என் மலர்
கும்பம் - வார பலன்கள்
கும்பம் - Kumbam
இந்தவார ராசிபலன்
4.9.2023 முதல் 10.9.2023 வரை
அனுகூலமான வாரம். ராசியை ராசி அதிபதி சனியை சூரியன் பார்ப்பதால் அரசு சம்பந்தப்பட்ட முயற்சிகளில் காரிய சித்தி உண்டாகும்.போட்டி பந்தயங்களில் வெற்றி உண்டு. வங்கிக்கடன் கிடைப்பதில் இருந்த தடை, தாமதம் அகலும். தாய், தந்தை, சகோதரியிடம் இருந்த கருத்து வேற்றுமை அகலும். உயர் கல்வியில் இருந்த தடை தாமதம் விலகும்.பிள்ளைகளின் திருமண முயற்சி வெற்றியை தரும். விருந்தினர் வருகை வீட்டை கலகலப்பாக்கும். 3-ல் நிற்கும் குரு வக்ர மடைவதால் வருமானம் ஒரு வழியில் வந்தால் செலவுகள் பல வகைகளில் ஏற்படும். பழைய பாக்கிகள் வசூலாவதில் சற்று காலதாமதமாகும்.சொத்துக்கள் வாங்கும் முன்பு பத்திரங்களை படித்துப் பார்ப்பது அவசியம். காதல் திருமணம் தடைபடும்.சிலர் தவணை முறைத் திட்டத்தில் புதிய வாகனம், நிலம் வாங்கலாம். பிள்ளைகளால் எதிர்பாராத செலவு கள் உண்டு.உஷ்ண நோய் தாக்கம் இருக்கும் என்பதால் காரமான உணவைத் தவிர்க்கவும். தினமும் சிவ வழிபாடு செய்யவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கும்பம் - Kumbam
இந்த வார ராசிபலன்
28.8.2023 முதல் 3.9.2023 வரை
சோதனைகளை சாதனைகளாக மாற்றும் வாரம்.தன, லாப அதிபதி குரு மூன்றில் இருப்பதால் எண்ணங்களும் முயற்சிகளும் நிறைவேறும்.முறையான திட்டமிடுதல் நிரந்தர வெற்றியை குவிக்கும்.புதிய தொழில் முயற்சிகள் தேடி வரும்.வழக்குகள் ஒத்திப் போகும்.எதிரிகள் புறமுதுகு காட்டுவார்கள் அல்லது ஒதுங்கிப்போவார்கள்.ராசியை, ராசி அதிபதியை புதனுடன் சேர்ந்த சூரியன் பார்ப்பதால் ஆன்மீக சிந்தனை மேலோங்கும்.பொருள் பற்றாக்குறை அகலும். குடும்பத்தில் அமைதியும் நிம்மதியும் நிலவும்.புதிய வேற்று மத நண்பர்கள் நண்பிகள் கிடைப்பார்கள்.சில்லரை வணிகர்களுக்கு புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். தொழில் உத்தியோக அனுகூலம் நல்ல விதமாக இருந்தாலும் விரயம் மிகைப்படுத்தலாக இருக்கும். விரயத்தை சுபமாக்க முயற்சிப்பது நலம்.அரசியல் பிரமுகர்களின் சொல்வாக்கு செல்வாக்கு ஓங்கும். மகன், மகளின் முதல் மாத சம்பளம் உங்களை ஆனந்தப்படுத்தும். திருமண முயற்சி வெற்றியாகும். ஆரோக்கியம் சீராகும். பிரதோஷத்தன்று மஞ்சள் அபிசேகம் செய்து சிவனை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கும்பம் - Kumbam
இந்த வார ராசிபலன்
21.8.2023 முதல் 27.8.2023 வரை
