புதிய கேஜெட்டுகள்

இந்தியாவில் கேலக்ஸி S23 சீரிஸ் முன்பதிவு துவக்கம்

Published On 2023-01-12 10:58 IST   |   Update On 2023-01-12 10:58:00 IST
  • சாம்சங் நிறுவனம் தனது புதிய ஃபிளாக்‌ஷிப் சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
  • முன்னதாக கேலக்ஸி S23 சீரிஸ் அறிமுக தேதி மற்றும் நேரம் பற்றிய அறிவிப்பை சாம்சங் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.

சாம்சங் நிறுவனம் அடுத்த தலைமுறை கேலக்ஸி ஃபிளாக்ஷிப் மாடல்களின் அறிமுக நிகழ்வு பற்றிய அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது. அதன்படி இந்த ஆண்டிற்கான முதல் கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வு பிப்ரவரி 1 ஆம் தேதி சான் ஃபிரான்சிஸ்கோ நகரில் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், புது கேலக்ஸி S23 சீரிஸ் மாடல்களுக்கான முன்பதிவு இந்தியாவில் துவங்கி இருக்கிறது.

புது ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 1999 ஆகும். எனினும், புது ஸ்மார்ட்போன்களை முன்பதிவு செய்வோருக்கு ரூ. 5 ஆயிரம் மதிப்பிலான பலன்கள் வழங்கப்படும் என சாம்சங் அறிவித்து இருக்கிறது. இந்திய வெளியீட்டு தேதி மற்றும் விலை பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. விற்பனை தேதி வரை முன்பதிவுகள் தொடர்ந்து நடைபெறும் என எதிர்பார்க்கலாம்.

புதிய கேலக்ஸி ஃபிளாக்ஷிப் போனை முன்பதிவு செய்வது எப்படி?

- சாம்சங் இந்தியா வலைதளத்தில் Pre Reserve பட்டனை க்ளிக் செய்ய கேலக்ஸி Pre Reserve VIP பாஸ் பெறவும்.

- ரூ. 1999 கட்டணத்தை ஏதேனும் பிரீபெயிட் பேமண்ட் முறையில் செலுத்தவும்.

- மின்னஞ்சல் அல்லது பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு கேலக்ஸி Pre Reserve VIP பாஸ் அனுப்பப்படும்.

- வெற்றிகரமாக முன்பதிவு செய்தவுடன், வரவேற்பு மின்னஞ்சல் கிடைக்கும். அதில் முன்பதிவு செய்ததற்கான பலன்கள் விரிவாக குறிப்பிடப்பட்டு இருக்கும்.

- சாம்சங் வலைதளம் சென்று அடுத்த கேலக்ஸி சாதனங்களை தற்போதைய பலன்களை கொண்டு வாங்கிக் கொள்ளலாம்.

- அடுத்த கேலக்ஸி சாதனத்திற்கு பணம் செலுத்தும் போது முன்பதிவுக்காக செலுத்திய ரூ. 1999 தொகை கழிக்கப்பட்டு விடும்.

- முன்பதிவு காலக்கட்டம் நிறைவுபெறும் வரை கூப்பனை பயன்படுத்தவில்லை எனில், அது தானாக ரத்து செய்யப்படும். முன்பதிவு கட்டணம் செலுத்திய கணக்கிற்கே தொகை திருப்பி அனுப்பப்படும்.

தற்போது அறிவிக்கப்பட்டு இருப்பது வெறும் முன்பதிவு சலுகைகள் தான். விற்பனைக்கான சலுகைகள் அடுத்த மாதம் விற்பனை துவங்கும் போது அறிவிக்கப்படும். வழக்கத்தை போன்றே இந்த முறையும் சாம்சங் லைவ் நடத்த அந்நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. இதில் பயனர்களுக்கு அதிக சலுகைகள், அதிவேக வினியோகம் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

Tags:    

Similar News