக்க முடியாத இனிய நிகழ்வுகள் நடைபெறும். நல்ல நண்பர்களின் உதவி கிடைக்கும். பெரிய அளவில் சொத்து வாங்குவதற்காக பேச்சுவார்த்தை நடத்துவீர்கள். ராசிக்கு 3-ம் இடமான சகாய ஸ்தானத்தில் கிரகணம் தோன்றுவதால் அண்டை அயலாருடன் சிறு பிணக்கு ஏற்படலாம். சிலருக்கு எல்லைத் தகராறு தோன்றும். வானொலி தொலைக்காட்சி, ஊடகத்துறையினர் நல்ல மாறுதலும் மேன்மையும் பெறுவர்.
மாமனாருடன் சிறு பனிப்போர் நடக்கும். வேலைப்பளு மிகுதியாகும்.மன அமைதி குறையும். பேச்சைக் குறைப்பது நல்லது. வயோதிகர்களுக்கு மருத்துவ உதவிகள் வழங்கவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கும்பம் - Kumbam
வார ராசிப்பலன்
31.10.2022 முதல் 06.11.2022 வரை
நன்மையும், மேன்மையும் உண்டாகும் வாரம். 3,10-ம் அதிபதி செவ்வாய் 5-ல் வக்ரம் பெறுவதால் பூர்வீக சொத்து தொடர்பாக சகோதர, சகோதரி வகையில் சிறிய மன உளைச்சல் உண்டாகும். பொய்யான கெட்ட வதந்திகளால் ஏற்பட்ட அவமானம் அகலும். மனதை வருத்திய கோர்ட், கேஸ் பிரச்சினை சுமூகமாகும். தடைபட்ட வீடு கட்டும் பணி துரிதமாகும். தொழில் முன்னேற்றம், உத்தியோக உயர்வு உண்டாகும். தொழில், உத்தியோகத்திற்காக அலைச்சல் மிகுந்த வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் செய்ய நேரும்.
கவுரவப் பதவிகள் கிடைக்கும். தந்தை வழி பங்காளிகளிடையே குலதெய்வ கோவில் சீர்திருத்தப் பணி தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெறும்.அதிர்ஷ்டத்தைத் தேடி அலைபவர்களுக்கு திறமை, முயற்சி, பொறுமை, உழைப்பு ஆகியவற்றால் வெற்றி பெரும் சூட்சமத்தை சனிபகவான் கற்றுக் கொடுப்பார். ஜென்மச் சனி துவங்க உள்ளதால் மனதில் அவ்வப்போது தேவையற்ற சில சந்தேகங்களும் கற்பனை பயமும் உண்டாகலாம்.அடிமட்டத்தில் இருப்பவர்களுக்கு அரசின் சலுகையால் இருப்பிடம் கிடைக்கும். ஆஞ்சநேயரை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கும்பம் - Kumbam
இந்த வார ராசிப்பலன்
24.10.2022 முதல் 30.10.2022 வரை
தடை, தாமதங்களை தகர்க்கும் வாரம். பாக்கிய அதிபதி சுக்ரன் பாக்கிய ஸ்தானத்தில் ஆட்சி பலம் பெறுவதால் பெயர், புகழ் பரவும். தன லாப குருவால் கடன் பிரச்சினைகள் படிப்படியாக குறையத் துவங்கும். மார்க்கெட்டிங் துறையில் இருப்பவர்கள், சாலையோர நடை பாதை வியாபாரிகளின் லாப விகிதம் அதிகமாக இருக்கும்.
வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பதவி உயர்வும் நல்ல சம்பளமும் கிடைக்கும். சிலருக்கு போட்டி, பொறாமையால் கண் திருஷ்டி உண்டாகும். பூமி, மனைகள் வாங்குவதில் நிலவிய தடைகள் அகலும். வெகு விரைவில் ஜென்மச் சனியின் ஆதிக்கம் ஏற்பட உள்ளதால் தொழில் உத்தியோகத்தில் நிதானம் தேவை. மறு திருமண முயற்சி சாதகமாகும்.
25.10.2022 அன்று காலை 2.32 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மன அமைதி குறைவு உண்டாகலாம். உங்கள் பேச்சே உங்களுக்கு எதிரிகளை உருவாக்கலாம். எனவே எதையும் யோசித்து பேசுவது நல்லது. கிரக ணத்தன்று வயதானவர்களுக்கு கம்பளி தானம் வழங்கவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கும்பம் - Kumbam
24.10.2022 முதல் 30.10.2022 வரை
தடை, தாமதங்களை தகர்க்கும் வாரம். பாக்கிய அதிபதி சுக்ரன் பாக்கிய ஸ்தானத்தில் ஆட்சி பலம் பெறுவதால் பெயர், புகழ் பரவும். தன லாப குருவால் கடன் பிரச்சினைகள் படிப்படியாக குறையத் துவங்கும். மார்க்கெட்டிங் துறையில் இருப்பவர்கள், சாலையோர நடை பாதை வியாபாரிகளின் லாப விகிதம் அதிகமாக இருக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பதவி உயர்வும் நல்ல சம்பளமும் கிடைக்கும்.
