புதுச்சேரி

கோப்பு படம்.

சுற்றுலா ஊழியர்கள் வாழ்வில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது-முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு பாராட்டு

Published On 2023-02-01 05:19 GMT   |   Update On 2023-02-01 05:19 GMT
  • புதுவை சுற்றுலாத்துறை வளர்ச்சி கழக தலைவர் அருண் தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் புதுவை சுற்றுலா வளர்ச்சிக்கழக நிரந்தர ஊழியர்களுக்கு அகவிலைப்படி 41 சதவீதம் வழங்க முடிவு செய்யப்பட்டது.
  • அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அகவிலைப்படியை உயர்த்தி வழங்கியது ஊழியர்களின் வாழ்வில் வெளிச்சத்தையும் நம்பிக்கை யும் ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி:

புதுவை சுற்றுலாத்துறை வளர்ச்சி கழக தலைவர் அருண் தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் புதுவை சுற்றுலா வளர்ச்சிக்கழக நிரந்தர ஊழியர்களுக்கு அகவிலைப்படி 41 சதவீதம் வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி அகவிலைப்படி 148 சதவீதத்திலிருந்து 189 சதவீதமாக உயர்த்தி ஜனவரி மாத சம்பளத்தில் சேர்த்து ஊழியர்களின் வங்கி கணக்கில் செலுத்த முடிவு செய்யப்பட்டது.

இதற்கு சுற்றுலா வளர்ச்சி கழக ஊழியர்கள் சங்க பொதுசெயலாளர் விஜயராகவன் அரசுக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அகவிலைப்படியை உயர்த்தி வழங்கியது ஊழியர்களின் வாழ்வில் வெளிச்சத்தையும் நம்பிக்கை யும் ஏற்படுத்தியுள்ளது.

அதனால் ஒட்டுமொத்த ஊழியர்களின் சார்பாக முதல்-அமைச்சர், சுற்றுலாத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என கூறியுள்ளார்.

Tags:    

Similar News