புதிய கேஜெட்டுகள்

ஒரே நாளில் இத்தனையா? பிப்ரவரி 7-இல் மற்றொரு ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யும் ஒன்பிளஸ்

Published On 2023-01-25 13:05 GMT   |   Update On 2023-01-25 13:05 GMT
  • ஒன்பிளஸ் நிறுவனத்தின் புது சாதனங்கள் அடுத்த மாத துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
  • ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் டிவி, இயர்பட்ஸ் என ஏராளமன சாதனங்களை ஒன்பிளஸ் அறிமுகம் செய்ய இருக்கிறது.

ஒன்பிளஸ் நிறுவனம் தனது புதிய ஃபிளாக்ஷிப் சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அடுத்த மாதம் அறிமுகம் செய்ய இருக்கிறது. ஒன்பிளஸ் 11, ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2, ஒன்பிளஸ் டிவி 65Q2 ப்ரோ, ஒன்பிளஸ் கீபோர்டு வரிசையில், ஒன்பிளஸ் 11R ஸ்மார்ட்போனும் இந்திய சந்தையில் பிப்ரவரி 7 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

இதனை உறுதிப்படுத்தும் டீசர் படத்தை ஒனபிளஸ் நிறுவனம் வெளியிட்டு உள்ளது. அதன்படி புது ஸ்மார்ட்போனின் பின்புறம் வளைந்திருப்பதும், கிளாஸி ஃபிரேம் கொண்டிருப்பதும் அம்பலமாகி இருக்கிறது. இவைதவிர புது ஸ்மார்ட்போன் பற்றி வேறு எந்த தகவலும் வெளியாகவில்லை.

ஏற்கனவே இணையத்தில் வெளியான தகவல்களின் படி ஒன்பிளஸ் 11R மாடலில் 6.7 இன்ச் FHD+ 1080x2412 பிக்சல் AMOLED டிஸ்ப்ளே, 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு, 2MP மேக்ரோ லென்ஸ் என மூன்று பிரைமரி சென்சார்கள் வழங்கப்படும் என தெரிகிறது.

இத்துடன் டிமென்சிட்டி 8100-மேக்ஸ் பிராசஸருக்கு மாற்றாக ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர், அதிகபட்சம் 16 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, 5000 எம்ஏஹெச் பேட்டரி, 100 வாட் சூப்பர்வூக் சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்படலாம். புது ஸ்மார்ட்போனின் இதர விவரங்கள் வரும் நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Tags:    

Similar News