புதிய கேஜெட்டுகள்

200MP கேமராவுடன் அறிமுகமான கேலக்ஸி S23 அல்ட்ரா

Published On 2023-02-02 03:23 GMT   |   Update On 2023-02-02 03:23 GMT
  • சாம்சங் நிறுவனம் கேலக்ஸி S23, S23 பிளஸ் மாடல்களுடன் டாப் எண்ட் ஃபிளாக்‌ஷிப் மாடலான கேலக்ஸி S23 அல்ட்ராவையும் அறிமுகம் செய்தது.
  • புதிய கேலக்ஸி S23 அல்ட்ரா மாடலில் ஆர்மர் அலுமினியம் ஃபிரேம், கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 பாதுகாப்பு உள்ளது.

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி S23 மற்றும் கேலக்ஸி S23 பிளஸ் ஸ்மார்ட்போன்களுடன் கேலக்ஸி S23 அல்ட்ரா மாடலையும் கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில் அறிமுகம் செய்தது. புதிய கேலக்ஸி S23 அல்ட்ரா மாடலில் 6.8 இன்ச் குவாட் HD+ டைனமிக் AMOLED 2X இன்ஃபினிட்டி ஒ டிஸ்ப்ளே, 1 முதல் 120 ஹெர்ட்ஸ் வரையிலான வேரியபில் ரிப்ரெஷ் ரேட், அதிகபட்சம் 1750 நிட்ஸ் பிரைட்னஸ் உள்ளது.

இத்துடன் முற்றிலும் புதிய ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 ஃபார் கேலக்ஸி பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த மாடலில் அளவில் பெரிய வேப்பர் சேம்பர் கூலிங், ஆர்மர் அலுமினியம் ஃபிரேம் உள்ளது. கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 பாதுகாப்பை ஸ்மார்ட்போனின் இருபுறமும் கொண்ட முதன்மை மாடலாக கேலக்ஸி S23 அல்ட்ரா இருக்கிறது. இவைதவிர இன்-டிஸ்ப்ளே அல்ட்ராசோனிக் கைரேகை சென்சார், ஆண்ட்ராய்டு 13 மற்றும் ஒன்யுஐ 5.1 உள்ளது.

சாம்சங் கேலக்ஸி S23 அல்ட்ரா அம்சங்கள்:

6.8 இன்ச் 3088x1440 பிக்சல் குவாட் HD+ இன்ஃபினிட்டி-0ஒ- எட்ஜ் டைனமிக் AMOLED டிஸ்ப்ளே

1 முதல் 120Hz அடாப்டிவ் ரிப்ரெஷ் ரேட், அதிகபட்சம் 1750 நிட்ஸ் பிரைட்னஸ்

கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 பாதுகாப்பு

ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 ஃபார் கேலக்ஸி பிராசஸர்

அட்ரினோ 740 GPU

8 ஜிபி LPDDR5X ரேம், 256 ஜிபி (UFS 4.0) மெமரி

12 ஜிபி LPDDR5X ரேம், 512 ஜிபி / 1 டிபி (UFS 4.0) மெமரி

ஆண்ட்ராய்டு 13 மற்றும் ஒன்யுஐ 5.1

200MP பிரைமரி கேமரா, f/1.7, OIS

12MP 120 டிகிரி அல்ட்ரா வைடு கேமரா, f/2.2

10MP பெரிஸ்கோப் லென்ஸ், f/4.9, எல்இடி ஃபிளாஷ்

12MP செல்ஃபி கேமரா, f/2.2

டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் (IP68)

5ஜி, 4ஜி வோல்ட்இ, வைபை 6E, ப்ளூடூத் 5.3

5000 எம்ஏஹெச் பேட்டரி, 45 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

Qi வயர்லெஸ் சார்ஜிங்

விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

சாம்சங் கேலக்ஸி S23 அல்ட்ரா 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை 1,199 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 98 ஆயிரத்து 350 என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் 12 ஜிபி ரேம், 1 டிபி மெமரி மாடல் விலை 1619.99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 1 லட்சத்து 32 ஆயிரத்து 770 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வரும் நிலையில், விற்பனை பிப்ரவரி 17 ஆம் தேதி துவங்க இருக்கிறது. 

புதிய சாம்சங் கேலக்ஸி S23 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஃபேண்டம் பிளாக், கிரீன், கிரீம் மற்றும் லாவண்டர் நிறங்களில் கிடைக்கிறது. கேலக்ஸி S23 மற்றும் கேலக்ஸி S23 பிளஸ் போன்றே அல்ட்ரா மாடலும் கிராஃபைட், ஸ்கை புளூ, லைம் மற்றும் ரெட் போன்ற நிறங்களில் சில நாடுகளில் மட்டும் கிடைக்கும்.

Tags:    

Similar News