என் மலர்tooltip icon

    கும்பம் - வார பலன்கள்

    கும்பம் - Kumbam

    இந்த வார ராசிப்பலன்

    12.6.2023 முதல் 18.6.2023 வரை

    ஆதாயமான வாரம். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூரியன் சஞ்சாரம் செய்வதால் ஆன்ம பலம் பெருகும். காதல் வெற்றி தரும். திறமைக்கும், தகுதிக்கும் தகுந்த கவுரவப் பதவிகள் கிடைக்கும். உங்களின் நற்குணங்களால்அனைவரின் பாராட்டையும் பெறுவீர்கள்.விரோதிகளின் சூழ்ச்சிகளை அழித்து தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள்.

    ராசி அதிபதிசனியின் மேல் செவ்வாயின் 8-ம்பார்வை பதிவதால் இயற்கை சுபாவமான முன் கோபத்தைக் குறைந்து எதிலும் நிதானமாக செயல்பட வேண்டும்.மங்களகரமான சுப நிகழ்வுகள் கைகூடும்.நண்பர்களின் ஆதரவால் தடைப்பட்ட செயல்கள் நிறைவடையும்.காணாமல் போன, கைமறதியாக வைத்த பொருட்கள் திரும்ப கிடைக்கும். தம்பதிகளிடம் ஒற்றுமை அதிகரிக்கும்.

    ராசிக்கு ஆறில் சுக்கிரன்செவ்வாயுடன் நிற்பதால் பெண்களிடம் பொருள் பணம் சார்ந்த விசயத்தில் விழிப்புடன் செயல்படவும். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும்.அரசு சார்ந்த துறைகளால் ஆதாயம் உண்டு.ஜென்மச் சனியால் ஏற்படும் சோதனைகளை சாதனைகளாக மாற்ற காக்கைக்கு எள் கலந்த சாதம் மற்றும் தண்ணீர் வைக்கவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கும்பம் - Kumbam

    இந்த வார ராசிப்பலன்

    5.6.2023 முதல் 11.6.2023 வரை

    சுமாரான வாரம்.ராசியில் உள்ள சனி 10-ம் இடமான தொழில் ஸ்தானத்தைப் பார்ப்பதால் உழைப்பிற்கான உண்மையான பலனை அறுவடை செய்வீர்கள். இலாகா மாற்றம் மற்றும் இடமாற்றம் கவலை யைத்தரும். உங்கள் ராசிக்கு இது ஏழரைச் சனியின் காலம் என்பதால் புதிய தொழில் முதலீடுகளில் கவனம் தேவை.

    சனியை, செவ்வாய் பார்ப்பதால் வழக்கு விவகாரங்களில் இழுபறியான சூழல் உண்டாகும். சிலருக்கு கூட்டுக் குடும்பத்தில் பிரிவினை ஏற்படலாம். தேடிச் செல்லும் அன்பு நிலையற்றது, தேடி வரும் அன்பே நிலையானது என்பதை உணர்வீர்கள். எதிரிகளையும், நம்பிக்கை துரோகிகளையும் அடையாளம் காண்பீர்கள். சொந்தங்கள் பற்றிய புரிதல் உணர்வு உண்டாகும்.

    காதலர்களுக்கு பெற்றோர்க ளின் சம்மதம் கிடைக்கும். தடைப்பட்ட திரு மணம் கைகூடும். பழைய வாகனத்தை எக்ஸ்சேஞ் ஆபரில் மாற்றி புதிய வாகனம் வாங்குவீர்கள். வளர்ப்பு பிராணிகளிடம் கவனத்து டன் செயல்படவும். தெய்வ வழிபாடுகள் மூலம் மன நிறைவு, மன நிம்மதி ஏற்படும்.மகிழ்ச்சியை அதிகரிக்க குருவாயூரப்பனை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கும்பம் - Kumbam

    இந்த வார ராசிப்பலன்

    29.5.2023 முதல் 4.6.2023 வரை

    மனம் மகிழும் சம்பவங்கள் நிகழும் வாரம். 3,10-ம் அதிபதி செவ்வாய் ராசி அதிபதி சனியைப் பார்ப்பதால் மனநிம்மதியும், மனோதிடமும் உண்டாகும். தெளிவான சிந்தனையுடன் எதிலும் ஈடுபடுவீர்கள். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.இருளடைந்த உங்கள் வாழ்க்கையில் மீண்டும் ஒளிபிறக்கும்.

