புதிய கேஜெட்டுகள்
null

இன்ஸ்டாகிராமில் புதிய "Quiet Mode" அம்சம் அறிமுகம்

Published On 2023-01-21 06:22 GMT   |   Update On 2023-01-21 06:26 GMT
  • இன்ஸ்டாகிராம் தளத்தில் வழங்கப்படும் புது அம்சம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்கிறது.
  • இந்த அம்சம் முதற்கட்டமாக அமெரிக்கா, பிரிட்டன், ஐயர்லாந்து, கனடா என தேர்வு செய்யப்பட்ட சில நாடுகளில் மட்டுமே கிடைக்கிறது.

மெட்டா நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் செயலியில் "Quiet Mode" பெயரில் புது அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த அம்சம் பயனர்கள் தளத்தில் அதிக நேரம் செலவிடுவதை தவிர்க்க உதவுகிறது. செயல்படுத்தும் பட்சத்தில், Quiet Mode அம்சம் நோட்டிஃபிகேஷன்களை மியூட் செய்து, டைரக்ட் மெசேஜ்களுக்கு தானாக பதில் அளிக்கிறது.

புதிய இன்ஸ்டாகிராம் அம்சம் தற்போது அமெரிக்கா, பிரிட்டன், ஐயர்லாந்து, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து என உலகின் சில நாடுகளில் மட்டும் முதற்கட்டமாக வழங்கப்படுகிறது. இந்தியா உள்பட மற்ற நாடுகளில் விரைவில் வழங்கப்பட இருக்கிறது. இந்த அம்சம் இளைஞர்கள் கோரிக்கையை அடுத்து வழங்கப்பட்டுள்ளது.

இந்த Quiet Mode மோட் பயனர்கள் கஸ்டமைஸ் செய்ய முடியும். ஷெட்யுல் செய்ததும், இந்த அம்சம் நோட்டிஃபிகேஷன்களை விரைவாக காண்பிக்கிறது. அனைவரும் Quiet Mode அம்சத்தை பயன்படுத்தலாம், எனினும், இளைஞர்கள் இதனை பயன்படுத்த பரிந்துரை வழங்குவோம் என இன்ஸ்டாகிராம் தெரிவித்து இருக்கிறது.

இதுதவிர இன்ஸ்டாகிராம் செயலியில் பேரண்டல் சூப்பர்விஷன் டூல்கள் அப்டேட் செய்யப்பட்டுள்ளன. இவை பயனர்கள் தளத்தில் பார்க்கும் தரவுகளை அதிகளவில் கண்ட்ரோல் செய்ய உதவும். பரிந்துரைகளில் துவங்கி, பயனர்கள் இனி தங்களுக்கு விருப்பமில்லாத தரவுகளை மறைத்து வைக்க செய்யலாம். இந்த வசதி explore feed மட்டுமின்றி ரீல்ஸ், சர்ச் உள்ளிட்டவைகளிலும் இயங்குகிறது.

பரிந்துரைக்கப்படும் பதிவுகளின் கமெண்ட்ஸ் மற்றும் டைரக்ட் மெசேஜ்களில் குறிப்பிட்ட வார்த்தைகளை மறைக்கும் வசதியும் வழங்கப்பட்டு இருக்கிறது. இதற்கான வசதியை பிரைவசி செட்டிங்ஸ்-இல் உள்ள Hidden Words பகுதியில் இயக்க முடியும்.

Tags:    

Similar News