என் மலர்
கும்பம் - வார பலன்கள்
கும்பம் - Kumbam
இந்தவார ராசிபலன்
26.11.2023 முதல் 3.12.2023 வரை
பெயர், புகழுடன் வாழும் அமைப்பு உண்டாகும் வாரம். 3, 10-ம் அதிபதி செவ்வாய் ராசிக்கு 10-ல் 7-ம் அதிபதி சூரியனுடன் ஆட்சி பலம் பெறுவதால் தொழில், உத்தியோகத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைத்து படிப்படியான முன்னேற்றம் கிடைக்கும். தொழில் வளர்ச்சிக்கு விண்ணப்பித்த கடன், பண உதவிகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணையால் ஏற்பட்ட இடையூறுகள் குறையும். வேலையில் பதவி உயர்வுகளை அடையக்கூடிய வாய்ப்புகள் உள்ளது. தடைபட்ட சுப காரியங்கள், அனைத்துப் பணிகளும் சுலபமாக நடந்து முடியும்.ஏழரைச் சனியால் பகைமை பாராட்டிய உறவுகள் தற்போது பக்க பலமாக இருப்பார்கள். உறவினர்கள் மத்தியில் மதிப்பும், மரியாதையும் கூடும்.
புத்திக் கூர்மை அதிகரிக்கும். எதிர்காலம் பற்றிய பய உணர்வு நீங்கும். இளைய சகோதர, சகோதரி மூலம் நிலவிய குழப்பங்கள் நீங்கி ஒற்றுமை மேலோங்கும்.திருமணத் தடை அகலும்.விருப்ப திருமணத்திற்கு தந்தையின் ஆதரவு கிடைக்கும். பெண்களுக்கு பிறந்த வீட்டுச் சொத்து கிடைப்பதில் நிலவிய சட்டச் சிக்கல் அகலும். வைத்தியம் பலன் தரும். சரபேஸ்வரர் வழிபாடு நல்லது.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கும்பம் - Kumbam
இந்தவார ராசிபலன்
20.11.2023 முதல் 26.11.2023 வரை
தொழில் வளர்ச்சி பெருகும் வாரம். 1,12-ம் அதிபதி சனியும் 3,10-ம் அதிபதி செவ்வாயும் பார்ப்பதால் சுயதொழிலில் அபாரமான வளர்ச்சி இருக்கும். தொழிலுக்கு தேவையான பணப்புழக்கம் சரளமாக இருக்கும். கடனில் தத்தளித்துக் கொண்டு இருந்த தொழில் நிறுவனங்கள் கடனில் இருந்து மீளும்.2ல் ராகு இருப்பதால் குடும்பத்தில் சிறு சிறு பிரச்சினைகள் தலை தூக்கும். பூர்வீக சொத்து தொடர்பான வம்பு வழக்கு உருவாகும். உடன் பிறந்த சகோதர, சகோதரிகளின் நலனில் அதிக அக்கறை காட்டினாலும் இளைய சகோதரர் உங்களுக்கு எதிராகவே செயல்படுவார். அதை பெரிது படுத்தாமல் விட்டுக் கொடுத்தால் நாட்கள் சுமூகமாக நகரும். உடல் உபாதைகள் அகலும்.
வீடு கட்டும் ஆர்வம் அதிகரிக்கும்.திருமண முயற்சியில் கவனம் தேவை.திருமண மான தம்பதிகள் மகிழ்சியாக இருப்பார்கள்.வீண் செலவு களை குறைத்து சிக்கனத்தை கடைபிடித்தால் சேமிப்பு உயரும்.வாழ்வில் மறக்க முடியாத இனிய நிகழ்வுகள் நடைபெறும். மாமனாரின் ஆதரவு மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும். பவுர்ணமியன்று சிவத் தொண்டு செய்வது நல்லது.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கும்பம் - Kumbam
இந்தவார ராசிபலன்
13.11.2023 முதல் 19.11.2023 வரை
தொழில் வளர்ச்சி பெருகும் வாரம்.ராசி அதிபதி சனிக்கு தொழில் ஸ்தான அதிபதி செவ்வாய் பார்வை சுயதொழிலில் அபாரமான வளர்ச்சி இருக்கும். தொழிலுக்கு தேவையான பணப்புழக்கம் சரளமாக இருக்கும். கடனில் தத்தளித்துக் கொண்டு இருந்த தொழில் நிறுவனங்கள் கடனில் இருந்து மீளும்.2ல் ராகு இருப்பதால் குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் தலை தூக்கும். பூர்வீக சொத்து தொடர்பான வம்பு வழக்கு உருவாகும். உடன் பிறந்த சகோதர, சகோதரிகளின் நலனில் அதிக அக்கறை காட்டினாலும் இளைய சகோதரர் உங்களுக்கு எதிராகவே செயல்படுவார். அதை பெரிது படுத்தாமல் விட்டுக் கொடுத்தால் நாட்கள் சுமூகமாக நகரும்.
