கோப்பு படம்.
- வில்லியனூர் அருகே மனைவி பேசாததால் தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- கடந்த சில நாட்களாக ஜெயசந்திரன் வேலைக்கு செல்லாமல் தினமும் மது குடித்து விட்டு மனைவி குழந்தைகளை அடித்து துன்புறுத்தி வந்தார்.
புதுச்சேரி:
வில்லியனூர் அருகே மனைவி பேசாததால் தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வில்லியனூர் அருகே சிவராந்தம் புதுகாலனி ஓடை வீதியை சேர்ந்தவர் ஜெயசந்திரன். கூலி தொழிலாளி. இவருக்கு அரிமாலா என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.
கடந்த சில நாட்களாக ஜெயசந்திரன் வேலைக்கு செல்லாமல் தினமும் மது குடித்து விட்டு மனைவி குழந்தைகளை அடித்து துன்புறுத்தி வந்தார்.
அதுபோல் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஜெயசந்திரன் மது குடித்து விட்டு மனைவி அரிமாலாவிடம் தகராறு செய்து அவரை அடித்து உதைத்தார். இதனால் அரிமாலா கடந்த 2 நாட்களாக கணவரிடம் பேசவில்லை. மனைவி பேசாததால் ஜெயசந்திரன் மனஉளைச்சலில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் அரிமாலா குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு உறவினர் வீட்டுக்கு சென்றார். பின்னர் அரிமாலா வீட்டுக்கு வந்து பார்த்த போது வீட்டில் கணவர் ஜெயசந்திரன் மின்விசிறியில் துப்பட்டா வால் தூக்குபோட்டு தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கணவரை தூக்கில் இருந்து மீட்டு அரியூரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ஜெயசந்திரன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து அவரது மனைவி அரிமாலா கொடுத்த புகாரின் பேரில் மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.