என் மலர்
கும்பம் - வார பலன்கள்
கும்பம் - Kumbam
இந்த வார ராசிப்பலன்
20.3.2023 முதல் 26.3.2023 வரை
நினைத்த காரியங்கள் கை கூடிவரும் வாரம். 3,10-ம் அதிபதி செவ்வாய் 5-ம்மிடம் சென்றதால் புதிய திட்டங்கள் மூலம் தொழிலை மேம்படுத்து வீர்கள். புதிய முயற்சியில் அதிக லாபம் பார்ப்பீர்கள். உத்தியோகத்தில் மாற்றம் உண்டாகும். அரசாங்க ஊழியர்கள் சிறப்பாக பணி செய்து பலன் பெறுவார்கள். அரசியலில் ஈடுபட்டோருக்கு ராஜ யோகம் தரும் காலமாகும்.
சிலர் நீண்ட காலமாக ஆசைப்பட்ட வாகனத்தை வாங்குவீர்கள். சிலர் வீட்டைப் புதுப்பிக்கும் வேலையில் ஈடுபடுவீர்கள். வீட்டில் சுப நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளைச் செய்வீர்கள். உடல் உபாதைகள் நீங்கி ஆரோக்கி யம் மேம்படும்.கணவன் மனைவி இருவரும் மனமொன்றி நடந்துகொள்வார்கள். குடும்பத்துடன் உல்லாசப் பயணம் செல்வீர்கள்.
முன்பு வாங்கிப் போட்ட நிலத்தின் மதிப்பு உயரும். உயர்கல்வி படிப்பவர்களுக்கு எடுத்த காரியம் வெற்றி தரும். ஜென்மச் சனியின் ஆதிக்கம் உள்ளது. மேலும் தனலாப அதிபதி குரு மூன்றாமிடம் செல்வதால் முதலீட்டா ளர்கள் இயன்றவரை பெரிய முதலீடுகளை தவிர்க்க வேண்டும். சகோதர உறவு களால் சஞ்சலங்கள் உண்டாகும். மீனாட்சியம்ம னையும் சொக்கநாதரையும் வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கும்பம் - Kumbam
இந்த வார ராசிப்பலன்
13.3.2023 முதல் 19.3.2023வரை
மனசஞ்சலம் அகலும் வாரம். ஜென்மச் சனியின் காலம் என்பதைத் தவிர பிற அனைத்து கோட்சார கிரகங்களின் சஞ்சாரம் கும்ப ராசிக்கு மிகச் சாதகமாக உள்ளது. வருட கிரகமான குருவின் சஞ்சாரம் சில வாரங்களுக்கு மட்டுமே மிகச் சாதகமாக உள்ளதால் தெளிவான சிந்தனை உண்டாகும். முக்கிய பணிகளை விரைந்து முடிப்பது நல்லது.
பண பிரச்சினை நீங்கும் வியாபாரத்தில் தோன்றிய எதிர்ப்புகளை வேரோடு பிடுங்கி எறிவீர்கள். அரசு உத்தியோக வாய்ப்பு, வெளிநாட்டு வேலை வாய்ப்பு மிகப்பிரகாசமாக உள்ளது. ஒரு இடத்தில் நிலையாக வசிக்க முடியாது.தொழில், உத்தியோகத்திற்காக அடிக்கடி இடப்பெயர்ச்சி செய்வீர்கள். வீட்டிலும் வெளியிலும் புகழும் செல்வாக்கும் அதிகரிக்கும்.
மன சஞ்சலத்தால் ஏற்பட்ட ஆரோக்கிய கேடு சீராகும். வெளிநாட்டு வாழ்க்கையில் ஆர்வம் அதிகரிக்கும். புதிய வீடு, நில புலன்கள், வாகனம் வாங்கும் வாய்ப்பு உள்ளது. பெண்களுக்கு ஆடம்பரச் செலவால் பணவிரயம் ஏற்படும். சந்திரனைப் போன்று வளர்வதும் தேய்வதுமாக இருந்த வாழ்க்கை மாறி நிலையாகும். திரும ணத்திற்கு நல்ல வரன் அமையும். சனிக்கிழமை அனுமன் சாலிசா கேட்கவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கும்பம் - Kumbam
இந்த வார ராசிப்பலன்
6.3.2023 முதல் 12.3.2023 வரை
அனைத்து காரியங்களும் தடையில்லாமல் நடக்கும் வாரம். தனலாப அதிபதி குரு தன ஸ்தானத்தில் உச்சம் பெற்ற 4,9-ம் அதிபதி சுக்ரனுடன் சேருவதால் வாக்கு சாதுர்யத்தால் வியாபாரத்தை பெருக்குவீர்கள். நடக்குமா என்று இருந்த காரியங்களை தன்னம்பிக்கையோடு நடத்தி காட்டுவீர்கள். ராசி அதிபதி சனி ஏழாம் அதிபதி சூரியனுடன் ராசியில் சேர்க்கை பெறுவதால் சிலர் நண்பர்கள் அல்லது வாழ்க்கைத் துணையுடன் கூட்டுச் சேர்ந்து தொழிலை விரிவுபடுத்துவீர்கள். புதிய வீடு கட்டி குடியேறும் வாய்ப்பு உள்ளது.
