தவளக்குப்பம் அடுத்த புதுக்குப்பம் அரசு ஆரம்ப பள்ளியில் கழிப்பறை கட்டும் பணியை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்.
null
அரசு பள்ளிகளுக்கு சுகாதார வசதி-சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பணியை தொடங்கி வைத்தார்
- ரூ.3.35 லட்சம் வீதம் 3 பள்ளிகளுக்கு மொத்தம் ரூ.10 லட்சத்து 5 ஆயிரம் செலவில் கழிப்பறை கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது.
- முதன்மை கல்வி அதிகாரி தனசெல்வம் நேரு, பள்ளி துணை ஆய்வாளர் பக்கிரிசாமி மற்றும் தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
புதுவை எல்.ஐ.சி. வீட்டுவசதி வாரியம் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனம் இணைந்து பூரணாங்குப்பம், புதுக்குப்பம் மற்றும் தானம்பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளிகளுக்கு தலா ரூ.3.35 லட்சம் வீதம் 3 பள்ளிகளுக்கு மொத்தம் ரூ.10 லட்சத்து 5 ஆயிரம் செலவில் கழிப்பறை கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது.
இதில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கலந்து கொண்டு பூமிபூைஜ செய்து பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பா.ஜனதா விவசாய அணி பொறுப்பாளர் ராமு, தொகுதி தலைவர் லட்சுமிகாந்தன், வேளாண் கடன் வழங்கும் சங்க தலைவர் தட்சிணாமூர்த்தி, முதன்மை கல்வி அதிகாரி தனசெல்வம் நேரு, பள்ளி துணை ஆய்வாளர் பக்கிரிசாமி மற்றும் தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.