உடல் உபாதைகள் அகலும். அரசு உத்தியோகம் மற்றும் பொதுவாழ்வில் இருப்பவர்கள் மிகவும் எச்சரிக்கையாகப் பேசவேண்டும். வீடு கட்டும் ஆர்வம் அதிகரிக்கும். திருமண முயற்சியில் கவனம் தேவை.திருமணமான தம்பதிகள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.வீண் செலவுகளை குறைத்து சிக்னத்தை கடைபிடித்தால் சேமிப்பு உயரும். வாழ்வில் மறக்க முடியாத இனிய நிகழ்வுகள் நடைபெறும். மாமனாரின் ஆதரவு மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும். சஷ்டி திதியில் முருகனுக்கு சந்தன அபிசேகம் செய்து வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கும்பம் - Kumbam
இந்தவார ராசிபலன்
6.11.2023 முதல் 12.11.2023 வரை
நினைத்தது, நினைத்தபடியே நடக்கும் வாரம்.ராசி அதிபதி சனி வக்ர நிவர்த்தி பெற்றதால் தடைபட்ட பணிகள் துரிதமாகும். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கும். மாணவர்கள் கல்வியினால் பாராட்டுப் பெறுவார்கள். வீர விளையாட்டில் ஆர்வம் உண்டாகும். ராகு மற்றும் கேதுவால் வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும். சுய ஜாதகத்தை சரிபார்த்து வெளிநாடு வாய்ப்பை முடிவு செய்வது உத்தமம். ஆயுள், ஆரோக்கியம் அதிகரிக்கும்.குழந்தை பாக்கியம் உண்டாகும். செயற்கைக் கருத்தரிப்பிற்கு முயற்சி செய்பவர்களுக்கும் இது சாதகமான காலம். உழைப்பினால் செல்வாக்கும், சொல்வாக்கும் உயரும் .
சிலருக்கு சுய விருப்ப விவாகம் நடைபெறும். சிலருக்கு மறுமணம் நடக்கும்.குலதெய்வ, குடும்ப தெய்வ வழிபாடு உங்களுக்கு உதவியாக இருக்கும். 9.11.2023 மதியம் 2 முதல் 11.11.2023 மதியம் 1 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் செயல்பாடுகள் மூலம் எதிர்ப்பும் இடையூறுகளும் உண்டாகும் என்பதால் நிதானம் தேவை. நிர்வாகப் பணியில் இருப்பவர்களுக்கு உயர் அதிகாரிகளால் பிரச்சினை உண்டாகும்.தீபாவளி யன்று மகாலட்சு மியை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கும்பம் - Kumbam
இந்தவார ராசிபலன்
30.10.2023 முதல் 5.11.2023 வரை
சுமாரான வாரம். 2-ல் ராகு 8-ல் கேது. சர்ப்ப தோஷம்.சுய ஜாதக ரீதியாக ராகு கேது தசை நடப்பவர்கள் மிக எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். வாழ்க்கைத் துணை மற்றும் குடும்பத்தி னருடன் வாக்குவாதங்களை தவிர்க்கவும். விவாகரத்து வழக்கு சாதகமாகி கணவரிடம் இருந்து கோரிய ஜீவனாம்சம் கிடைக்கும். அரசு வகை ஆதாயம் உண்டு. தொழிலுக்காக அடிக்கடி பயணம் செய்ய நேரும். வியாபார விருத்திக்காக எடுக்கும் முயற்சிகளில் சுணக்கம் உண்டாகும். தொழில் போட்டிகளை பொறுமையாக சமாளிக்க வேண்டிய நேரம். சகோதரரிடையே நிலவிய ஒற்றுமையில்லாத நிலை சீராகும். இளைய சகோத ரருக்குத் தேவையான உதவிகளைச் செய்வீர்கள்.
