தொழில்நுட்பம்
இந்தியாவில் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 முன்பதிவு துவங்கியது
இந்தியாவில் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 (ஜிபிஎஸ் + செல்லுலார்) மே 11-ம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், இதற்கான முன்பதிவுகள் துவங்கப்பட்டுள்ளன.
புதுடெல்லி:
ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 (ஜிபிஎஸ் + செல்லுலார்) மாடல் இந்தியாவில் மே 11-ம் தேதி வெளியாக இருக்கிறது. அந்த வகையில் புதிய வாட்ச் 3 சீரிஸ் மாடல்களுக்கான முன்பதிவுகள் இந்தியாவில் துவங்கப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் போன்ற டெலிகாம் நிறுவனங்களின் வலைத்தள பக்கங்களில் ஆப்பிள் வாட்ச் புதிய மாடலுக்கான முன்பதிவுகள் துவங்கப்பட்டுள்ளன.
ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3:
புதிய ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 இசிம் பயன்படுத்துவதால், பிரத்யேக சிம் கார்டு தேவைப்படாது. ரிலையன்ஸ் ஜியோ சார்பில் ஜியோ எவ்ரிவேர் கனெக்ட் (JioEverywhereConnect) சேவை வழங்கப்படுகிறது. இந்த சேவையை கொண்டு ஒரே ஜியோ நம்பரை ஐபோன் மற்றும் ஆப்பிள் வாட்ச் சாதனங்களில் பயன்படுத்த முடியும். ஜியோ எவ்ரிவேர் கனெக்ட் சேவை ஐபோன் வாடிக்கையாளர்களுக்கு எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி வழங்கப்படுகிறது.
ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 மாடல்களில் மேம்படுத்தப்பட்ட டூயல்-கோர் பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. இது முந்தைய மாடல்களை விட 70% வேகமாக இயங்கும், புதிய W2 வயர்லெஸ் சிப் 85% வேகமான வைபை, 50% சீரான ப்ளூடூத் கனெக்டிவிட்டி உள்ளிட்ட வசதிகளையும் வாட்டர் ரெசிஸ்டண்ட் பாடி கொண்டுள்ளது.
இந்தியாவில் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 (ஜிபிஎஸ் + செல்லுலார்) மாடலை ஜியோ அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் முன்பதிவு செய்யப்படுகிறது. இவற்றின் விநியோகம் மே 11-ம் தேது துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் ரிலையன்ஸ் டிஜிட்டல் மற்றும் ஜியோ ஸ்டோர்களில் மே 11-ம் தேதி முதல் கிடைக்கும்.
ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 இந்திய விலை:
புதிய ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 (ஜிபிஎஸ் + செல்லுலார்) மாடல் 38 மில்லிமீட்டர் சில்வர் அலுமினியம் கேஸ் ஃபாக் ஸ்போர்ட் பேன்ட் / ஸ்பேஸ் கிரே அலுமினியம் கேஸ், பிளாக் ஸ்போர்ட் பேன்ட் / கோல்டு அலுமினியம் கேஸ் மற்றும் பின்க் சேன்ட் ஸ்போர்ட் பேன்ட் / ஸ்பேஸ் கிரே அலுமினியம் கேஸ், கிரே ஸ்போர்ட் பேன்ட் விலை ரூ.39,080 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 ஆரம்ப விலை ரூ.39,080 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் பல்வேறு கேஸ்கள், மற்றும் நிறங்களுக்கு ஏற்ப விலை மாறுகிறது. ஆப்பிள் வாட்ச் எடிஷன் (ஜிபிஎஸ் + செல்லுலார்) 42 மில்லிமீட்டர் செராமிக் கேஸ், சாஃப்ட் வைட் / பெப்பிள் ஸ்போர்ட் பேன்ட் கொண்ட மாடலின் விலை ரூ.1,22,090 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது ஆப்பிளின் விலை உயர்ந்த் சீரிஸ் 3 வாட்ச் என்பதும் குறிப்பிடத்தக்கது.