புதிய கேஜெட்டுகள்

இந்த அம்சம் கொண்ட முதல் கிளாம்ஷெல் போன் - மோட்டோ அதிரடி!

Published On 2022-08-09 05:56 GMT   |   Update On 2022-08-09 05:56 GMT
  • மோட்டோரோலா நிறுவனம் 2022 மோட்டோ ரேசர் ஸ்மார்ட்போனினை வெளியிடும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
  • விரைவில் இந்த ஸ்மார்ட்போன் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

மோட்டோரோலா ரேசர் 2022 ஸ்மார்ட்போன் இதுவரை வெளியான கிளாம்ஷெல் போல்டபில் ஸ்மார்ட்போன்களை விட மேம்பட்ட அம்சங்களை கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. 144Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட முதல் கிளாம்ஷெல் போல்டபில் போன் என்ற பெருமையை மோட்டோரோலா ரேசர் 2022 மாடல் பெற இருக்கிறது.

சீன சந்தையில் மோட்டோரோலா ரேசர் 2022 மாடல் ஆகஸ்ட் 14 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த நிலையில், புது ஸ்மார்ட்போன் வெளியீட்டுக்காக சீன தளத்தில் பிரத்யேக வலைப்பக்கத்தை மோட்டோரோலா திறந்துள்ளது. அதில் புது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் இடம்பெற்று இருக்கிறது. அதன்படி இந்த ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் OLED டிஸ்ப்ளே, 144Hz ரிப்ரெஷ் ரேட் வழங்கப்படுகிறது.


இத்துடன் குவால்காம் நிறுவனத்தின் பிளாக்‌ஷிப் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் வழங்கப்பட இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 10 பிட் கலர் டிஸ்ப்ளே, HDR 20+, டிசி டிம்மிங் போன்ற வசதிகளை கொண்டுள்ளது. இதன் டிஸ்ப்ளே அம்சங்கள் மோட்டோரோலா எட்ஜ் 30 மாடலுக்கு நிகராக வழங்கப்பட்டு இருக்கிறது.

மற்ற அம்சங்கள் அனைத்தும் தற்சமயம் விற்பனை செய்யப்படும், விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு சவால் விடும் வகையில் வழங்கப்பட இருக்கிறது. மோட்டோ X30 ப்ரோ மாடலில் வழங்கப்பட்டு இருக்கும் தலைசிறந்த கேமரா சிஸ்டம் இந்த மாடலிலும் எதிர்பார்க்கலாம். மோட்டோரோலா ரேசர் 2022 பற்றிய கூடுதல் விவரங்கள் வரும் நாட்களில் வெளியாகலாம்.

Tags:    

Similar News