புதுச்சேரி

புதுவை மாநில கபடி சங்க புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்ட விஜயராணி ஜெயராமன் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு சபாநாயகர் ஏம்பலம் செல்வம் சான்றிதழ் வழங்கிய காட்சி.

கபடி சங்க தலைவராக விஜயராணி ஜெயராமன் தேர்வு

Published On 2023-01-18 15:03 IST   |   Update On 2023-01-18 15:03:00 IST
  • புதுவை மாநில கபடி சங்க (யூனியன் டெரிட்டரி ஆப் பாண்டிச்சேரி கபடி அசோசியேசன்) பொதுக்குழு கூட்டம் சங்கத் தலைவர் சண்முகம் தலைமையில் அக்கார்டு ஓட்டலில் நடந்தது.
  • இந்த தேர்தலில் புதுவை மாநில கபடி சங்கத்தின் புதிய தலைவராக விஜயராணி ஜெயராமன் தேர்வு செய்யப்பட்டார்.

புதுச்சேரி:

புதுவை மாநில கபடி சங்க (யூனியன் டெரிட்டரி ஆப் பாண்டிச்சேரி கபடி அசோசியேசன்) பொதுக்குழு கூட்டம் சங்கத் தலைவர் சண்முகம் தலைமையில் அக்கார்டு ஓட்டலில் நடந்தது.

இந்த கூட்டத்தில் 2023- 2027-ம் ஆண்டுக்கான நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் அதிகாரியாக இந்திய அரசின் அமலாக்க இயக்குனரக அரசு சிறப்பு வக்கீல் விநாயகம் முன்னிலையில் தேர்தல் நடந்தது. மேற்பார்வையாளராக புதுவை மாநில விளையாட்டு ஆணையத்தின் அதிகாரி சண்முகம், பாண்டிச்சேரி ஒலிம்பிக் அசோசியேசன் இணை செயலாளர் வளவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த தேர்தலில் புதுவை மாநில கபடி சங்கத்தின் புதிய தலைவராக விஜயராணி ஜெயராமன் தேர்வு செய்யப்பட்டார். கோவி. ஆரியசாமி பொது செயலாளராகவும், கபிலன் பொருளாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர். துணைத் தலைவர்களாக தெய்வசிகாமணி, கதிர வன், சோழசிங்கராயர், செல்வராசு காசிநாதன், செந்தில்குமார் ஆகியோரும் இணை செயலாளராக வீரசெல்வம், ஸ்ரீதர், மயிலப்பன், சக்திவேல், கர்ணன் ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

பதவியேற்பு விழாவில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கலந்து கொண்டு புதுவை மாநில கபடி சங்கத்தின் புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவருக்கும் வாழ்த்து க்களை தெரிவித்துக் கொண்டார். இதில் முன்னாள் கபடி சங்க தலைவர் ஜெயராமன் மற்றும் முன்னாள் நிர்வாகிகள் புதுவை மாநிலத்தைச் சேர்ந்த பல்வேறு கபடி அணியினுடைய நிறுவனர்கள் கலந்து கொண்டனர்.

முடிவில் கபடி சங்க செய்தி தொடர்பாளர் பூபாலன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News