புதிய கேஜெட்டுகள்

விரைவில் அறிமுகமாகும் ஒன்பிளஸ் போல்டு - அசத்தல் டீசர் வெளியானது

Update: 2022-08-13 06:24 GMT
  • ஒன்பிளஸ் நிறுவனம் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் சந்தையில் களமிறங்குவதை கிட்டத்தட்ட உறுதிப்படுத்தி இருக்கிறது.
  • சமீபத்தில் தான் சாம்சங், சியோமி மற்றும் மோட்டோரோலா நிறுவனங்களின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகமானது.

சாம்சங், சியோமி மற்றும் மோட்டோரோலா போன்ற நிறுவனங்கள் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பிரிவில் அதிக கவனம் செலுத்த துவங்கி விட்டன. இந்த நிறுவனங்கள் சந்தையில் போட்டியை ஏற்படுத்தும் வகையில் தொடர்ச்சியாக போல்டபில் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வருகின்றன. இந்த நிறுவனங்கள் வரிசையில் கூகுள் நிறுவனமும் தனது பிக்சல் போல்டு மாடலை அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

இதுதவிர ஒப்போ நிறுவனம் இரண்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. தற்போது ஒன்பிளஸ் நிறுவனமும் போல்டபில் ஸ்மார்ட்போன்கள் சந்தையில் களமிறங்க முடிவு செய்து இருப்பதாக தெரிகிறது. ஒன்பிளஸ்-இன் புது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் டீசர்கள் வெளியாக துவங்கி உள்ளன.


2019 ஆண்டிலேயே மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து சந்தையில் புது துவக்கத்திற்கு அடித்தளம் போட்ட நிறுவனங்களாக ஹூவாய், சாம்சங் மற்றும் மோட்டோரோலா விளங்குகின்றன. அப்போதில் இருந்தே இந்த நிறுவனங்களின் போல்டபில் ஸ்மார்ட்போன் மாடல்கள் சந்தையில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன.

2020 வாக்கில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் அதிக வரவேற்பை பெறவில்லை, இதனால் இது போன்ற மாடலை அறிமுகம் செய்யும் திட்டம் இல்லை என ஒன்பிளஸ் தலைமை செயல் அதிகாரி பீட் லௌ தெரிவித்து இருந்தார். ஒன்பிளஸ் நிறுவனம் இது பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டு, சிறப்பான டிஸ்ப்ளே தொழில்நுட்பம் கிடைக்க காத்துக் கொண்டு இருந்தது.

இந்த வரிசையில் தான் ஒன்பிளஸ் சிஇஒ பீட் லௌ தனது ட்விட்டரில் "இது என்னவாக இருக்கும் என நினைக்கின்றீர்கள்" எனும் கேள்வியுடன் போல்டபில் ஸ்மார்ட்போன் ஹின்ஜ் புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார். இது தோற்றத்தில் ஒப்போ பைண்ட் N மாடலின் ஹின்ஜ் போன்றே காட்சியளிக்கிறது. 

Tags:    

Similar News