    தொழில் வியாபாரத்தில் இருந்த தொய்வு நிலை மாறி முன்னேற்றம் உண்டாகும்.லாபம் அதிகரிக்கும். பிள்ளைகள் பற்றிய கவலைகள் நீங்கும். புதிய வீடு கட்டுவது, பழைய வீட்டை புதுப்பிப்பது போன்ற பணிகள் நடக்கும். கைவிட்டுப் போகும் நிலையில் இருந்த பூர்வீகச் சொத்தின் தீர்ப்பு சாதகமாகும். சிலருக்கு பணிக்காலம் முடிந்த பிறகும் பதவி நீட்டிப்பு கிடைக்கும். அரசியல் ஈடுபாடும் பிரபலமாகும் யோகமும் உண்டாகும். பொருள் கடனும், பிறவிக் கடனும் தீர்க்க உகந்த நேரம்.உடல் உபாதைகள் அகலும்.

    29.5.2023 அன்று காலை 8.55 மணி முதல் 31.5.2023 அன்று மாலை 6.30 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் அடுத்தவர் பிரச்சினைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.பவுர்ணமியன்று குல தெய்வத்தை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கும்பம் - Kumbam

    இந்த வார ராசிப்பலன்

    22.5.2023 முதல் 28.5.2023 வரை

    சிந்தித்து செயல்பட வேண்டிய வாரம். ராசியில் உள்ள சனிக்கு, செவ்வாயின் 8ம் பார்வை பதிவதால் சிறு மன சஞ்சலம் முடிவு எடுப்பதில் குழப்பம் போன்றவை இருக்கும். வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளிக்க கடினமாக உழைத்தால் மட்டுமே ஆதாயம் கிடைக்கும்.பொருளாதார நிலையைப் பொறுத்தவரை சற்று சிரமமான காலம்.

    சிலருக்கு சேமிப்புக்களில் இருக்கும்ப ணத்தில் கை வைக்க வேண்டிய நிலை ஏற்படும். உறவுகளை அனுசரித்து சென்றால் அவர்களின் உதவிகள் கேட்காமலே கிடைக்கும். வீடு மாற்றம், வேலை மாற்றம் ஏற்படலாம். சிலர் கூட்டுக் குடும்பத்தில் இருந்து விலகி தனிக் குடித்தனம் செல்லலாம். வீடு, வாகனக் கடன் கிடைக்கும். குழந்தை பேறு உண்டாகும்.

    ஜென்மச்சனியால் சிலருக்கு திருமண வாய்ப்புகள் தடைபடும்.கணவன், மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நல்லது. நல்ல எண்ணங்களை வளர்த்துக் கொண்டால் மன அமைதி கிடைக்கும். சனிக்கிழமை நெய் தீபம் ஏற்றி துளசி அர்ச்சனை செய்து சக்கரத்தாழ்வாரை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கும்பம் - Kumbam

    இந்த வார ராசிப்பலன்

    15.5.2023 முதல் 21.5.2023 வரை

    தடைகள் தகறும் வாரம். 4, 9-ம் அதிபதி சுக்ரன் பூர்வ புண்ணிய ஸ்தானம் செல்வதால் பூர்வ புண்ணிய ஸ்தானம் பலப்படும். குல தெய்வ அருளும், முன்னோர்களின் நல்லாசியும் கிடைக்கும். தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். அரசுப் பணியாளர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் உண்டாகும்.

    குடும்பத்தில் மகழ்ச்சியான சூழல் நிலவும்.அசையும், அசையாச் சொத்து தொடர்பான முயற்சிகள் கைகூடும். சமயோஜிதமான பேச்சால் தடைபட்ட வேலைகளை முடிப்பீர்கள். போதைக்கு அடிமையான சிலர் மருத்துவத்தில் குணமடைவார்கள்.பெண்களுக்கு தாய் வழிப் பாட்டியின் நகைகள், பணம், பட்டுப் புடவைகள் சீதனமாக கிடைக்கும்.

    சிலர் நவீன வெளிநாட்டு செல்போன் வாங்குவீர்கள்.படிப்பை பாதியில் நிறுத்திய மாணவ மாணவிகளுக்கு மீண்டும் கல்வியைத் தொடரும் வாய்ப்பு கிடைக்கும். புத்திர பாக்கியம், சுபகாரிய நிகழ்ச்சிகள் ஆகியவற்றால் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். வைத்தியம் பலன் தரும். அமாவாசையன்று மாற்றுத் திறனாளிகளுக்கு உதவவும்.