எதிர்பாராத இடங்களில் இந்து பிள்ளைகளின் திருமணத்திற்கு தேவையான பணம் கிடைக்கும். நிலம் சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் இப்போது நல்ல முன்னேற்றம் தரும். மாணவர்களுக்கு போட்டி பந்தயங்களில் வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது. தள்ளிப் போன திருமண காரியங்கள் கூடி வரும். ஆரோக்கியம் சீராகும்.
8.3.2023 காலை 8.53 முதல் 10.3.2023 மாலை 6.35 வரை சந்திராஷ்டமம் இருக்கிறது. ராசியில் சூரியன் நிற்பதால் உங்களிடம் வேகம் அதிகரித்து உச்ச கட்ட கோபத்தை வெளிக்காட்டுவீர்கள். மாசி மகத்தன்று பஞ்சாமிர்த அபிசேகம் செய்து சிவனை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கும்பம் - Kumbam
இந்த வார ராசிப்பலன்
27.2.2023 முதல் 5.3.2023 வரை
சூப்பரான வாரம்.தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும், குருவும், சுக்ரனும் ராஜயோகத்தை தரப்போவதால் மகிழ்ச்சியும் மன நிம்மதியும் அதிகரிக்கும். கடமையில் கண்ணும் கருத்துமாக இருந்து சில முக்கிய பணிகளை செய்து முடிப்பீர்கள். பொருளா தார நிலை நன்றாக இருக்கும். எதிரிகள் தொந்த ரவு நீங்கும். கடன் பிரச்சினை முடிவுக்கு வரும்.
குடும்ப உறவுகளிடையே இருந்த பிரச்சி னைகள் நீங்கும். கணவன்-மனைவி இடையே நெருக்கம் கூடும். முன்பு வாங்கிப் போட்ட நிலத்தின் மதிப்பு உயரும். உயர்கல்வி படிப்ப வர்களுக்கு எடுத்த காரியம் வெற்றி கிடைக்கும். ராசியில் சூரியன், சனி, புதன், சேர்க்கை இருப்பதால் தோரணையாலும் சாமர்த்தியத்தினாலும் திட்டம் தீட்டி நல்ல பலன்களை பெறப் போகிறீர்கள்.
புதிய முயற்சிகள் நிறைவேறும். தனித் திறமைகள் மிளிரும். எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கும். படித்த படிப்புக்கு தகுந்த நல்ல வேலை கிடைக்கும். ஆரோக்கியம் சீராக இருப்பதால் வைத்தியச் செலவு குறையும். மாமன், மைத்துனருடன் ஏற்பட்ட விரிசல் சீராகும்.சனிக்கிழமை நவகிரகங்களை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கும்பம் - Kumbam
இந்த வார ராசிப்பலன்
20.2.2023 முதல் 26.2.2023 வரை
ஆதாயம் நிறைந்த வாரம். 4,9-ம் அதிபதி சுக்ரன் தன ஸ்தானத்தில் உச்சம் பெறுவதால் தலைமைப் பதவி தேடி வரும். தடைபட்ட வாடகை வருமானம், சம்பள பாக்கிகள் வராக்கடன்கள் வசூலாகும். உழைக்கும் எண்ணம் அதிகரிக்கும். தொழிலில் நல்ல லாபம் உண்டாகும். அரசாங்கத்தால் நன்மை உண்டாகும்.
