பூத்துறை ஊராட்சி மன்ற தலைவர் சேகர் என்ற உதயகுமார் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்ற காட்சி.
பூத்துறை ஊராட்சியில் கிராம சபை கூட்டம்
- உலக தண்ணீர் தினத்தை யொட்டி பூத்துறை ஊராட்சி மன்ற வளாகத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
- வாழ்வாதார திட்டம், பொதுப்பொருட்கள் மற்றும் சேவை திட்டம் மற்றும் சமூக மேம்பாட்டு திட்டம் தயாரிக்கப்பட்டு கிராம சபையில் வைத்து ஒப்புதல் பெறப்பட்டது.
புதுச்சேரி:
உலக தண்ணீர் தினத்தை யொட்டி பூத்துறை ஊராட்சி மன்ற வளாகத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
இந்த கிராம சபை கூட்டத்தில் உலக தண்ணீர் தினத்தின் கருப்பொருளை பற்றி விவாதிக்கப்பட்டது. கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் பற்றி விவாதிக்கப்பட்டது. கடந்த 01.04.22 அன்று முதல் 28.02.23 வரை உள்ள காலத்தில் கிராம ஊராட்சி பொது நிதியிலிருந்து மேற்கொண்ட செலவின் அறிக்கை வாசிக்கப்பட்டது.
இந்த தூய்மை பாரத இயக்கம், ஜல்ஜீவன் இயக்கத்தில் ஊராட்சி உள்ள அனைத்து வீடுகளுக்கும் 100 சதவீதம் குடிநீர் குழாய் இணைப்பு, குடிசை இல்லா தமிழகம் என்னும் நோக்கத்தினை அடையும் வகையில் கிராமத்தில் வீடு கணக்கெடுக்கப்பட்டு தகுதி வாய்ந்த குடும்பங்களில் இறுதிப்பட்டியலை கிராம சபையில் வைத்து ஒப்புதல் பெறப்பட்டது.
சிறுதானிய உற்பத்தி மற்றும் அதன் நன்மை குறித்து விழிப்புணர்வு செய்வதோடு சர்வதேச சிறுதானிய ஆண்டு 2023 மார்ச் 20 முதல் 25-ந் தேதி வரை ஊராட்சிகளில் சிறப்பாக கொண்டாடுதல், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் 2022-2023-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட வறுமை ஒழிப்பு திட்டத்தின் கீழ் உரிமை திட்டம், வாழ்வாதார திட்டம், பொதுப்பொருட்கள் மற்றும் சேவை திட்டம் மற்றும் சமூக மேம்பாட்டு திட்டம் தயாரிக்கப்பட்டு கிராம சபையில் வைத்து ஒப்புதல் பெறப்பட்டது.
பூத்துறை ஊராட்சி மன்ற தலைவர் சேகர் என்ற உதயகுமார் தலைமையில் நடந்த கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஆதிலட்சுமி கோவிந்தராஜ், வார்டு உறுப்பினர்கள் சூர்யாகுணசேகரன், ராதா பாலகிருஷ்ணன், ஆறுமுகம் மண்ணாங்கட்டி, சக்கரவர்த்தி, சமையாள்வெங்கடேசன், சுதாஅரசகுமார், குனபூசணி ஆறுமுகம் ஆகியோர் முன்னில வகித்தனர். இந்த கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக வானூர் ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அதிகாரி மோகனா கலந்து கொண்டார்.