search icon
என் மலர்tooltip icon

    அங்கோலா

    • இந்த இளஞ்சிவப்பு நிற வைரம் அங்கோலாவில் கண்காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.
    • அந்த வைரத்துக்கு ‘லுலோ ரோஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது.

    லுவாண்டா :

    மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான அங்கோலா வைரங்களை உற்பத்தி செய்யும் உலகின் முதல் 10 நாடுகளில் ஒன்றாக உள்ளது. அந்த நாட்டின் பல்வேறு பகுதிகளில் வைரங்களை வெட்டி எடுக்கும் சுரங்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்த நிலையில் அங்கோலாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள லுலோ நகரில் ஆஸ்திரேலியாவின் லுகாபா வைர நிறுவனத்துக்கு சொந்தமான சுரங்கத்தில் மிகப்பெரிய இளஞ்சிவப்பு நிற வைரம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 170 காரட் என கணக்கிடப்பட்டுள்ளது.

    இது, உலகில் கடந்த 300 ஆண்டுகளில் கிடைத்த மிகப்பெரிய இளஞ்சிவப்பு நிற வைரம் என லுகாபா வைர சுரங்க நிறுவனம் தெரிவித்துள்ளது.

    லுலோ நகரில் கண்டெடுக்கப்பட்டதால், அந்த வைரத்துக்கு 'லுலோ ரோஸ்' என பெயரிடப்பட்டுள்ளது. தற்போது இந்த இளஞ்சிவப்பு நிற வைரம் அங்கோலாவில் கண்காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.

    ×