    பிரசன்ன ஜோதிடர்

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கும்பம் - Kumbam

    இந்த வார ராசிப்பலன்

    8.5.2023 முதல் 14.5.2023 வரை

    இலக்கை நோக்கி முன்னேறும் வாரம். தன, லாப அதிபதி குரு முயற்சி ஸ்தானத்தில் சஞ்சரிப் பதால் சோர்வு நீங்கி உற்சாகமாக செயல்படுவீர்கள். உறவினர்கள் மூலம் சில பிரச்சினைகள் ஏற்பட்டாலும் சமாளித்து விடுவீர்கள். காணாமல் போன பொருட்கள் திரும்ப வரும். கை விட்டுப் போன சொத்துக்கள் கைவசமாகும்.6ல் செவ்வாய் நீசமாக இருப்பதால் வராது என்று நினைத்த கடன் தொகை கிடைக்கும்.

    எதிரிகள் இருந்த இடம் தெரியாமலல் போவார்கள். குடும்பத்தில் உங்கள் ஆலோசனைக்கு மிகுந்த முக்கியத்துவம் கிடைக்கும் சகோதரர்களிடம் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும். இதுவரை தேக்க மடைந்த உங்கள் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். இலக்குகளை நிர்ணயித்து வெற்றி யை எட்டிப் பிடிப்பீர்கள். வாழ்க்கைத் தரம் உயரும். ஆரோக்கியமாக வாழ்வீர்கள்.

    பிள்ளை களின் உயர்கல்வி, உத்தியோகம் குறித்து யோசனை அதிகமாகும். அநாவசிய செலவுகள் குறையும். சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகருக்கு சந்தன காப்பு வைத்து வழிபட ஜென்மச் சனியின் தாக்கம் குறையும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கும்பம் - Kumbam

    இந்த வார ராசிப்பலன்

    1.5.2023 முதல் 7.5.2023 வரை

    மனச்சுமை குறையும் வாரம். ராசிக்கு 5-ம்மிடத்தில் செவ்வாய், சுக்ரன் சேர்க்கை இருப்பதால் தாய், காதலி, மனைவி, சகோதரி போன்ற பெண் உறவுகளிடம் இருந்து வந்த மனக்கசப்புகள் தீர்ந்து மனம் மகிழும். சுற்றமும், நட்பும் தேடி வந்து அன்பு பாராட்டுவார்கள். உயர் பதவிகள் கிடைக்கும்.சிலர் கவுரவத்திற்காக பூர்வீகச் சொத்தை விட்டுக் கொடுக்க நேரும்.எதிரிகள் பிரச்சிினை குறையும். விரயச் செலவு குறைந்து கையில் பணம் தங்கும்.

    பணத்தை சேமிக்க வேண்டும் என்ற சிந்தனை அதிகரிக்கும். உற்பத்தி பெருகி லாபம் அதிகரிக்கும். அசையாச் சொத்துக்கள் வாங்கி மகிழ்வீர்கள்.5ம் அதிபதி புதன் வக்ரம் பெறுவதால் பங்குச் சந்தை முதலீடுகளில் எச்சரிக்கையுடன் ஈடுபடுவது நல்லது. மாமனாரால் லாபம் பெருகும். வாரிசுகளால் பெயர், புகழ் கிடைக்கும். ஜென்மச் சனியையும் மீறிய சில நன்மைகள் நடக்கும். வழக்கு விசாரணைகள் துரிதமடையும். ஆரோக்கியம் சீராகும். மறைமுக எதிர்ப்புகள் விலகும்.

    2.5.2023 அன்று காலை 0.20 4.5.2023 அன்று காலை 9.20 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். பவுர்ணமியன்று கோ பூஜை செய்யவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கும்பம் - Kumbam

    இந்த வார ராசிப்பலன்

    24.4.2023 முதல் 30.4.2023 வரை

    புதிய முயற்சிகளில் வெற்றி பெறும் வாரம்.தன லாப அதிபதி குரு முயற்சி ஸ்தானத்தில் நின்று லாப ஸ்தானத்தை பார்ப்பதால் தொட்டது துலங்கும். அரசியல், ஆன்மீகம், கலை என அனைத்து துறை திறமைசாலிகளும் பிரபலமடைவார்கள். பொருளாதாரத்தில் தன் நிறைவு உண்டு.தொழில் லாபமும் ஏற்றமும் உறுதி. கையிருப்பில் இருக்கும் சரக்குகளின் மதிப்பு உயரும்.

