கோப்பு படம்.
2 சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் எப்போது ஆதரவு அளித்தார்கள்.? அன்பழகன் கேள்வி
- ஜனாதிபதி தேர்தலில் 2 சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு எதிராக ஆதரவளித்துள்ளதாக வைத்திலிங்கம் எம்.பி. கூறியுள்ளார்.
- தொகுதியின் நன்மைக்காக பிரச்சினையின் அடிப்படையில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஆளும் அரசை எதிர்த்தும், ஆதரவாகவும் செயல்படுவார்கள்.
புதுச்சேரி:
புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஜனாதிபதி தேர்தலில் 2 சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு எதிராக ஆதரவளித்துள்ளதாக வைத்திலிங்கம் எம்.பி. கூறியுள்ளார். அவர் கூறும் 2. எம்.எல்.ஏ.க்களும் தேசிய ஜனநாயக அரசுக்கு ஆதரவளித்துள்ளதாக கடிதம் அளித்ததில்லை அவர்களது தொகுதியின் நன்மைக்காக பிரச்சினையின் அடிப்படையில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஆளும் அரசை எதிர்த்தும், ஆதரவாகவும் செயல்படுவார்கள்.
இது அவர்களுடைய நிலைப்பாடு.
இதைக் கூட புரிந்து கொள்ளாமல் சம்பந்தப்பட்ட 2 எம்.எல்.ஏ.க்களும் எங்கள் அரசுக்கு எப்போது ஆதரவு அளித்தார்கள் என காங்கிரஸ் வைத்தியலிங்கம் எம்.பி. தெளிவுபடுத்த வேண்டும்.ஆளும் அரசுக்கு எதிராக முன்னுக்கு பின் முரணாக பேசும் காங்கிரஸ் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமியையும் மிஞ்சும் வகையில் காங்கிரஸ் எம்.பி. வைத்திலிங்கம் பேசுவது சரியானது அல்ல.
ஆக்கிரமிப்புகளை உடனுக்குடன் தடுக்க தவறியதால் புதுவை நகரமே போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கிறது. பல வியாபார நிறுவனங்கள், கடைகளுக்கு வரும் பொது மக்கள் வாகனத்தை நிறுத்த இடமில்லாததால் சாலை முழுவதும் வர்த்தக நிறுவன உபயோகத்திற்கு சொந்தமாக்கப்பட்டுள்ளது பார்க்கிங் வசதி இல்லாத வியாபார நிறுவனங்களுக்கு புதுவை பிளானிங் அத்தாரிட்டி எப்படி அனுமதி வழங்கி உள்ளது என்று தெரியவில்லை.
அரசு அதிகாரிகள் சட்டத்துக்கு உட்பட்டு பணி செய்வதை தடுக்கும் எந்த அமைப்பாக இருந்தாலும் அவர்களை அரசு புறந்தள்ள வேண்டும் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய அரசு எடுக்கும் நேர்மையான பாரபட்சம் இல்லாத நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அரசியல்வாதிகளின் செயலை மக்கள் முன் கொண்டு வருவதில் அரசு தவற கூடாது..
இவ்வாறு அன்பழகன் அறிக்கையில் கூறியுள்ளார்.