புதிய கேஜெட்டுகள்

சாம்சங் டிஸ்ப்ளேவுடன் வேற லெவலில் அப்டேட் ஆகும் ஆப்பிள் விஷன் ப்ரோ 2

Published On 2023-12-30 11:11 GMT   |   Update On 2023-12-30 11:11 GMT
  • விஷன் ப்ரோ 2 மாடல் பற்றிய விவரங்கள் வெளியாகியுள்ளது.
  • டிவி மாடல்களில் இருப்பதை விட அதிக பிக்சல்களை கொண்டிருக்கும்.

ஆப்பிள் நிறுவனம் தனது விஷன் ப்ரோ மாடலை அடுத்த ஆண்டு துவக்கத்தில் விற்பனைக்கு கொண்டு வருகிறது. விற்பனை விரைவில் துவங்க இருப்பதை ஒட்டி, ஆப்பிள் விஷன் ப்ரோ மாடலின் உற்பத்தி பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், விஷன் ப்ரோ 2 மாடல் பற்றிய விவரங்கள் வெளியாக துவங்கியுள்ளன.

அதன்படி இரண்டாம் தலைமுறை விஷன் ப்ரோ மாடலில் சற்றே அதிநவீன மற்றும் பிரகாசமான டிஸ்ப்ளே வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதில் அதிக பிரகாசமான மற்றும் அதிக திறன் கொண்ட மைக்ரோ OLED டிஸ்ப்ளே வழங்கப்பட இருக்கிறது. இது ஒவ்வொரு கண்களிலும் வழக்கமான 4K டிவி மாடல்களில் இருப்பதை விட அதிக பிக்சல்களை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

 


இது குறித்து தென் கொரிய செய்திகளில் வெளியாகி இருக்கும் தகவல்களில், ஆப்பிள் விஷன் ப்ரோ 2 மாடலில் RGB OLEDoS டிஸ்ப்ளே வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த மாடல் 2027 வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. புதிய டிஸ்ப்ளேக்கள் தற்போதைய WOLED டிஸ்ப்ளேக்களை விட மேம்பட்டு இருக்கும் என்று தெரிகிறது.

தற்போது RGB OLEDoS ரக டிஸ்ப்ளேக்களை வினியோகம் செய்யும் ஒரே நிறுவனமாக சாம்சங் உள்ளது. அந்த வகையில், ஆப்பிள் நிறுவனம் தனது புதிய விஷன் ப்ரோ மாடலின் டிஸ்ப்ளே மாற்றுவதில் உறுதியாக இருந்தால், சாம்சங் டிஸ்ப்ளேக்களையே பயன்படுத்தும் என்று தெரிகிறது. முன்னதாக ஆப்பிள் ஐபோன் மாடல்களில் பயன்படுத்தப்படும் OLED டிஸ்ப்ளேக்களை சாம்சங் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News