புதுச்சேரி

விழாவில் அமைச்சர் சாய்.ஜெ.சரவணன் குமார் விவசாயிகளுக்கு காய்கறிவிதை மற்றும் பழ மரக்கன்றுகளை வழங்கிய காட்சி.

வேளாண் அறிவியல் நிலையத்தில் மரம் வளர்ப்பு பிரசாரம்

Published On 2022-09-18 09:05 IST   |   Update On 2022-09-18 09:05:00 IST
  • வேளாண் அறிவியல் நிலையம் மற்றும் இக்கோ நிறுவனத்தின் கூட்டு முயற்சியில் ஊட்டச்சத்து மற்றும் மரம் வளர்ப்பு பற்றிய தேசிய அளவிலான பிரசாரம் நடந்தது.
  • குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய்.ஜெ.சரவணன் குமார் தலைமை தாங்கி விவசாயிகள் மற்றும் விவசாய மகளிர் அனைவருக்கும் காய்கறி விதை மற்றும் பழமரக்கன்றுகளை வழங்கினார்.

புதுச்சேரி:

புதுவை பெருந்தலைவர் காமராசர் வேளாண் அறிவியல் நிலையத்தில் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் (ஐ.சி.ஏ.ஆர்) அறிவுறுத்தலின்படி காமராசர் வேளாண் அறிவியல் நிலையம் மற்றும் இக்கோ நிறுவனத்தின் கூட்டு முயற்சியில் ஊட்டச்சத்து மற்றும் மரம் வளர்ப்பு பற்றிய தேசிய அளவிலான பிரசாரம் நடந்தது. வேளாண் இயக்குநர் ராமகிருஷ்ணன் என்ற பாலகாந்தி வாழ்த்துரை வழங்கினார்.

வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜாகிர் உசேன் வரவேற்றார். குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய்.ஜெ.சரவணன் குமார் தலைமை தாங்கி விவசாயிகள் மற்றும் விவசாய மகளிர் அனைவருக்கும் காய்கறி விதை மற்றும் பழமரக்கன்றுகளை வழங்கினார். தொடர்ந்து வேளாண் அறிவியல் நிலையத்தில் மரம் நடும் விழாவினை அமைச்சர் சாய்.ஜெ.சரவணன் குமார் தொடங்கி வைத்தார்.

ஊட்டச்சத்து தானியங்கள் பற்றிய விரிவுரை மற்றும் மனித ஆரோக்கியத்தில் அதன் பங்கு பற்றி ஜிப்மர் உணவியல் நிபுணர் மாதவி எடுத்துரைத்தார். நிலைய விவசாயம் மற்றும் கிராமப்புற வாழ்வாதாரத்தில் தோட்டத்தின் பங்கு குறித்து உழவியல் நிபுணர் ரவி எடுத்துரைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பங்கெடுத்த விவசாயிகள் பயன்பெறும் வகையில் மத்திய அரசின் வேளாண் திட்டங்கள் மற்றும் அதனை பெறும் வழிமுறைகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது. வேளாண் அறிவியல் நிலைய அதிகாரிகள், ஊழியர்கள், விவசாய நண்பர்கள் மற்றும் விவசாய மகளிர் கலந்து கொண்டனர். தொழில் நுட்ப வல்லுனர் பொம்மி நன்றி கூறினார்.

Tags:    

Similar News