    உத்தியோகம், தொழில் ரீதியாக வெளியூர் வெளிநாடு செல்லும் வாய்ப்புகிட்டும். அரசு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு அரசு வேலை கிடைக்கும். அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு பிரச்சினை முடிவுக்கு வரும். மாணவர்கள் எதிர்கால கல்வி குறித்து திட்டமிடுவீர்கள்.திருமணத் தடை அகலும்.

    புத்திர பிராப்தம் உண்டு. பெண்களுக்கு அழகு, ஆடம்பர பொருட்கள், தங்க நகைகள் கிடைக்கும்.வாழ்க்கைக் துணையுடன் நல்ல புரிதல் உண்டாகும். உடல் நலம் சீராகும். சிலருக்கு வாரிசு இல்லாச் சொத்து கிடைக்கும்.சொத்துக்கள் மீதான டாக்குமெண்ட் பிரச்சினை தீரும். சட்ட ரீதியான பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். ஜென்மச் சனியின் இன்னல்கள் குறையும். பாம்பன் சுவாமிகளை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கும்பம் - Kumbam

    இந்த வார ராசிப்பலன்

    17.4.2023 முதல் 23.4.2023 வரை

    சோதனைகள் சாதனைகளாக மாறும் வாரம். ஏழாம் அதிபதி சூரியன் முயற்சி ஸ்தானத்தில் உச்சம் பெற்றதால் திட்டமிடாது செய்யும் காரியங்களில் கூட வெற்றி உண்டாகும். புதிய தொழில் ஒப்பந்தங்கள் தேடி வரும். பூர்வீகச் சொத்துக்களை நல்ல விலைக்கு விற்க ஏற்ற நேரம். வழக்கு விவகாரங்களில் வெற்றி உண்டாகும்.

    கடன் சுமையை குறைக்க புதிய வழிகள் தென்படும்.ஜென்மச் சனியின் தாக்கம் குறைவதால் கடந்த கால நெருக்கடிகள் நீங்கும். நினைத்ததை சாதிக்க கூடிய பணபலம், படை பலம் பெருகும். சிலருக்கு திருமண முயற்சி முன்னுக்குப் பின் முரணாக இருக்கும். சகோதர சகாயம் ஏற்படும். சிலர் வீடு, நிலம் வாகனம், தங்கம் போன்ற வகையில் சுப முதலீடு செய்வீர்கள்.

    நோய் அகல மருத்துவ ஆலோசனை கை கொடுக்கும். அரசிடமிருந்து வீடு, வீட்டு மனை அல்லது வீடு கட்டத் தேவையான நிதியுதவி கிடைக்கும். தம்பதிகள் மகிழ்ச்சியாக இல்லறம் நடத்துவார்கள். வயது முதிர்ந்தவர்களுக்கு அரசின் உதவித் தொகை கிடைக்கும். பல விதமான நற்பலன்கள் மகிழ்சியில் ஆழ்த்தும். 9 பேருக்கு கிரகணத்தன்று தண்ணீருடன் இட்லி தானம் தரவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கும்பம் - Kumbam

    வார ராசிப்பலன்

    10.4.2023 முதல் 16.4.2023 வரை

    முன்னேற்றமான வாரம்.4,9-ம் அதிபதி சுக்ரன் ஆட்சி பலம் பெறுவதால் சதா சர்வ காலமும் குடும்பம், தொழில் பற்றி சிந்திப்பதும் செயல்படு வதுமாகவே இருப்பீர்கள். முயற்சியில் வெற்றியை காண்பது மட்டுமே உங்கள் லட்சியமாக இருக்கும்.பொருளாதார நெருக்கடி குறையும். வெளிநாட்டு வேலை முயற்சி பலன்தரும்.பெண்கள் வேலை பார்க்கும் இடத்திற்கு விசுவாசமாகவும், நன்றியுடனும் இருப்பீர்கள். தாய், தந்தை வழி உறவுகளின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். மூதாதையர் சொத்தில் அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும். சிலர் உபரி பணத்தை புதிய சொத்துக்களில் முதலீடு செய்வார்கள். சிலருக்கு மனைவி மூலம் சொத்துகள் கிடைக்கும்.