சிலருக்கு போட்டி, பொறாமையால் கண் திருஷ்டி உண்டாகும். பூமி, மனைகள் வாங்குவதில் நிலவிய தடைகள் அகலும். வெகு விரைவில் ஜென்மச் சனியின் ஆதிக்கம் ஏற்பட உள்ளதால் தொழில் உத்தியோகத்தில் நிதானம் தேவை. மறு திருமண முயற்சி சாதகமாகும். 25.10.2022 அன்று காலை 2.32 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மன அமைதி குறைவு உண்டாகலாம். உங்கள் பேச்சே உங்களுக்கு எதிரிகளை உருவாக்கலாம். எனவே எதையும் யோசித்து பேசுவது நல்லது. கிரகணத்தன்று வயதானவர்களுக்கு கம்பளி தானம் வழங்கவும்.
'பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கும்பம் - Kumbam
இந்த வார ராசிபலன்
17.10.2022 முதல் 23.10.2022 வரை
சுமாரான வாரம். ராசி அதிபதி சனி வக்ர நிவர்த்தி பெற்று ராசியை நோக்கி நகர்வதால் உடல் சோர்வு, அலுப்பு ஏற்படும். பணியில் சிறு தொய்வு ஏற்படும். வேலையில், தொழிலில் விரைந்து செயல்பட்டால் மட்டுமே வெற்றி பெற முடியும்.புதிய தொழில் முயற்சிகளைத் தவிர்க்கவும். தேவையில்லாமல் யாருக்கும் வாக்கு கொடுக்க கூடாது. ஜாமின் போடக்கூடாது.
பொருளாதார விஷயத்தில் நிதானமும் கவனமும் அவசியமானதாகும். தந்தையின் அன்பும் ஆதரவும் மன நிம்மதி தரும். குழந்தைகளால் நன்மை உண்டு. சிலரின் பிள்ளைகளுக்கு தொழில் முன்னேற்றமோ, அரசாங்கப்பணியோ தேடி வர வாய்ப்புண்டு.
கடன் வாங்குவதை தவிர்க்கவும். ஏழரைச் சனியால் எவ்வளவு இடையூறுகள் நெருக்கடியான சூழ்நிலை வந்தாலும் வாழ்க்கைத் துணையின் ஆதரவு ஆறுதலாக இருக்கும். கணவன்-மனைவி கருத்தொற்றுமை சிறப்படையும். தீபாவளிக்கு பிள்ளைகளிடம் இருந்து எதிர்பாராத அன்பு பரிசு கிடைக்கும்.22.10.2022 இரவு 8.05 மணிக்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் பண விவகாரங்கள் கவலை தரும்.பொறுமையோடு இருப்பது நல்லது. குச்சனூர் ஸ்ரீ சனிபகவானை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கும்பம் - Kumbam
இந்த வார ராசிப்பலன்
10.10.2022 முதல் 16.10.2022 வரை
லாபகரமான வாரம். தன லாப அதிபதி குரு தன ஸ்தானத்தில் நிற்பதால் நிதி, நிர்வாகத்தை நன்கு திடப்படுத்திக் கொள்வீர்கள். புதிய வெளிநாட்டு தொழில் ஒப்பந்தம் கிடைக்கும். பங்குதாரர் மூலம் புதிய தொழில் முதலீடு உண்டாகும். வியாபாரிகள் தங்கள் வாடிக்கை யாளர்களைக் கவர்ந்து லாபத்தை அதிகரித்துக் கொள்வர்.
தொழிலா ளர்கள் ஆதரவால் உற்பத்தி பெருகி, லாபமும் அதிகரிக்கும். சேமிப்பு உயரும். சிலர் தீபாவளி போனசில் விலை உயர்ந்த செல்போன் வாங்கு வார்கள். பணிபுரி பவர்களுக்கு மேலதிகாரிகளின் அனுகூலத்தால் உயர் பதவிகள் கிடைக்கலாம். பெண்கள் வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்க ஏற்ற காலம்.
பங்குச் சந்தை முதலீட்டில் நல்ல ஆதாயம் கிடைக்கும். சிலருக்கு அண்டை அயலாருடன் எல்லைத் தகராறு உண்டாகும். காவல் துறையினர் சிலருக்கு பண்டிகை கால இடமாற்றம் உண்டாகும். மருமகன் புதிய தொழிலுக்கு முதல் கேட்டு முரண்டு பிடிப்பார். சிலருக்கு மருத்துவம் சம்பந்தமான உயர்கல்வியில் சேர வாய்ப்பு உள்ளது. மீனாட்சியை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406






