என் மலர்
கும்பம் - இன்றைய ராசி பலன்கள்
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன் - 12 பிப்ரவரி 2025
யோகமான நாள். பிள்ளைகளின் வளர்ச்சி கண்டு பெருமை அடைவீர்கள். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் சிறப்பாக இருக்கும். கூட்டுத் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன் - 11 பிப்ரவரி 2025
தொட்டது துலங்கும் நாள். பொருளாதார நிலை உயரும். பிள்ளைகளிடம் பக்குவமாகப் பேசுவது நல்லது. சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகள் சாதகமாக முடியும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன் - 10 பிப்ரவரி 2025
பிரச்சினைகள் தீரும் நாள். பிற இனத்தாரால் பெருமை சேரும். யாரை பார்க்க நினைத்தீர்களோ அவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். தொழில் வளர்ச்சி உண்டு.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன் - 9 பிப்ரவரி 2025
ஆலய வழிபாட்டால் அமைதி காண வேண்டிய நாள். ஆதரவுக்கரம் நீட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இல்லம் கட்டிக் குடியேறும் எண்ணம் மேலோங்கும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன் - 8 பிப்ரவரி 2025
உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டும் நாள். உள்ளத்தில் ஒன்றும் உதட்டில் ஒன்றும் வைத்துப் பேசுபவர்களை இனம் கண்டு கொள்வீர்கள். வழக்குகள் சாதகமாகும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன் - 7 பிப்ரவரி 2025
நாவன்மையால் நல்ல பெயர் எடுக்கும் நாள். பயணங்களில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். உறவினர்களால் ஏற்பட்ட தகராறுகள் அகலும். கடித அனுகூலம் உண்டு.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன் - 6 பிப்ரவரி 2025
நன்மைகள் நடைபெறும் நாள். பெரிய மனிதர்களின் சந்திப்பு கிடைத்து மகிழ்வீர்கள். தொழிலில் தீட்டிய திட்டங்களால் லாபம் அதிகரிக்கும். தொலை துாரத்திலிருந்து நல்ல தகவல் வந்து சேரும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன் - 5 பிப்ரவரி 2025
நன்மைகள் நடைபெறும் நாள். பிள்ளைகள் வழியில் பெருமையான தகவல் வந்து சேரும். புதிய உத்யோக வாய்ப்பு கைகூடும். இடம், பூமி வாங்கப் போட்ட திட்டம் நிறைவேறும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன் - 4 பிப்ரவரி 2025
தொட்ட காரியம் வெற்றி பெறும். கல்யாணப் பேச்சுக்கள் முடிவாகும். நண்பர்கள் நல்ல தகவலைத் தருவர். உத்தியோகத்தில் புதிய வேலைக்கு செய்த முயற்சி கைகூடும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன் - 3 பிப்ரவரி 2025
விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். இடமாற்றம், வீடுமாற்றம் செய்யலாமா என்ற சிந்தனை மேலோங்கும்.பயணங்களில் கூடுதல் கவனம் தேவை.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன் - 2 பிப்ரவரி 2025
மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும். ஆற்றல் மிக்கவர்களின் ஒத்துழைப்பால் தொழில் முன்னேற்றம் காண்பீர்கள்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன் - 1 பிப்ரவரி 2025
மனதிற்கினிய சம்பவம் நடைபெறும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.