விவசாயிகளுக்கு புதிய விற்பனையாளர்கள் கிடைப்பார்கள். அடமானக் கடன்களுக்கு தவறாமல் வட்டி செலுத்தவும். நம்பக மற்ற இடத்தில் கடன் வாங்குவதையும், கொடுப்ப தையும் தவிர்க்கவும். தீபாவளிக்குள் எதிர்பார்த்த தொகை கைக்கு கிடைக்கும். மாணவர்களுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும். தீபாவளி விடுமுறைக்கு குடும்பத்து டன் சுற்றுலா சென்று வர திட்டமிடுவீர்கள். ஆஞ்சநேயரை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கும்பம் - Kumbam
இந்தவார ராசிபலன்
23.10.2023 முதல் 29.10.2023 வரை
சுப பலன்களால் மனம் மகிழும் வாரம்.தன லாப அதிபதி குரு லாப ஸ்தானத்தைப் பார்ப்பதால் அதிர்ஷ்டம் அரவணைக்கும். பல்வேறு சுப பலன்கள் உண்டாகும். தொழிலில் உன்னத நிலையை அடைய முடியும். செல்வாக்கு, திறமை மற்றும் கவுரவத்தோடு செயல்பட்டு சிறப்பும் பெருமையும் அடைய முடியும்.திறமைகளின் மூலம் பணியில் பொறுப்புகள் உயரும்.சமூகசேவை புரிபவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். நன்மைகளே மிகுதியாக நடக்கும், எனினும் வாக்கு ஸ்தானத்தில் ராகு நுழைவதால் யாருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம்.குழந்தை இல்லாதவர்களுக்கு வாரிசு உண்டாகும்.
சத்ருக்கள் தொல்லை அகலும். கடன் வாங்குவதை தவிர்த்தல் நலம். வாகன வசதிகள் மேம்படும்.தீபாவளி ஆபரில் புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள் ஜென்மச் சனியின் காலம் என்பதால் வரனை தேர்வு செய்வதில் நெருடல் இருக்கும். தம்பதிகள் ஒற்றுமையாக இருப்பார்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.உடல் சோர்வால் எண்ணிய பணிகளை முடிப்பதில் காலதாமதம் ஏற்படும். உங்கள் குல அல்லது இஷ்ட தெய்வத்தை மனம் தளராது வழிபட அனைத்தும் சுபமாகவே இருக்கும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கும்பம் - Kumbam
இந்தவார ராசிபலன்
16.10.2023 முதல் 22.10.2023 வரை
மகிழ்ச்சி மனபலம் கூடும் வாரம். ராசி அதிபதி சனி பனிரெண்டில் மறைந்தாலும் தனலப அதிபதி குருவின் சஞ்சாரம் சாதகமாக உள்ளது. கடுமையாக முயற்சித்தும் இதுவரை நடக்காத விசயங்கள் இப்பொழுது நடைபெறும்.விதியை மதியால் வெல்லும் தைரியத்தால் ஜென்மச் சனியை வெல்ல முடியும். 2,8-ம் மிடத்திற்கு ராகு கேதுக்கள் பெயர்ச்சியாக உள்ளதால் அதிக முதலீட்டில் தொழில் நடத்துபவர்கள் மிக கவனமாக இருந்தால் போதும். முதலீடு இல்லாத தொழில்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது. பொருள் வரவு அதிகமாகும்.வாராக்கடன் வசூலாகும். உத்தியோகத்தில் விரும்பிய பதவி உயர்வு தேடி வந்தாலும் பணிச்சுமை வாட்டும்.
அரசியல் பிரமுகர்களுக்கு மேலிடம் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பகை உணர்வு ஏற்படும்.திருமணம், குழந்தை பாக்கியம் போன்ற சுப நிகழ்வுகள் நல்ல முறையில் நடக்கும்.வழக்குகளில் தீர்ப்பு தள்ளிப்போகும். பெண்களுக்கு வீட்டிலும், வேலை செய்யும் இடத்திலும் மதிப்பு, மரியாதை உயரும்.விலை உயர்ந்த ஆபரணங்களை கவனமாக பாதுகாக்க வேண்டும். ஜென்ம சனியின் காலம் என்பதால் தினமும் சுந்தர காண்டத்தில் ஒரு அத்தியாயம் பாராயணம் செய்வது சிறப்பு.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கும்பம் - Kumbam
இந்த வார ராசிபலன்
9.10.2023 முதல் 15.10.2023 வரை
மனக்குறை தீரும் வாரம். பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி புதன் உச்சம். பாக்கிய அதிபதி சுக்ரன் ராசியை ராசி அதிபதி சனியை பார்க்கிறார் என முக்கிய கிரகங்கள் ராசியை பலப்படுத்துகிறது.நிறைந்த அறிவு, திறமை இருந்தும் பயன்படுத்தவோ சாதிக்கவோ முடியவில்லையே என்ற மனக்குறை தீரும். உண்மையான உழைப்பிற்கான பலனை அறுவடை செய்யும் நேரம். திடமான நம்பிக்கையும், தெம்பும், உற்சாகமும் அதிகரிக்கும். பல வருடங்களாக புத்திர பாக்கியம் தடைபட்டவர்கள் செயற்கை கருத்தரிப்பு முறையை அணுக உகந்த காலம்.தொழில் நிறுவனத்திற்கு நம்பிக்கையும், நன்றியும் உள்ள புதிய வேலையாட்கள் அமைவார்கள். சக ஊழியர்களால் அதிக நன்மை கிடைக்கும்.