    அடமான சொத்துக்களை மீட்க தேவையான நிதி உதவி கிடைக்கும். உயர் கல்வி முயற்சி கை கூடும். பிள்ளைகளால் ஏற்பட்ட தொல்லைகள் குறையும். பெண்களுக்கு மண வாழ்க்கை மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும். மகான்களின் தரிசனத்தால் ஞான வழியில் மனம் சென்று அமைதியாகும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். ஸ்ரீ ரங்கநாதரையும், தாயாரையும் வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

    பிரசன்ன ஜோதிடர்

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கும்பம் - Kumbam

    இந்த வார ராசிப்பலன்

    3.4.2023 முதல் 9.4.2023 வரை

    கடமையில் கண்ணும் கருத்துமாக செயல்பட வேண்டிய வாரம். தன ஸ்தானத்தில் இருந்து குரு 3ம்மிடம் நோக்கி நகர்வதால் மனதில் இருந்த இனம் புரியாத பயம் விலகி தெளிவும், துணிவும் பிறக்கும். விரோதிகளால் உண்டான கெடுதல்கள், தொல்லைகள் விலகி வாழ்வில் நிம்மதி பிறக்கப் போகிறது.

    சிலர் அதிக சம்பளத்திற்கு ஆசைப்பட்டு பார்த்துக் கொண்டு இருந்த உத்தியோகத்தை விட்டு விட்டு வேறு வேலைக்கு செல்வார்கள். சிலருக்கு பார்த்த வேலைக்கு உடனே ஊதியம் வராமல் தடை தாமதமாகும்.

    ஜென்மச் சனியின் காலம் என்பதால் திருமண முயற்சிகள் இழுத்த டிக்கும். புதிய கடன் வாங்கி பழைய கடனை அடைக்க நேரும். மகளுக்கு விரும்பிய விதத்தில் வரன் அமையும். முன்னோர்களின் பரம்பரை வியாதியான சுகர், பிரஷர் போன்றவற்றிற்கு மாற்று மருத்துவம் நல்ல பலன் தரும். கை, கால் மூட்டு வலி குறையும். ஆயுள் தீர்க்கம்.

    4.4.2023 அன்று மாலை 4.05 முதல் 7.4.2023 அன்று காலை 1.10 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பயணங்கள் அதிகரிக்கும். முக்கிய ஆவணங்களையும் பணத்தையும் கவனமாக கையாள வேண்டும். பங்குனி உத்திரத்தன்று ஸ்ரீ கிருஷ்ணரை வழி படவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கும்பம் - Kumbam

    இந்த வார ராசிப்பலன்

    27.3.2023 முதல் 2.4.2023 வரை

    புதிய முயற்சிகள் வெற்றி தரும் வாரம். ராசிக்கு 4,9-ம் அதிபதி சுக்ரன் 3-ல் ராசி அதிபதி சனியின் பார்வையில் நிற்பதால் உங்களின் தனித் திறமையால் எதையும் சமாளிக்கும் பலமுண்டாகும். 7-ம் அதிபதி சூரியன் 2-ல் இருப்பதால் மாற்று இனத்தவரின் ஒத்துழைப்புடன் கூட்டு முயற்சியில் வெற்றி காண்பீர்கள்.

    ஜாமீன் பொறுப்பு ஏற்ற தொகை கைக்கு வந்து சேரும். வாழ்க்கைத் துணைக்கு நல்ல வேலை கிடைக்கும். சிலருக்கு வாழ்க்கைத் துணை மூலம் பெரும் பணம் கிடைக்கும் ஜென்ம ராசியில் நிற்கும் சனியின் பார்வை பத்தாமிடத்தில் பதிவதால் தொழில் மாற்ற சிந்தனை மேலோங்கும். சிலருக்கு தத்து புத்திர யோகம் உண்டாகும். வழக்குகள் சமாதானத்திற்கு வரும்.

    குரு 3-ம் மிடம் நோக்கிச் செல்வதால் விலகிச் சென்ற உடன் பிறப்புகள் மீண்டும் இணை வார்கள். தம்பதிகளுக்குள் ஒருமித்த கருத்து நிலவும். பழைய சொத்தை விற்று புதிய சொத்து வாங்கும் நேரம். வாடகை வீட்டுத்தொல்லை இனி இல்லை. திருமணத் தடை அகலும். பிள்ளைகள் தொழில் உத்தியோகத்திற்காக இடம் பெயரலாம். மாற்று மருத்துவத்தில் ஆரோக்கியம் சீராகும். நடராஜரை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×