புதிய கேஜெட்டுகள்

கோப்புப்படம்

பிக்சல் 8 ப்ரோ மாடலில் வேற லெவல் சென்சார்- இணையத்தில் லீக் ஆன வீடியோ!

Update: 2023-05-20 12:12 GMT
  • பிக்சல் 8 ப்ரோ மாடலின் கேமரா பாரில் அனைத்து கேமரா லென்ஸ் மற்றும் தெர்மோமீட்டர் சென்சார் வழங்கப்படுகிறது.
  • சமீபத்தில் ஏஐ தொழில்நுட்பம் சார்ந்த பல்வேறு புதிய அம்சங்களை கூகுள் நிறுவனம் அறிவித்தது.

கூகுள் நிறுவனத்தின் முற்றிலும் புதிய பிக்சல் 8 ப்ரோ ஸ்மார்ட்போனில் பில்ட்-இன் தெர்மோமீட்டர் சென்சார் வழங்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. பிக்சல் 8 ப்ரோ மாடலின் ஒட்டுமொத்த டிசைன் அதன் முந்தைய வெர்ஷனான பிக்சல் 7 ப்ரோ போன்றே காட்சியளிக்கும். எனினும், பிக்சல் 8 ப்ரோ மாடலின் கேமரா பாரில் அனைத்து கேமரா லென்ஸ் மற்றும் தெர்மோமீட்டர் சென்சார் வழங்கப்படுகிறது.

இதில் உள்ள தெர்மோமீட்டர் சென்சார் மனிதர்கள் மட்டுமின்றி பொருட்களில் உள்ள வெப்பநிலையையும் துல்லியமாக கண்டறியும். இது பிக்சல் 8 ப்ரோ ஸ்மார்ட்போனில் மட்டும் பிரத்யேகமாக வழங்கப்படும். அந்த வகையில், பிக்சல் 8 மாடலில் தெர்மோமீட்டர் சென்சார் வழங்கப்படும் வாய்ப்புகள் மிகவும் குறைவு. இந்த அம்சம் எப்படி இயங்கும் என்பதை விளக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.

Photo Courtesy: 91Mobiles

91மொபைல்ஸ் வெளியிட்டு இருக்கும் வீடியோவில் பிக்சல் 8 ப்ரோ மாடலின் தெர்மோமீட்டர் சென்சாரை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அதன்படி பயனர்கள் தங்களது உடலின் வெப்பநிலையை அறிந்து கொள்ள பிக்சல் 8 ப்ரோ மாடலினை நெற்றியின் அருகில் வைக்க வேண்டும். ஆனால், மொபைலினை நெற்றியில் வைக்கக் கூடாது.

நெற்றியின் நடுவில் இருந்து, இடதுபுறமாக மொபைலை மெல்ல நகர்த்த வேண்டும். சுமார் ஐந்து நொடிகள் மொபைலை நெற்றியின் அருகில் வைத்தால், உடலின் வெப்பநிலை மொபைல் போன் திரையில் தெரியும்.

கூகுள் I/O 2023 நிகழ்வில் அந்நிறுவனம் பிக்சல் 8 சீரிஸ் விவரங்கள் எதுவும் வழங்கப்படவில்லை. மாறாக பிக்சல் 7a, பிக்சல் ஃபோல்டு மற்றும் பிக்சல் டேப்லட் போன்ற சாதனங்களை அறிமுகம் செய்தது. இதுதவிர ஏஐ தொழில்நுட்பம் சார்ந்த பல்வேறு புதிய அம்சங்களை கூகுள் நிறுவனம் அறிவித்தது.

Tags:    

Similar News