இழந்த இன்பங்களை மீண்டும் பெறும் வாரம். ராசியை ராசி அதிபதியை சூரியன் பார்ப்பதால் ஆன்ம பலம் பெருகும். உடலிலும், உள்ளத்திலும் உற்சாகம் கூடும். தோற்றப் பொலிவு ஏற்படும். உங்களின் தனித் திறமையால் சமூகத்தில் நற்பெயர் பெறுவீர்கள். பல காலமாக சொற்ப சம்பளத்தில் வேலை பார்த்தவர்களுக்கு விசேஷமான சம்பள உயர்வு உண்டு. 7-ம் அதிபதி சூரியன் 5, 8ம் அதிபதி புதனுடன் இணைந்து ராசியை பார்ப்பதால் கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழும் தம்பதிகள் சேர்ந்து வாழத் துவங்குவார்கள். கூட்டுத் தொழில் தொடர்பான வழக்குகளின் தீர்ப்பு சாதகமாகும். பிள்ளைகள் பெற்றோர்களை புரிந்து கொள்வார்கள். வைத்தியச் செலவு குறையும்.21.8.2023 மாலை 5.30 வரை சந்திராஷ்டமம் உள்ளதால் முக்கிய காரியங்கள் இழுபறியாகும். பிறர் விசயங்களில் தலையிடுவதை தவிர்க்கவும். அரசின் சட்ட திட்டங்களை மதித்து நடக்கவும்.கருட பஞ்சமியன்று கருடாழ்வார் காயத்திரி மந்திரம் படிக்கவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கும்பம் - Kumbam
இந்த வார ராசிப்பலன்
14.08.2023 முதல் 20.8.2023 வரை
ஏற்றம் இறக்கம் நிறைந்த வாரம். வியாபாரத்தில் கிடைக்கும் லாபம் உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் அதிகரிக்கும். 7-ம் அதிபதி சூரியன் 5,8-ம் அதிபதி புதனுடன் சேர்க்கை பெறுவதால் எந்த கூட்டு முயற்சியிலும் ஈடுபடக் கூடாது. பார்ட்னர்கள் உங்களை பயன்படுத்திக் கொள்வார்கள் அல்லது வம்பில் மாட்டி விடலாம். சிலருக்கு காதல் திருமணம் நடைபெறும்.
சிலரின் திருமண வாழ்க்கை பஞ்சாயத்தில் நிறுத்தும். கோட்சார ரீதியான புனர் பூ தோஷம் இருப்பதால் திருமணம் நிச்சயமானவர்கள், நிச்சியத்த வரனிடம் அதிகம் பேசுவதை தவிர்க்கவும். வைத்திய செலவு குறையும். உடன் பிறந்தவர்களால் சகாயமான பலன்கள் ஏற்படும். 19.8.2023 காலை 5.40 முதல் 21.8.2023 மாலை 5.30 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் சற்று குழப்பமான மன நிலை உண்டாகும். எந்த விசயத்திற்கு யாருக்கும் வாக்குறுதியும் தருவதை தவிர்க்கவும். ஆடி அமாவாசையன்று நலிந்தவர்களின் தேவையறிந்து உதவி செய்வதால் சமுதாயத்தில் மரியாதை கிடைக்கும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கும்பம் - Kumbam
இந்த வார ராசிப்பலன்
07.08.2023 முதல் 13.8.2023 வரை
சகாயங்கள் நிறைந்த வாரம். ராசி அதிபதி சனியின் 3-ம் பார்வை தனலாப அதிபதி குருவின் மேல் பதிவதால் புதிய ஒப்பந்தங்கள் தேடிவரும்.தொழில் ஆரம்பித்து காலூன்ற முடியாமல் தவித்தவர்களுக்கு தொழில் முன்னேற்றம் திருப்தி தரும். கூட்டுத் தொழிலில் இதுவரை இருந்த மாற்றுக் கருத்து மறையும். அரசு வேலைக்கு முயற்சி செய்ய ஏற்ற நேரம். சிலருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு கிட்டும். 3,10-ம் அதிபதி செவ்வாய் 5, 8-ம் அதிபதி புதனுடன் இணைந்து ராசியை பார்ப்பதால் உங்களின் அனுசரணையான அணுகு முறையால் அனைவரின் நன்மதிப்பைப் பெறுவீர்கள்.
