வழிபாடு

விஜயதசமி - கூத்தனூர் சரஸ்வதி கோவிலில் வித்யாரம்பம் வழிபாடு

Published On 2025-10-02 08:33 IST   |   Update On 2025-10-02 08:33:00 IST
  • நன்னிலம் வட்டம் கூத்தனூரில் பிரசித்தி பெற்ற சரஸ்வதி கோவில் உள்ளது.
  • விஜயதசமி நாளில் வித்யாரம்பம் எனப்படும் குழந்தைகளுக்கு முதன் முதலில் கல்வியை தொடங்கும் சடங்குகளும் நடத்தப்படுவது வழக்கம்.

நவராத்திரி பண்டிகையின் நிறைவாக சரஸ்வதி பூஜை, விஜயதசமி கொண்டாடப்படுகிறது. நேற்று சரஸ்வதி பூஜை கொண்டாடப்பட்டது. அக்டோபர் 2-ந்தேதியான இன்று விஜயதசமி கொண்டாடப்படுகிறது.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் கூத்தனூரில் பிரசித்தி பெற்ற சரஸ்வதி கோவில் உள்ளது. ஒட்டக்கூத்தரால் பாடல் பெற்ற தலமான இங்கு ஆண்டுதோறும் சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி விழா விமரிசையாக நடைபெறும்.

இன்று கல்வி, கலைகள், தொழிலுக்கு பயன்படுத்தும் பொருட்கள் ஆகியவற்றை வைத்து வழிபடுவது வழக்கம். இதனால் சரஸ்வதி தேவியின் அருளால் தொழில்கள் சிறப்படையும், வாழ்க்கையில் வளர்ச்சி ஏற்படும், தொடங்கும் செயல்களில் வெற்றி கிடைக்கும் என்பது நம்பிக்கை.

விஜயதசமி நாளில் வித்யாரம்பம் எனப்படும் குழந்தைகளுக்கு முதன் முதலில் கல்வியை தொடங்கும் சடங்குகளும் நடத்தப்படுவது வழக்கம்.

இந்நிலையில் கூத்தனூரில் உள்ள சரஸ்வதி கோவிலில் வித்யாரம்பம் வழிபாடு நடந்தது. நெல்மணியில் 'அ' என எழுத வைத்து குழந்தைகளுக்கு கற்றலை பெற்றோர் தொடங்கி வைத்தனர்.

Tags:    

Similar News