டென்னிஸ்

கனடா ஓபன் டென்னிஸ் - சின்னர், டி மினார் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

Published On 2023-08-13 17:12 GMT   |   Update On 2023-08-13 17:12 GMT
  • கனடா ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி போட்டிகள் நடைபெற்றது.
  • இதில் சின்னர், டி மினார் ஆகியோர் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினர்.

மாண்ட்ரியல்:

கனடா ஓபன் டென்னிஸ் தொடர் மாண்ட்ரியல் நகரில் நடைபெற்று வருகிறது.

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி போட்டிகள் இன்று நடைபெற்றது.

இதில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார், ஸ்பெயின் வீரர் போகினாவுடன் மோதினார். இதில் டி மினார் 6-1, 6-3 என்ற செட் கணக்கில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

இதேபோல், இத்தாலி வீரர் ஜானிக் சின்னர், அமெரிக்க வீரர் டாமி பாலுடன் மோதினார். இதில் சின்னர் 6-4, 6-4 என்ற கணக்கில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

Tags:    

Similar News