பங்காளிகளால் ஏற்பட்ட பாகப் பிரிவினை வருத்தங்கள் நீங்கும். நீங்கள் எதிர்பார்த்த அளவு பங்கு கிடைக்கா விட்டாலும் சுமூகமாக நல்ல முறையில் சொத்து கிடைக்கும். நடக்குமா? நடக்காதா என கேள்விக் குறியாக இருந்த அனைத்து நிகழ்வுகளும் மனதிற்கு இனிய முறையில் திருப்பு முனையாக மாறும். வேலை பார்த்த இடத்தில் ஏற்பட்ட வீண் பழிகள் அகலும். உங்களை தவறாக வழி நடத்திய கெட்ட நண்பர்கள் விட்டு விலகுவார்கள்.
ஆரோக்கிய குறைபாடுகள் சீராகும். உயர் கல்வியில் மேன்மை உண்டாகும். குறிப்பாக மருத்துவத் துறை படிப்பு முயற்சியில் இருப்பவர்களுக்கு வெற்றி நிச்சயம். கல்லூரி அரியர்ஸ் பாடத்தை எழுதி முடிக்க ஏற்ற காலம். சிலர் குடியிருப்பை மாற்றம் செய்யலாம். தேக ஆரோக்கியத்தில் தெளி வும், சுகமும் அதிகரிக்கும். அமாவாசையன்று சித்தர்களை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கும்பம் - Kumbam
இந்த வார ராசிப்பலன்
13.2.2023 முதல் 19.2.2023 வரை
வெற்றிச் செய்திகள் வீடு தேடி வரும் வாரம். தன ஸ்தானத்தில் 2,11-ம் அதிபதி குருவுடன் 4,9-ம் அதிபதி சுக்ரன் சேர்வதால் தன ஸ்தானமும் பாக்கிய ஸ்தானமும் வலுப்பெறுகிறது. பூர்வீகச் சொத்தை விற்று புதியசொத்துகள் வாங்கும் சிந்தனை உருவாகும். தடைபட்ட வாடகை வருமானம் வரத் துவங்கும்.
சிலர் புதியவாகனம் வாங்க திட்டமிடுவார்கள். சிலருக்கு கால்நடை வளர்ப்பில் ஆர்வம் உண்டாகும்.உத்தியோ கஸ்தர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். ராசி அதிபதி சனியும் ஏழாம் அதிபதி சூரியனும் ராசியில் சேருவதால் திருமணமான தம்பதிகள் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்துவார்கள். பெண்களுக்கு கணவரின் ஒத்துழைப்பு மற்றும் ஆதரவால் மகழ்ச்சி அதிகரிக்கும். திரும ணத்திற்கு நல்ல வரன் கிடைக்கும். முன்னோர்க ளுக்கு முறையான பித்ருக் கடன் தீர்க்கும் வாய்ப்புகள் உருவாகும்.
பிள்ளைகளால் பெருமை உண்டாகும். பிள்ளைகளின் திருமணம், வளை காப்பு, பெற்றோர்களின் மணிவிழா என வீட்டில் தொடர் சுப நிகழ்வுகள் நடந்து கொண்டே இருக்கும்.கருவுற்றபெண்களுக்கு ஆண் குழந்தை பிறக்கும். சிவராத்திரியன்று சிவபுராணம் படித்து சிவனை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கும்பம் - Kumbam
இந்த வார ராசிப்பலன்
தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும் வாரம். தன லாப அதிபதி குரு தன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பொருளாதார நெருக்கடிகள் குறையும். எதிர்பாராத தன லாபம் உண்டாகும். பொருட்சேர்க்கை அதிகரிக்கும். வாழ்க்கைத் தரம் உயரும். எதையும் சமாளித்து நம்பிக்கையுடன் செயல்படுவீர்கள் ராசியில் நான்கு ஒன்பதாம் அதிபதி சுக்ரனும், ராசி அதிபதி சனியும் சேர்ந்து நிற்பதால் சில கும்ப ராசியினருக்கு அரசியல் ஆர்வம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் நன்மதிப்பை பெறுவீர்கள். இயன்றவரை வேலையை மாற்றம் செய்யாமல் இருப்பது புத்திசாலித்தனம்.
பூர்வீகச் சொத்தில் இருந்து வந்த வில்லங்கங்கள் விலகும். சிலர் பிள்ளைகளின் கல்விக்காக இடப்பெயர்ச்சி செய்ய நேரும். பல சாதகங்கள் நடந்தாலும் ஜென்மச் சனியின் காலம் என்பதால் மிகைப்படுத்தலான மன உளைச்சலும் இருக்கும். 9.2.2023 அன்று 2.50 முதல் 11.2.2023 மதியம் 1.02 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்ப விஷயங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்வதை தவிர்க்கவும். துர்க்கையை வழிபடவும்.