திருமணத்தடை அகலும்.தடைப்பட்ட பாக்கிகள் வசூலாகும். பழைய கடன்களையும், சிக்கல்களையும் தீர்க்கும் நிலை உருவாகும். உங்களின் வெற்றிக்கு வாழ்க்கை துணையின் ஆதரவு இருக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை அதிகரிக்கும். 12.10.2023 மாலை 6.15 முதல் 15.10. 2023 காலை 5.20 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் கடன் பெறுவது, கடன் கொடுப்பது, ஜாமீன் போடுவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். மகாளய அமாவாசையன்று சாலையோரம் வசிப்பவர்களுக்கு உதவவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கும்பம் - Kumbam
இந்தவார ராசிபலன்
2.10.2023 முதல் 8.10.2023 வரை
பல்வேறு விதமான வளமான பலன்கள் சித்திக்கும் வாரம். ராசி அதிபதி சனியை 4,9-ம் அதிபதி சுக்ரன் பார்ப்பதால் உங்கள் வாழ்க்கையில் மிகப் பெரிய நல்ல மாற்றங்கள் ஏற்படப் போகிறது.
பிரிந்து வாழ்ந்த தாய், தந்தை சேர்ந்து வாழத் துவங்குவார்கள். பூர்வீக சொத்து வழக்கில் திருப்பம் ஏற்படலாம். பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் உண்டு. சிறப்பான பண வரவால் அனைத்து தேவைகளும் நிறைவேறும்.ஆன்மீக சுற்றுப் பயணம் மற்றும் மகான்களின் சந்திப்பு கிடைக்கும். வெளிநாட்டு வேலைக்கான உத்தரவு வரும். புத்திர பிராப்தம் உண்டாகும். சிலருக்கு கடுமையான அலைச்சல் மிதந்த பயணம் செய்ய நேரும். பெண்களுக்கு ஆடம்பர பொருட்கள் மற்றும் ஆபரணங்கள் சேரும்.
தம்பதிகள் அன்பாக ஒருமித்த கருத்துடன் வாழ்வார்கள். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். குழந்தைகளின் கல்வி ஆர்வம், முன்னேற்றம் மன நிம்மதி தரும். புதிய அசையும், அசையாச் சொத்துக்கள் வாங்கும் வாய்ப்புகள் உள்ளது. சுப காரியப் பேச்சுக்கள் கைகூடும். பெற்றவர்கள், பெரியவர்களின் நல்லாசியுடன் திருமணம் நடக்கும். மகாளய பட்ச காலத்தில் பெற்றோர்களின் நல்லாசியைப் பெறவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கும்பம் - Kumbam
வார ராசிபலன்
25.9.2023 முதல் 1.10.2023 வரை
தடைகள் தகறும் வாரம்.பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி புதன் ராசியை ராசி அதிபதி சனியை பார்க்கிறார். புதனுக்கு குருப் பார்வை என முக்கிய கிரகங்கள் கும்ப ராசிக்கு சாதகமாக இருப்பதால் தொட்டது துலங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். ராசி, பூர்வ புண்ணிய ஸ்தானம், பாக்கிய ஸ்தானம் குருவால் பலம் பெறுவதால் அதிர்ஷ்டமும், பேரதிர்ஷ்டமும் இணைந்து ராஜ யோகத்தை தரும். நல்ல வசதி வாய்ப்புகள் உருவாகும். பணவசதி சிறப்பாக இருக்கும். பொருளாதார நிலையிலே மிகப் பெரிய வளர்ச்சி ஏற்படும். தங்க விலை உயர்வை பொருட்படுத்தாமல் தங்கத்தில் முதலீடு செய்வீர்கள். புதிய தொழில் ஒப்பந்தங்கள் கிடைக்கும். மாணவர்களுக்கு போட்டித் தேர்வில் வெற்றி சுலபமாகும். உறவினர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும். திருமணத் தடை அகலும். வாழ்க்கைத் துணையின் ஆயுள் பலப்படும்.பதவி உயர்வு, ஊதிய உயர்வால் மனதில் மகிழ்ச்சி பொங்கும். ஜென்மச் சனியின் காலம் என்பதால் அடிக்கடி வேலை மாற்றம் செய்வதை தவிர்க்க வேண்டும். மகாளய பட்ச காலத்தில் குழந்தை கள் காப்பகத்திற்கு உணவு தானம் வழங்கவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கும்பம் - Kumbam
