தொழில்நுட்பம்

அசத்தும் சியோமி பிளாக் ஷார்க் ஸ்மார்ட்போன் டீசர்

Published On 2018-04-08 06:01 GMT   |   Update On 2018-04-08 06:01 GMT
பிளாக் ஷார்க் ஸ்மார்ட்போன் வெளியீடு உறுதி செய்யப்பட்ட நிலையில் ஸ்மார்ட்போனின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

சியோமி நிறுவனம் பிளாக் ஷார்க் ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து ஸ்மார்ட்போனின் டீசர் வெளியாகியுள்ளது.

ஏப்ரல் 13-ம் தேதி வெளியாக இருக்கும் பிளாக் ஷார்க் கேமிங் ஸ்மார்ட்போனில் சியோமி முதலீடு செய்திருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஸ்மார்ட்போனின் முதல் டீசர் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. 

மெட்டல் ஃபிரேம் மற்றும் பச்சை நிற பவர் பட்டன் கொண்டிருக்கும் புசிய ஸ்மார்ட்போன் X ஆன்டெனா வடிவமைப்பு கொண்டுள்ளது. இதில் ஜிபிஎஸ், வைபை மற்றும் எல்டிஇ உள்ளிட்டவற்றிற்கு அன்டெனா கட்கள் இருக்கிறது. X ஆன்டெனா வடிவைப்பு கொண்ட முதல் ஸ்மார்ட்போன் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.



முன்னதாக இந்க ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வழங்கப்பட இருப்பது உறுதி செய்யப்பட்டது. இத்துடன் ஏற்கனவே வெளியான தகவல்களில் இந்த ஸ்மார்ட்போனில் 8 ஜிபி ரேம், ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம் மற்றும் 2160x1080 FHD ரக டிஸ்ப்ளே வழங்கப்படலாம் என கூறப்பட்டிருந்தது.

ரேசர் ஸ்மார்ட்போனுடன் போட்டியிட ஏதுவாக புதிய ஸ்மார்ட்போனில் 120 Hz ரக டிஸ்ப்ளே வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் புதிய ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ தகவல்கள் அடுத்த வாரத்தில் தெரியவரும்.
Tags:    

Similar News