பிரசன்ன ஜோதிடர்
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கும்பம் - Kumbam
இந்த வார ராசிப்பலன்
வராக்கடன்கள் வசூலாகும் வாரம். தன ஸ்தானத்தில் நிற்கும் குருவால் எதையெதையோ செய்து நஷ்டத்தை அடைந்தவர்களுக்கு தன்னம்பிக்கையோடு பிழைக்கும் வழி தென்படும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு என விரும்பிய மாற்றங்களால் ஏற்றம் உண்டாகும். வாழ்க்கைத் தரம் உயரும். வாழ்க்கை துணைக்கு அரசு வேலை கிடைக்கும். வராக்கடன்கள் வசூலாகும். குடும்ப உறுப்பினர்கள் வழியில் சில உதவிகள் கிடைக்கும். நான்கில் செவ்வாய் வக்ரம் பெற்று நிற்பதால் வீடு கட்டும் பணியில் சிறு சுணக்கம் உண்டாகலாம்.
முன்னோர் சொத்துப் பிரச்சினை நீதிமன்ற படி ஏற வைக்கும் என்பதால் பங்காளிகளிடம் பக்குவமாக நடந்து கொள்ளவும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. உண்மையான நண்பர்களையும் ஏமாற்றுபவர்களையும் அடையாளம் காணக்கூடிய சந்தர்ப்பம் உருவாகும். கணவன், மனைவி பிரிவினை அல்லது விவாகரத்து வழக்கு பிரச்சினை முடிவுக்கு வரும். ஏகாதசியன்று சர்க்கரை பொங்கல் படைத்து மகாவிஷ்ணுவை வழிபட முன்னேற்றம் கூடும்.
பிரசன்ன ஜோதிடர்
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கும்பம் - Kumbam
இந்த வார ராசிப்பலன்
23.1.2023 முதல் 29.1.2023 வரை
நம்பிக்கை அதிகரிக்கும் வாரம். ராசி அதிபதி சனியுடன் 4,9ம் அதிபதி சுக்கிரனும் சேர்ந்து நிற்பதால் ஜென்மச் சனியையும் மீறி சில பாக்கிய பலன்கள் நடைபெறும்.உங்களின் திட்டங்கள் எண்ணங்கள் செயலாக்கம் பெறும். குடும்பத்தில் நிலவிய சிறு சிறு குழப்பங்கள் மறையும். உற்றார் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில் தொடர்பான முயற்சியில் தந்தை, மகனுக்கு ஒருமித்த கருத்து நிலவும்.தொழில் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும். வியாபார வளர்ச்சிக்கு தேவையான கடன் உதவி தாய், தந்தையிடம் கிடைக்கும். நம்பிக்கையான புதிய வேலையாட்கள் கிடைப்பார்கள்.
வேலை இல்லாதவர்களுக்கு திறமைக்கும் தகுதிக்கும் தகுந்த நல்ல வேலை கிடைக்கும். அரசு உத்தியோக அனுகிரகம் உண்டாகும். பிரிந்து வாழ்ந்த தாயும், தந்தையும் சேர்ந்து வாழ்வார்கள். ஜென்மச் சனியின் காலம் என்பதால் தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் உணர்வுப் பூர்வமாக செயல்படாமல் நிதானத்துடன் செயல்பட வேண்டும்.கணவன், மனைவி ஒற்றுமையில் அன்பு மிளிரும். ஆரோக்கியம் மேம்படும். அஷ்ட லட்சுமியை வழிபட மகிழ்ச்சி அதிகரிக்கும்.
பிரசன்ன ஜோதிடர்
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கும்பம் - Kumbam
இந்த வார ராசிப்பலன்
16.1.2023 முதல் 22.1.2023 வரை
மனக் குறைகள் நீங்கும் வாரம். ராசி அதிபதி சனியும் 4, 9-ம் அதிபதி சுக்கிரனும் ராசியில் இணைந்து இருப்பதால் பல்வேறு விதமான புண்ணிய பலன்கள் தேடி வரும். ஜென்மச் சனியை மீறிய சுப பலன்கள் உண்டாகும். கூப்பிட்ட குரலுக்கு குல தெய்வம் வந்து நிற்கும். பிள்ளைகளால் ஏற்பட்ட கவலைகள் அகலும். தொழில் திறமைகள் மிளிரும். தொழிலுக்கு வாழ்க்கைத் துணையின் முழுமையான ஆதரவு கிடைக்கும். சிலருக்கு பிரபல சங்கம், இயக்கங்களில் கவுரவப் பதவிகள் கிடைக்கும்.
