புதிய கேஜெட்டுகள்
null

பிஐஎஸ் சான்று பெற்ற ஒன்பிளஸ் நார்ட் 3 5ஜி - விரைவில் வெளியீடு?

Update: 2023-03-30 08:38 GMT
  • ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய நார்ட் சீரிஸ் ஸ்மார்ட்போன் பிஐஎஸ் சான்று பெற்று இருக்கிறது.
  • புதிய ஒன்பிளஸ் நார்ட் 3 மாடல் ஒன்பிளஸ் ஏஸ் 2V மாடலின் ரிபிராண்ட் செய்யப்பட்ட வெர்ஷன் என தெரிகிறது.

ஒன்பிளஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய நார்ட் 3 5ஜி ஸ்மார்ட்போனினை ஜூன் முதல் ஜூலை மாதத்திற்குள் அறிமுகம் செய்யும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் டியுவி ரெயின்லாந்து, சீனா தர சான்று மையம் (சிகியூசி), ஐஎம்டிஏ சிங்கப்பூர், இந்திய பிஐஎஸ் போன்ற சான்றுகளை பெற்று இருக்கிறது. இதில் கடைசி சான்று இந்த ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டை உணர்த்தும் வகையில் உள்ளது.

சமீபத்தில் ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஒன்பிளஸ் ஏஸ் 2V மாடலை சீன சந்தையில் அறிமுகம் செய்து இருந்தது. அந்த வகையில், புதிய ஒன்பிளஸ் ஏஸ் 2V மாடல் ஒன்பிளஸ் நார்ட் 3 பெயரில் ரிபிராண்டு செய்யப்படலாம் என கூறப்படுகிறது. புதிய ஒன்பிளஸ் நார்ட் 3 மாடலில் நார்ட் 2 ஸ்மார்ட்போனில் இருந்ததை விட மேம்பட்ட டிஸ்ப்ளே, சக்திவாய்ந்த சிப்செட் வழங்கப்படுகிறது.

 

டியுவி ரெயின்லாந்து சான்றின் படி ஒன்பிளஸ் நார்ட் 3 ஸ்மார்ட்போன் CPH2491 எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. பிஐஎஸ் சான்றிலும் புதிய நார்ட் 3 ஸ்மார்ட்போன் CPH எனும் மாடல் நம்பரையே கொண்டிருக்கிறது. ஐஎம்டிஏ சிங்கப்பூரில் உள்ள ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் CPH2493 எனும் மாடல் நம்பர் கொண்டிருப்பதோடு ஒன்பிளஸ் நார்ட் 3 5ஜி எனும் பெயரை கொண்டிருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போன் 5ஜி, ப்ளூடூத், வைபை மற்றும் என்எப்சி போன்ற வசதிகளை கொண்டிருக்கும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதே மாடல் சிகியூசி சான்றளிக்கும் தளத்தில் 80 வாட் சார்ஜர் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது.

இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஒன்பிஸ் நார்ட் 3 5ஜி மாடலில் 6.72 இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மேக்ரோ லென்ஸ், 16MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. இத்துடன் மீடியாடெக் டிமென்சிட்டி 9000 பிராசஸர், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 80 வாட் சூப்பர்வூக் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.

Tags:    

Similar News