புதிய கேஜெட்டுகள்

இணையத்தில் லீக் ஆன விவோ போல்டபில் போன் விவரங்கள்

Published On 2022-09-18 07:03 GMT   |   Update On 2022-09-18 07:03 GMT
  • விவோ நிறுவனம் தனது இரண்டாவது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
  • விவோ மட்டுமின்றி ஐகூ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் விவரங்களும் இணையத்தில் வெளியாக துவங்கி உள்ளன.

விவோ நிறுவனத்தின் இரண்டாவது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடலாக விவோ X போல்டு பிளஸ் அறிமுகமாகும் என தெரிகிறது. இந்த போல்டபில் ஸ்மார்ட்போன் இம்மாத இறுதியில் அறிமுகம் செய்யப்படலாம். விவோ மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மட்டுமின்றி ஐகூ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் விவரங்களும் இணையத்தில் வெளியாகி உள்ளன. எனினும், இரு மாடல்கள் பற்றி இதுவரை எந்த விதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

எனினும், இரு ஸ்மார்ட்போன் விவரங்களை டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் டிப்ஸ்டர் மூலம் வெளியாகி இருக்கிறது. அதன்படி விவோ X போல்டு பிளஸ் முந்தைய X போல்டு போன்ற மெமரி ஆப்ஷன் மற்றும் நிற ஆப்ஷன்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. எனினும், மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மட்டும் கூடுதலாக ரெட் நிறத்தில் கிடைக்கும் என தெரிகிறது. விவோ நிறுவனத்தின் முந்தைய X போல்டு ஸ்மார்ட்போன் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது.


ஐகூவை பொருத்தவரை நியோ 7 ஸ்மார்ட்போன் 6.78 இன்ச் AMOLED E5 டிஸ்ப்ளே, FHD+ 120Hz ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் டிமென்சிட்டி 9000 பிளஸ் பிராசஸர், 4700 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 120 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது.

விவோ X போல்டு பிளஸ் மாடலில் 6.53 இன்ச் பிரைமரி FHD+ AMOLED டிஸ்ப்ளே, 8.03 இன்ச் இண்டீரியர் ஸ்கிரீன், 2K ரெசல்யூஷன் வழங்கப்படும் என தெரிகிறது. இரு டிஸ்ப்ளேக்களிலும் 120Hz ரிப்ரெஷ் ரேட் வழங்கப்படும் என தெரிகிறது. இத்துடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர், 4700 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 80 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.

புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 48MP அல்ட்ரா வைடு கேமரா, 12MP போர்டிரெயிட் கேமரா, 8MP பெரிஸ்கோப் கேமரா மற்றும் 5X ஆப்டிக்கல் ஜூம், 16MP செல்பி கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது.

Tags:    

Similar News