தந்தை மகன் ஒற்றுமை பலப்படும்.உடன் பிறந்தவர்கள் அனைவரும் ஒற்றுமையாக பேசி முறையாக பாகப் பிரிவினைகளை முடிப்பீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு கூடுதல் பொறுப்பும் பதவி உயர்வும் வந்து சேரும். திருமண முயற்சிகள் பலிதமாகும். தொழிலாளர்களுக்கு குறைந்த உழைப்பும் நிறைந்த வருமானமும் கிடைக்கும்.
எலும்பு, நரம்பு சம்பந்தப்பட்ட தொல்லைகள் சீராகும். வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு பூர்வீகம் வந்து செல்வதில் தடை, தாமதம் உண்டாகும். ஜென்மச் சனியின் காலம் என்பதால் ஆர்வத்தில் சக்திக்கு மீறிய செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்கவும். தினமும் ஆஞ்சநேயரை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கும்பம் - Kumbam
இந்த வார ராசிப்பலன்
9.1.2023 முதல் 15.1.2023 வரை
கவனமாக செயல்பட வேண்டிய காலம். ராசியை நோக்கி சனி பகவான் நெருங்கி வருவதால் தொழில் குறுக்கீடுகள் அதிகரிக்கும்.வேலையில் உள்ளவர்க ளுக்கு திடீரென பொறுப்புகள் மாற்றப்பட்டு மன உளைச்சல் அதிகமாகும். வேலைப்பளு மிகுதியாக இருக்கும். உங்களுக்கு கிடைக்க வேண்டிய பதவி உயர்வு பிறருக்கு கிடைக்கலாம்.
சிலர் பார்க்கும் வேலையில் நிலவும் அசவுகரியத்தால் புதிய வேலைக்கு முயற்சிக்கலாம். தொழிலில் ஏற்ற இறக்கம் இருந்தாலும் கணிசமான பணப் புழக்கம் கைகளில் புரளும். தொழிலில் பணியாளர்களால் நிம்மதி குறையும். ஆரோக்கி யத்திற்கான செலவுகள் அதிகரிக்கும். வாழ்க்கை துணைக்கு தாய் வீட்டுச் சீதனமாக பெரும் சொத்து கிடைக்கும்.திடீர் பயணங்களால் அலைச்சல் மிகுதியாகும்.
12.1.2023 இரவு 9 மணி முதல் 15.1.2023 காலை 6.48 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய முயற்சி களையும் கொடுக்கல், வாங்கல்களையும் தவிர்க்கவும். ஏற்கனவே தொடங்கிய செயல்களைத் தொடர்ந்து செய்யலாம். ஆஞ்சநேயர் வழிபாடு சிறப்பு.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கும்பம் - Kumbam
இந்த வார ராசிப்பலன்
2.1.2023 முதல் 8.1.2023 வரை
வராக்கடன்கள் வசூலாகும் வாரம். தன ஸ்தானத்தில் நிற்கும் குருவால் எதையெதையோ செய்து நஷ்டத்தை அடைந்தவர்களுக்கு தன்னம்பிக்கையோடு பிழைக்கும் வழி தென்படும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு என விரும்பிய மாற்றங்களால் ஏற்றம் உண்டாகும். வாழ்க்கைத் தரம் உயரும்.
வாழ்க்கை துணைக்கு அரசு வேலை கிடைக்கும். வராக்கடன்கள் வசூலாகும். குடும்ப உறுப்பினர்கள் வழியில் சில உதவிகள் கிடைக்கும். நான்கில் செவ்வாய் வக்ரம் பெற்று நிற்பதால் வீடு கட்டும் பணியில் சிறு சுணக்கம் உண்டாகலாம். முன்னோர் சொத்துப் பிரச்சினை நீதிமன்ற படி ஏற வைக்கும் என்பதால் பங்காளிகளிடம் பக்குவமாக நடந்து கொள்ளவும்.
உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. உண்மையான நண்பர்களையும் ஏமாற்றுபவர்களையும் அடையாளம் காணக்கூடிய சந்தர்ப்பம் உருவாகும். கணவன், மனைவி பிரிவினை அல்லது விவாகரத்து வழக்கு பிரச்சினை முடிவுக்கு வரும். ஏகாதசியன்று சர்க்கரை பொங்கல் படைத்து மகாவிஷ்ணுவை வழிபட முன்னேற்றம் கூடும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406






