புதிய கேஜெட்டுகள்

முற்றிலும் வித்தியாசமான ஐபேட் டிசைன் - காப்புரிமையில் லீக் ஆன தகவல்!

Published On 2023-07-12 04:09 GMT   |   Update On 2023-07-12 04:09 GMT
  • காப்புரிமையில் தற்போது இருக்கும் ஐபேட் மாடல், வடிவம் மாறும் ஷெல் கொண்டிருக்கிறது.
  • இரு சாதனங்கள் ஷெல் அருகில் இருக்கும் போது, அவை ஒன்றோடு ஒன்று தகவல் பரிமாற்றம் செய்து கொள்ளும்.

ஆப்பிள் நிறுவனம் தனது எதிர்கால சாதனங்களுக்காக ஏராளமான காப்புரிமை மற்றும் டிரேட்மார்க்-களை பெற்று வருகிறது. அந்த வரிசையில், தற்போது பெற்றிருக்கும் புதிய காப்புரிமை பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி ஆப்பிள் நிறுவனம் 2-இன்-1 டிசைன் கொண்ட ஐபேட் மாடலை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

அமெரிக்க டிரேட்மார்க் மற்றும் காப்புரிமை அலுவலகம் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் இதுவரை 53 காப்புரிமைகளை பெற்று இருப்பது தெரியவந்துள்ளது. அதன்படி புதிய காப்புரிமையில் தற்போது இருக்கும் ஐபேட் மாடல், வடிவம் மாறும் ஷெல் கொண்டிருக்கிறது. இதனுடன் வெளியாகி இருக்கும் புகைப்படத்தின் படி ஐபேட் மேல்புறம் உறுதியாக இணைக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

 

இதன் மூலம் பயனர்கள் ஐபேட்-ஐ எளிதில் கழற்ற முடியும். இதில் உள்ள ஷெல் பல்வேறு வழிகளில் ஸ்டான்ட் போன்று பயன்படுத்த வழி செய்கிறது. காப்புரிமை விவரங்களின் படி இந்த ஐபேட் ஷெல் அசெம்ப்லி வைபை, ப்ளூடூத் மற்றும் அல்ட்ரா வைடுபேன்ட் உள்ளிட்டவைகளை சப்போர்ட் செய்கிறது. இரு சாதனங்கள் ஷெல் அருகில் இருக்கும் போது, அவை ஒன்றோடு ஒன்று தகவல் பரிமாற்றம் செய்து கொள்ளும்.

இதுதவிர, ஆப்பிள் நிறுவனம் உருவாக்கி வரும் இதர ஐபேட் டிசைன் பற்றிய தகவல்களும் வெளியாகி உள்ளன. அதன்படி புதிய ஐபேட் டிசைன்களில், விர்ச்சுவல் கீபோர்டு மற்றும் ஜெஸ்ட்யூர் டிடெக்ஷன் சப்போர்ட் கொண்டிருக்கும் என்று தெரியவந்துள்ளது. ஐபேட் டிசைன் பற்றிய காப்புரிமை விவரங்கள், ஆப்பிள் நிறுவனம் தொடர்ச்சியாக புதுமைகளை புகுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருவது உறுதியாகி இருக்கிறது. 

Tags:    

Similar News