புதுச்சேரி
சமூக நலத்துறை இயக்குனரிடம் கென்னடி எம்.எல்.ஏ. மனு அளித்த காட்சி.
நலத்திட்டங்களை விரைந்து வழங்க வேண்டும் - துறை இயக்குனரிடம் கென்னடி எம்.எல்.ஏ. மனு
- உப்பளம் தொகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் சரியாக செயல்படுத்தப் படுவதில்லை.
- தொகுதியில் இருந்து அளிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுத்து, நலத்திட்ட உதவிகள் பயனாளிகளை சென்றடைய ஏற்பாடு செய்ய வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை உப்பளம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.அனிபால் கென்னடி சமூக நலத்துறை இயக்குனர் பத்மாவதி, துணை இயக்குனர் கலாவதி ஆகியோரை சந்தித்து மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-
உப்பளம் தொகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் சரியாக செயல்படுத்தப் படுவதில்லை.
தொகுதியில் இருந்து அளிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுத்து, நலத்திட்ட உதவிகள் பயனாளிகளை சென்றடைய ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
இதில் தி.மு.க. தொகுதி செயலாளர் சக்திவேல், அவைத்தலைவர் ரவி, மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜி, கிளை செயலாளர் செல்வம், ரகுமான் ஆகியோர் கலந்து கொண்டனர்.