பொதுக் காரியங்களில் ஈடுபட்டு புகழ், அந்தஸ்து, செல்வாக்கு, கவுரவம் உயரும். உங்கள் இன, மத இயக்கங்களில் முதன்மைப் பதவியும், கவுரவமும் தேடிவரும். பட்ட கஷ்டத்திற்கு பலன் கிடைக்கும். கடன் பிரச்சினை சிறிது சிறிதாக குறையும்.கடந்த ஆண்டு இழப்புகளால் ஏற்பட்ட எதிர்மறை எண்ணங்கள் மறையும் நேரம் வந்து விட்டது. பிரிந்திருந்த காதல் மற்றும் வாழ்க்கைத் துணை மீண்டும் புத்துயிர் பெற்று இணையும். ஆடி வெள்ளிக்கிழமை துர்க்கையை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கும்பம் - Kumbam
இந்த வார ராசிப்பலன்
31.7.2023 முதல் 6.8.2023 வரை
நிம்மதியான வாரம். ராசியில் உள்ள சனிக்கு செவ்வாய், புதன், சுக்ரன் பார்வை பதிவதால் நீங்கள் அனுபவித்த பிரச்சினைக்கு விடிவு காலமாக இருக்கும். அரசின் உதவிகள், நலத்திட்டங்கள் பயனுள்ளதாக இருக்கும். புதிய தொழில் வாய்ப்புகள், ஒப்பந்தங்கள் கிடைக்கும். முன்னேற்றப் பாதையில் நிலவிய தடைகள் தகறும். குடும்ப பொருளாதார பிரச்சினையை சமாளிக்க நீங்கள் வாங்கிய கடனை சிறுது சிறிதாக அடைக்க முயல்வீர்கள். பூர்வீகம் வந்து செல்வதில் நிலவிய தடைகள் அகலும்.
தடைபட்ட சுப காரியம் தொடர்பான பேச்சுவார்த்தை கைகூடும். அடமானச் சொத்துக்கள், நகைகள் மீண்டு வரும். உடலில் இருந்த ஆரோக்கிய குறைபாடு அகலும். தாய் மாமாவிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மறையும். வீட்டிற்குத் தேவையான அழகு ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். சிலர் விருப்ப ஓய்வு பெறும் வாய்ப்பு உள்ளது. ஏழரைச் சனியையும் மீறிய சுபபலன் உண்டாகும். பிள்ளைகளால் ஏற்பட்ட தொல்லைகள் அகலும். ஆடிப்பெருக்கன்று பால் அபிசேகம் செய்து அம்பிகையை வழிபடவும்.
பிரசன்ன ஜோதிடர்
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கும்பம் - Kumbam
இந்த வார ராசிப்பலன்
24.7.2023 முதல் 30.7.2023 வரை
யோகமான பலன்கள் நடக்கும் வாரம்.தன லாப அதிபதி குரு 3-ம்மிடத்தில் சஞ்சாரம் செய்வதால் குடும்பத்தில் நிலவிய போட்டி, போராட்டம், மனக்கசப்பு, சங்கடங்கள் விலகும்.ஆன்லைன் வர்த்தகம், தகவல் தொடர்பு துறை, ஊடகங்களில் பணிபுரிபவர்கள், கமிஷன் தொழில் புரிபவர்களுக்கு வருமானம் இரட்டிப்பாகும். வராக்கடன்கள் வசூலாகும்.சிலர் குடியிருப்புகளை லீசுக்கு விடலாம்.
சொந்த வீட்டுக் கனவை பிள்ளைகள் நினை வாக்குவார்கள். சகோதரர் வீடு மாற்றம், வேலை மாற்றம் செய்ய வாய்ப்பு உள்ளது காதல் வாழ்க்கை திருமண வாழ்க்கையாக மாறும். குலதெய்வ குற்றம் அகலும்.தாய்வழி உறவுகளால் ஏற்பட்ட மனச் சங்கடம் மறையும். இன்சூரன்ஸ் பாலிசி முதிர்வுத் தொகை கிடைக்கும். சிலர் புதிய பாலிசி எடுப்பார்கள். தந்தைக்கு கண், இருதயம் தொடர்பான சிகிச்சை செய்ய நேரும். உயர் ஆராய்ச்சி கல்வி படிப்பில் ஏற்பட்ட தடைகள் அகலும்.
