தொழில்நுட்பம்
அதிரடி அம்சங்களுடன் இணையத்தில் கசிந்த பானாசோனிக் ஸ்மார்ட்போன்
ஹூவாய் நிறுவனம் விரைவில் வெளியிட இருக்கும் ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்கள் மற்றும் வடிமைப்பு சார்ந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி:
ஸ்மார்ட்போன் சந்தையில் தற்சமயம் அறிமுகமாகும் புதிய மாடல்களில் ஐபோன் X சாயல் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. ஹூவாய் P20 ஸ்மார்ட்போன் சார்ந்த தகவல்கள் பலமுறை இணையத்தில் கசிந்திருக்கும் நிலையில், ஸ்மார்ட்போனின் அம்சங்கள் மற்றும் தகவல்கள் ட்விட்டரில் வெளியாகியுள்ளது.
பிரபல ஸ்மார்ட்போன் வல்லுநரான எவான் பிளாஸ் P20, P20 லைட் மற்றும் P20 ப்ரோ ஸ்மார்ட்போனின் தகவல்களை தனது ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். மூன்று ஸ்மார்ட்போன்களிலும் மெல்லிய பெசல்-லெஸ் ஸ்கிரீன் மற்றும் ஸ்கிரீனின் அடிபகுதி சற்றே தடிமனாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஹூவாய் P20 மற்றும் P20 ப்ரோ ஸ்மார்ட்போன்களில் கைரேகை சென்சார் திரையின் கீழ் வழங்கப்பட்டு இருக்கும் நிலையில், P20 லைட் ஸ்மார்ட்போனில் கைரேகை சென்சார் ஸ்மார்ட்போனின் பின்புறம் வழங்கப்பட்டு இருக்கிறது.
புகைப்படம்: நன்றி எவான் பிளாஸ்
இத்துடன் P20 மற்றும் P20 லைட் ஸ்மார்ட்போன்களில் டூயல் கேமரா செட்டப், P20 ப்ரோ ஸ்மார்ட்போனில் மூன்று கேமரா செட்டப் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் ஹூவாய் P20 ஸ்மார்ட்போன் மார்ச் 27-ம் தேதி நடைபெற இருக்கும் விழாவில் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் இந்த விழா பாரிஸ் நகரில் நடைபெறலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
விலையை பொருத்த வரை ஹூவாய் P20 ஸ்மார்ட்போன் 679 யூரோ (இந்திய மதிப்பில் ரூ.54,000), P20 லைட் 369 யூரோ (இந்திய விலை ரூ.30,000) மற்றும் P20 ப்ரோ விலை 899 யூரோ (இந்திய மதிப்பில் ரூ.73,500) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.