புதுச்சேரி

புதுவையில் மாணவர் சிறப்பு பஸ்களை இயக்க கோரி காமராஜர் நகர் தொகுதி காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் வைத்திலிங்கம் எம்.பி. பங்கேற்று கண்டன உரையாற்றிய காட்சி.

வைத்திலிங்கம் எம்.பி. போராட்டம்

Published On 2022-11-28 09:50 GMT   |   Update On 2022-11-28 09:50 GMT
மாணவர் சிறப்பு பஸ் இயக்க கோரி வைத்திலிங்கம் எம்.பி. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. காமராஜர் நகர் தொகுதி காங்கிரஸ் சார்பில் சாரம் அரசு தொடக்கப்பள்ளி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

புதுச்சேரி:

மாணவர் சிறப்பு பஸ் இயக்க கோரி வைத்திலிங்கம் எம்.பி. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

காமராஜர் நகர் தொகுதி காங்கிரஸ் சார்பில் சாரம் அரசு தொடக்கப்பள்ளி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு வைத்திலிங்கம் எம்.பி. தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் காமராஜர் நகர் தொகுதி காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

மாணவர்களுக்கான இலவச ஒரு ரூபாய் பஸ்சை இயக்க வேண்டும். பள்ளி சீருடை, மதிய உணவில் முட்டை, இலவச நோட்டு, புத்தகம், சைக்கிள், லேப்டாப், கல்வி உதவித்தொகை ஆகியவற்றை வழங்க வேண்டும். ஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்க வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

Tags:    

Similar News