புதிய கேஜெட்டுகள்

விரைவில் இந்தியா வரும் கேலக்ஸி F சீரிஸ் ஸ்மார்ட்போன்

Published On 2023-03-17 06:38 GMT   |   Update On 2023-03-17 06:38 GMT
  • சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி F சீரிஸ் ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
  • புதிய கேலக்ஸி F14 5ஜி ஸ்மார்ட்போன் ரூ. 20 ஆயிரம் பட்ஜெட்டில் விற்பனைக்கு வரும் என தெரிகிறது.

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி F14 ஸ்மார்ட்போன் மார்ச் 24 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. சமீபத்தில் புதிய கேலக்ஸி A சீரிஸ் மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த நிலையில், தற்போது F சீரிஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. புதிய F சீரிஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ. 10 ஆயிரத்தில் இருந்து ரூ. 20 ஆயிரம் பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது.

புதிய ஸ்மார்ட்போனிற்காக பிரத்யேக வலைப்பக்கத்தை ப்ளிப்கார்ட் தளத்தில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. அதில் புதிய ஸ்மார்ட்போன் மார்ச் 24 ஆம் தேதி மதியம் 12 மணி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ப்ளிப்கார்ட் தளத்தில் புதிய ஸ்மார்ட்போனிற்கான டிசைன் மற்றும் அம்சங்கள் பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

 

டிசைனை பொருத்தவரை புதிய சாம்சங் கேலக்ஸி F14 மாடலில் ஃபிளாட் பேக், வளைந்த எட்ஜ்களை கொண்டிருக்கிறது. இதன் டூயல் கேமரா சென்சார்கள் செங்குத்தாக பொருத்தப்பட்டுள்ளன. பவர் மற்றும் வால்யும் ராக்கர் ஸ்மார்ட்போனின் வலதுபுறத்திலும், இடதுபுறத்தில் சிம் டிரே வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் 13 5ஜி பேண்ட்களை கொண்டிருக்கிறது.

ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஒன் யுஐ 5.0 ஒஎஸ் கொண்டிருக்கும் சாம்சங் கேலக்ஸி F14 5ஜி மாடலில் இரண்டு முக்கிய ஆண்ட்ராய்டு அப்டேட்களையும், நான்கு செக்யுரிட்டி அப்டேட்களை பெற இருக்கிறது. போஸ்டரில் இந்த ஸ்மார்ட்போன் எக்சைனோஸ் 1330 பிராசஸர் கொண்டிருக்கும் என்றும், இது 5 நானோமீட்டர் முறையில் உருவாக்கப்பட்டு இருக்கும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

புதிய சாம்சங் கேலக்ஸி F14 5ஜி மாடலில் 6.6 இன்ச் LCD ஸ்கிரீன், FHD+ 90Hz ரிப்ரெஷ் ரேட், 50MP பிரைமரி கேமரா, 13MP செல்ஃபி கேமரா, கைரேகை சென்சார், ஒன் யுஐ கோர் 5 ஒஎஸ், ஆண்ட்ராய்டு 13, 6000 எம்ஏஹெச் பேட்டரி, 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் என தெரிகிறது.

Tags:    

Similar News