25.7.2023 அன்று இரவு 11.13 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் முக்கியப் பணிகளை ஒத்தி வைக்கவும்.பண விஷ யத்தில் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. சுமங்கலிப் பெண்களுக்கு மங்கலப் பொருட்கள் வழங்கவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கும்பம் - Kumbam
இந்த வார ராசிப்பலன்
17.7.2023 முதல் 23.7.2023 வரை
ஆரவாரமான வாரம். ராசி அதிபதி சனியை 3,10-ம் அதிபதி செவ்வாயும் 4, 9-ம் அதிபதி சுக்ரனும் பார்ப்பதால் வெளிநாட்டுப் பயணம் மற்றும் வாணிபத்தால் தனலாபம் அதிகரிக்கும். வியாபாரப் பாக்கிகள் அனைத்தும் வசூலாகும். அரசுப் பணியாளருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். தாயாரின் சொத்துக்களைப் பிரிப்பதில் சகோதர சகோதரிகளால் இடையூறு மன உளைச்சல் உண்டாகும்.
பெற்றோர் வழியில் சில உதவிகள் கிடைத்து வாழ்க்கைத் தரம் உயரும். வீட்டில் அமைதியும், நிம்மதியும் நிலவும். அரசியல் பிரமுகர்களுக்கு கட்சி மாறும் எண்ணம் மேலோங்கும்.தாய் மாமனால் நன்மை ஏற்படும். ஆடி மாதம் என்பதால் சாலையோர பொருள்களின் விற்பனை சூடுபிடிக்கும். பண விசயத்தில் கவனம் தேவை. சிலருக்கு ஆரோக்கிய கேடு உண்டாகும். கனிவான பேச்சுக்களால் மனபாரம் குறைந்து நன்மதிப்பு ஏற்படும்.
22.7.2023 இரவு 11.40 வரை சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் சில நேரங்களில் பலவீனமாகவும் சோர்வாக உணர்வீர்கள். காலம் தவறி உணவு உண்பதை தவிர்க்கவும். ஆடி மாதம் சப்த கன்னிகளை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கும்பம் - Kumbam
இந்த வார ராசிப்பலன்
10.7.2023 முதல் 16.7.2023
மனோதிடம்கூடும் வாரம். 3,10-ம் அதிபதி செவ்வாய் 4,9-ம் அதிபதி சுக்ரனுடன் இணைந்து ராசியை பார்ப்பதால்புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும்.எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். தொழில், வேலையில் புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும்.வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். இழுபறி நிலைமாறி துரிதமாக காரியங்கள் நடைபெறும்.
உங்களின் முயற்சிக்கு பெற்றோர்கள், உடன் பிறந்தவர்கள், மனைவி, மக்கள் உதவியாக இருப்பார்கள். புதிய வேலையில் நிறைவான ஊதியமும் மனத் திருப்தியும் ஏற்படும்.வரவு செலவு சீராக இருக்கும். சுய சம்பாத்தியம் பெருகும். கடன் பிரச்சினைகள் படிப்படியாக குறையத் துவங்கும். மனதிற்கு பிடித்த வரன் அமையும்.
குடும்ப பெரியோர்களின் அன்பும் நல் ஆசியும் கிடைக்கும்.ஆன்மீக ஸ்தலங்களுக்கு சென்று வரும் வாய்ப்புள்ளது. தம்பதிகளிடையே இணக்கமான சூழல் நிலவும். ராசியில் உள்ள சனியை செவ்வாய் பார்ப்பதால் உடல் நலத்தில் சிறிய பாதிப்பு தோன்றும். ஆடி அமாவாசையன்று முன்னோர்களை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கும்பம் - Kumbam
இந்த வார ராசிப்பலன்
3.7.2023 முதல் 9.7.2023 வரை
சகாயமான வாரம். 3 10-ம் அதிபதி செவ்வாய்க்கு தன, லாப அதிபதி குருவின் பார்வை இருப்பதால் வசீகரமான தோற்றம் ஏற்படும். வீடு மாற்றம், வேலை மாற்றம் என இடப்பெயர்ச்சியால் மகிழ்ச்சியும் மன அமைதியும் உண்டாகும்.அரசு வேலை முயற்சி சாதகமாகும். கூட்டாளிகளிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மறையும். கூட்டாளி களின் ஒத்துழைப்பால் தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
சிலருக்கு அதிக தொழில் முதலீடு செய்யக் கூடிய தொழில் பார்ட்னர்கள் கிடைப்பார்கள். தள்ளுபடியில் பழைய வாகனத்தை கொடுத்து புதிய 2 , 4 சக்கர வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். ராசி அதிபதி சனிக்கு செவ்வாயின் பார்வை இருப்பதால் அங்காளி பங்காளி வகையில் நிலவிய மனக்கசப்புகள் விலகும்.
