புதிய கேஜெட்டுகள்

இவ்வளவு தானா? அமேசானில் லீக் ஆன மோட்டோ ரேசர் 40 விலை விவரங்கள்!

Published On 2023-06-29 08:29 IST   |   Update On 2023-06-29 08:29:00 IST
  • ஏற்கனவே மோட்டோரோலா ரேசர் 40 சீரிஸ் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு விட்டது.
  • அமேசான் தளத்தில் மோட்டோரோலா ரேசர் 40 ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள் லீக் ஆனது.

மோட்டோரோலா ரேசர் 40 ஸ்மார்ட்போன் ஜூலை 4-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இத்துடன் மோட்டோரோலா ரேசர் 40 அல்ட்ரா மாடலும் அறிமுகமாகிறது. இந்த நிலையில், வெளியீட்டுக்கு ஒருவாரம் காலம் இருக்கும் நிலையில், மோட்டோரோலா ரேசர் 40 விலை விவரங்கள் அமேசான் தளத்தில் தவறுதலாக இடம்பெற்று விட்டது.

புதிய மோட்டோ மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனில் 6.9 இன்ச் pOLED டிஸ்ப்ளே, 144Hz ரிப்ரெஷ் ரேட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 பிராசஸர் வழங்கப்படும் என்று டீசர்களில் தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே மோட்டோரோலா ரேசர் 40 சீரிஸ் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு விட்டது. அந்த வகையில், இந்த மாடலின் இதர அம்சங்களும் ஏற்கனவே அறிந்த ஒன்றுதான்.

 

தற்போது அமேசான் தளத்தில் மோட்டோரோலா ரேசர் 40 ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள் இடம்பெற்றது. அதன்படி இதன் விலை ரூ. 59 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்படும் என அமேசான் வலைதளத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது. தவறுதலாக இடம்பெற்ற நிலையில், மோட்டோரோலா ரேசர் 40 விலை விவரங்கள் உடனடியாக நீக்கப்பட்டு விட்டது.

சீன சந்தையில் மோட்டோரோலா ரேசர் 40 மாடலின் விலை இந்திய மதிப்பில் ரூ. 46 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இதன் டாப் எண்ட் மாடல் விலை இந்திய மதிப்பில் ரூ. 54 ஆயிரத்து 500 என்று நிர்ணயம் செய்யப்பட்டது.

 

மோட்டோரோலா ரேசர் 40 அம்சங்கள்:

6.9 இன்ச் FHD+ 1080x2640 பிக்சல் மடிக்கக்கூடிய pOLED டிஸ்ப்ளே, 144Hz ரிப்ரெஷ் ரேட்

குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 பிராசஸர்

12 ஜிபி ரேம்

64MP பிரைமரி கேமரா

12MP அல்ட்ரா வைடு கேமரா

32MP செல்ஃபி கேமரா

ஆண்ட்ராய்டு 13 ஒஎஸ்

டூயல் சிம் ஸ்லாட்

வைபை, ப்ளூடூத்

4200 எம்ஏஹெச் பேட்டரி

33 வாட் டர்போசார்ஜிங்

Tags:    

Similar News