தொழில்நுட்பம்

ரூ.699 விலையில் 4ஜி வோல்ட்இ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

Published On 2018-02-18 06:13 GMT   |   Update On 2018-02-18 06:13 GMT
ஜிவி மொபைல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ இணைந்து எனர்ஜி இ3 எனும் ஸ்மார்ட்போனினை ரூ.699 விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளன.
புதுடெல்லி:

ஜிவி மொபைல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ இணைந்து எனர்ஜி இ3 எனும் ஸ்மார்ட்போனினை இந்தியாவில் ரூ.699 விலையில் வெளியிட்டுள்ளன. இதன் உண்மை விலை ரூ.3,899 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில், ரிலையன்ஸ் ஜியோ ஃபுட்பால் ஆஃபரில் ரூ.2200 கேஷ்பேக் சலுகையுடன் ரூ.699க்கு விற்பனை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் ஃபுட்பால் கேஷ்பேக் ஆஃபரில் ரூ.50 மதிப்புடைய 44 கேஷ்பேக் வவுச்சர்கள் வழங்கப்படும். இந்த சலுகையை பெற மார்ச் 31, 2018-க்குள் ரூ.198 அல்லது ரூ.299க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும். ஜியோ வழங்கும் கேஷ்பேக் தொகையை ரீசார்ஜ் செய்ய பயன்படுத்தி கொள்ள முடியும்.  



ஜிவி எனர்ஜி இ3 சிறப்பம்சங்கள்:

- 4.0 இன்ச் WVGA டிஸ்ப்ளே
- 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
- 512 எம்பி ரேம்
- 4 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- 5 எம்பி பிரைமரி கேமரா, ஃபிளாஷ்
- 2 எம்பி செல்ஃபி கேமரா
- டூயல் சிம் ஸ்லாட்
- ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ
- 4ஜி வோல்ட்இ
- 1800 எம்.ஏ.ஹெச். பேட்டரி
 
ஜிவி எனர்ஜி இ3 மட்டுமின்றி பல்வேறு இதர ஸ்மார்ட்போன்களும் ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் கேஷ்பேக் சலுகையில் கிடைக்கின்றன. ஜிவி எனர்ஜி இ12, ரெவல்யூஷன் பி30, பிரைம் பி300 மற்றும் பிரைம்444 உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களுக்கும் கேஷ்பேக் சலுகை வழங்கப்படுகின்றது.

ஜிவி மொபைல் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களை வாங்கும் ஜியோ வாடிக்கையாளர்கள் ஃபுட்பால் சலுகையை பெற முதற்கட்டமாக ரூ.199 அல்லது ரூ.299க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும். இவற்றில் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 56 ஜிபி 4ஜி டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்படுகின்றது. இதில் தினமும் 2 ஜிபி அதிவேக 4ஜி டேட்டா வழங்கப்படுகின்றது.
Tags:    

Similar News