பெண்கள் வீடு, வாகனம், அலங்கார ஆடம்பர பொருட்கள், உயர் ரக ஆடைகள் நகைகள் என வாழ்க்கையை அனுப விப்பீர்கள்.செவ்வாய் சுக்ரன் சேர்க்கை தம்பதி களிடம் நல்ல புரிதலை ஏற்படுத்தும். திருமணத் தடைகள் அகலும்.சிலருக்கு மறுமணம் நடக்கும். தாயின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். ஸ்ரீ ராமரை பட்டாபிசேக காட்சியில் வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கும்பம் - Kumbam
இந்த வார ராசிப்பலன்
26.6.2023 முதல் 2.7.2023 வரை
பூர்வ புண்ணிய பலன் நிறைந்த வாரம்.பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி புதன் 7-ம் அதிபதி சூரியனுடன் இணைந்து ஆட்சி பலம் பெறுவதால் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்.வீட்டில் அடிக்கடி மங்களகரமான விசேஷங்கள் நடை பெற்றுக் கொண்டே இருக்கும்.திருமண வாழ்வில் ஏற்பட்ட மனக் கசப்பு மாறும். காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு விலகும்.
3,10-ம் அதிபதி செவ்வாய் ராசிக்கு 7-ல் சனி பார்வையில் சஞ்சரிப்பதால் ஜாதகருக்கு கூட்டுத் தொழில் ஆர்வம் அதிகரிக்கும். ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் துறையினர் தொழிலில் சாதனை படைப்பார்கள். தாய் வழி உறவுகளின் அன்பும், அனுசரனையும் உண்டு.பரிபூரண குல தெய்வ அருள் உண்டு. பூர்வீகச் சொத்தால் பயன் உண்டு. ராசி அதிபதி சனி வக்ரமாக இருப்பதால் எந்தப் பிரச்சினையையும் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று முடிவெடுக்க முடியாத தடுமாற்றம் இருக்கும்.
28.6.2023 அதிகாலை 3.27 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வெளிநபர்களிடம் அநாவசியப் பேச்சைத் தவிர்ப்பது நல்லது சக்திக்கு மீறிய செலவுகளில் ஈடுபடுவதையும், கோபத்தையும் தவிர்க்கவும். விநாயகரை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கும்பம் - Kumbam
இந்த வார ராசிப்பலன்
19.6.2023 முதல் 25.6.2023 வரை
எதிர்பாராத புதிய திருப்பங்கள் உண்டாகும் வாரம். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் பங்குச் சந்தை, அதிர்ஷ்டப் பணம் என உபரி வருமானம் கிடைக்கும். பண வரவு பேசாத உறவுகளையும் பேச வைக்கும். கடன் சுமை குறையும். பேச்சில் தெளிவு இருக்கும். பிள்ளைகளின் எதிர்கால நலனுக்கு ஒரு தொகை யை முதலீடு செய்யும் ஆர்வம் உண்டாகும்.
தொழில், உத்தியோகத்தில் சில முக்கிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. காதல் திரு மண முயற்சி வெற்றி தரும். சிலருக்கு வாழ்க்கைத் துணையால் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். ராசியில் உள்ள சனி பகவான் வக்ரம் பெற்றதால் ஜென்மச் சனியின் தாக்கம் வெகுவாக குறையும். பய உணர்வு, நோய் தாக்கம், சொத்துக்களால் பயனற்ற நிலை, வறுமை, உறவுகளால் ஏற்பட்ட மனவேதனை போன்ற பாதிப்புகள் விலகும்.
அசையும், அசையாச் சொத்துக்களின் பராமரிப்புச் செலவு அதிக மாகும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் அகலும். எதிர்ப்புகள் இல்லாத நிலையை உண்டாகும். 25.6.2023 மாலை 4.50-க்கு சந்திராஷ்டமம் துவங்குகிறது. ஸ்ரீ ராமரை பட்டாபிசேக கோலத்தில் வைத்து வழிபட வேண்டும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406






