புதிய கேஜெட்டுகள்

ஜூலையில் நார்டு 3 அறிமுகம் செய்யும் ஒன்பிளஸ் - அசத்தல் டீசர் வெளியீடு!

Published On 2023-06-19 13:59 IST   |   Update On 2023-06-19 13:59:00 IST
  • ஒன்பிளஸ் நார்டு 3 மாடலுக்கான டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது.
  • ஒன்பிளஸ் நார்டு 3 ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டிமென்சிட்டி 9000 சிப்செட் வழங்கப்படுகிறது.

ஒன்பிளஸ் நிறுவனம் தனது புதிய ஒன்பிளஸ் நார்டு 3 ஸ்மார்ட்போனினை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய ஒன்பிளஸ் நார்டு 3 ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

நார்டு 3 மாடல் அதிகாரப்பூர்வ படங்கள், விலை, 80 வாட் சார்ஜிங் என பல்வேறு அம்சங்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த நிலையில், ஒன்பிளஸ் நார்டு 3 மாடலுக்கான டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது. அதன்படி புதிய ஒன்பிளஸ் நார்டு 3 ஸ்மார்ட்போன் ஜூலை மாதம் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

 

டீசரில், புதிய ஸ்மார்ட்போன் பெயர் குறிப்பிடப்படவில்லை. எனினும், போஸ்டரில், தி லேப் (The Lab) வாசகம் இடம்பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து ஒன்பிளஸ் கம்யுனிட்டி ஃபோரமில் வெளியான தகவல்களின் படி நார்டு 3 மாடல் இந்தியா, ஐரோப்பா மற்றும் APAC பகுதிகளில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.

முன்னதாக தி லேப் வாசகம், ஒன்பிளஸ் 3 மற்றும் ஒன்பிளஸ் 3T சாதனங்களின் வெளியீட்டுகளுக்கு பயன்படுத்தியது. ஒன்பிளஸ் கம்யுனிட்டிக்குள் தி லேப் வாசகம் வெற்றிகரமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

ஒன்பிளஸ் நார்டு 3 எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

ஒன்பிளஸ் நார்டு 3 ஸ்மார்ட்போனில் 6.74 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, 2770x1240 பிக்சல், 120Hz ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் டிமென்சிட்டி 9000 சிப்செட், அதிகபட்சம் 16 ஜிபி ரேம், 128 ஜிபி அல்லது 256 ஜிபி மெமரி, 5000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படுகிறது.

Tags:    

Similar News