இந்தவார ராசிபலன்
18.9.2023 முதல் 24.9.2023 வரை
சீரிய எண்ணங்கள் மேலோங்கும் வாரம். ராசியை ராசி அதிபதி சனியை 5,8ம் அதிபதி புதன் பார்ப்பதால் ஆன்மீக வழிபாட்டில் மனம் ஈடுபடும். மலைபோல் வந்த துன்பம் பனி போல விலகும். எதிர்பாராத செலவுகளால் நெருக்கடியான சூழல் ஏற்பட்டாலும் சமாளித்து விடுவீர்கள். தொழில் தொடர்பாக அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த அனு கூலமான பலன்கள் கிடைக்கும். உறவுகளிடம் அமைதிப் போக்கினை கையாளவும். நண்பர்களிடம் வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பம் பற்றிய கவலையால் மனச்சோர்வு உண்டாகும். தம்பதிகள் தங்கள் பிரச்சினைகளை மூன்றாம் நபரிடம் கொண்டு செல்லாமல் தாங்களே தீர்த்துக் கொள்வ தால் ஊடல் கூடலாகும். சில சட்ட ஆலோசனை பெறுவதற்கு இந்த வாரம் வக்கீலை சந்திப்பீர்கள். ஒரு சிலருக்கு பூர்வீக சொத்து தொடர்பான வழக்குகளை சந்திக்க நேரும். வீடு, வாகனம் போன்ற சுப செலவுகளுக்கு சகோதரியிடம் இருந்து கணிசமான தொகை கிடைக்கும். ஜென்மச் சனியின் காலம் என்பதால் கண் திருஷ்டி, போட்டி-பொறாமை போன்றவற்றால் வைத்தியச் செலவு உருவாகும். மன அமைதியையும், ஆனந்தத்தையும் அதிகரிக்க கற்பக விநாயகரை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கும்பம் - Kumbam
இந்தவார ராசிபலன்
11.9.2023 முதல் 17.9.2023 வரை
அயராத உழைப்பும் முயற்சியும் பலன் தரும் சாதகமான வாரம். 5,8-ம் அதிபதி புதன் சூரியனுடன் இணைந்து ராசி அதிபதி சனியைப் பார்ப்பதால் தொழிலில் இருந்து வந்த தடை தாமதங்கள் அகலும். தந்தையின் அரசு வாரிசு வேலை கிடைக்கும். குடும்ப உறவுகளிடம் நிலவி வந்த சங்கடங்கள் மறையும். குலத்தொழில் செய்பவர்களின் புகழ், அந்தஸ்து,கவுரவம், பணபலம் உயரும். புதிய எதிரிகள், நோய் தாக்கம் உருவாகும். வாழ்க்கை துணையின் வேலை நிரந்தரமாகும்.கமிஷன் அடிப்படையில் தொழில் புரிபவர்களுக்கு அதிகப்படியான நன்மைகள் உண்டு.எதிர்காலத் தேவைக்கான இன்சூரன்ஸ் பாலிசி அல்லது நலத்திட்டங்களில் சேமிப்பு போன்ற சுபச்செலவுகள் அதிகரிக்கும். பிள்ளைகள் கல்விக்காக இடம் பெயரலாம். திருமணக் கனவு நினைவாகும். குழந்தை பாக்கியம் கிட்டும். உத்தியோகத்தில் விரும்பிய இடமாற்றம் ஊதிய உயர்வு உண்டு. மாமியார் மருமகள் கருத்து ஒற்றுமை மேம்படும். 15-ந் தேதி பகல் 11.35 முதல் 19-ந் தேதி இரவு 11.08 வரை சந்தி ராஷ்டமம் இருப்பதால் உத்தி யோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். அலைச்சல் கூடும். பிரதோஷத்தன்று பால் அபிசேகம் செய்து சிவ வழிபாடு செய்யவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406






