புதிய கேஜெட்டுகள்
null

விரைவில் அறிமுகமாகும் சாம்சங் A சீரிஸ் ஸ்மார்ட்போன் - அசத்தல் டீசர் வெளியானது!

Update: 2023-03-10 06:22 GMT
  • சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி A54 5ஜி ஸ்மார்ட்போன் டீசர் வெளியாகி இருக்கிறது.
  • புதிய ஸ்மார்ட்போனின் அம்சங்கள் பற்றிய தகவல் டீசரில் இடம்பெற்று இருக்கிறது.

சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி A54 5ஜி ஸ்மார்ட்போனின் டீசரை வலைத்தளத்தில் வெளியிட்டு இருக்கிறது. ஸ்மார்ட்போன் வெளியீடு, அம்சங்கள் மற்றும் சலுகை பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள பயனர்கள் வலைத்தளத்திற்கு சைன்-அப் செய்ய சாம்சங் கோரிக்கை விடுக்கிறது. எனினும், இந்த வலைப்பக்கம் முழுமையாக செயல்பாட்டுக்கு வரவில்லை.

புதிய சாம்சங் ஸ்மார்ட்போனின் முழு அம்சங்களை அறிவிக்காமல், அதன் அம்சங்களை ஒவ்வொன்றையும் தகவல்களாக அந்நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது.

க்ரிஸ்ப் டீடெயில், க்ளியர் டிஸ்ப்ளே - சாம்சங் கேலக்ஸி A54 5ஜி மாடலில் ஃபுளூயிட் டிஸ்ப்ளே வழங்கப்பட இருக்கிறது.

 

இதில் வழங்கப்பட இருக்கும் கேமரா சென்சார்கள்- ஸ்னாப் க்ளியர், சிங்கில் டேக், OIS, லோ லைட் என பல்வேறு மோட்களில் சிறப்பான புகைப்படங்களை வழங்கும் திறன் கொண்டிருக்கும்.

சக்திவாய்ந்த கேமரா ஸ்மார்ட்போனை எப்போதும் தயார்நிலையில் வைத்திருக்கும்.

தலைசிறந்த 5ஜி கனெக்டிவிட்டி மூலம் கேம்கள், வீடியோக்களை எவ்வித இடையூறும் இன்றி சீராக அனுபவிக்க முடியும்.

இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி புதிய சாம்சங் A54 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் அதிகமாக நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இரு நாடுகளை போன்றே இந்தியாவிலும் இதன் விலை அதிகமாகவே இருக்கும் என தெரிகிறது.

புதிய கேலக்ஸி A54 5ஜி மாடலுடன் கேலக்ஸி A34 5ஜி ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. புதிய சாம்சங் கேலக்ஸி A சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் மார்ச் 15 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படலாம்.

Photo Courtesy: AH

Tags:    

Similar News