புதுச்சேரி

கோப்பு படம்.

கோவில் பந்தல் எரிந்து சாம்பல்

Published On 2022-10-25 13:30 IST   |   Update On 2022-10-25 13:30:00 IST
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

புதுச்சேரி:

நாடு முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

புதுவையில் மக்கள் பட்டாசு வெடித்து, குடும்பத்துடன் மகிழ்ச்சியாக தீபாவளி கொண்டாடினர். புதுவை அரசு விபத்தில்லா தீபாவளியை கொண்டாட வலியுறுத்தி தீபாவளிக்கு பல்வேறு அறிவுரைகளை மக்களுக்கு வழங்கி வந்தது. சிலர் அஜாக்கிரதையாக பட்டாசுகளை வெடித்துள்ளனர். இதில் சிலரது வீடுகள், இருசக்கர வாகனங்கள், பொருட்கள் உள்ளிட்டவை எரிந்து நாசமானது.

தவளக்குப்பத்தை அடுத்த பூரணாங்குப்பம் பெருமாள் கார்டன் பகுதியில் சிலர் சாலையில் பட்டாசு வெடித்துள்ளனர், அப்போது, பட்டாசின் தீப்பொறி பட்டு அருகில் இருந்த தண்டபாணி என்பவரது கூரை வீடு தீ பிடித்து எரிந்தது. அங்கிருந்தவர்கள் தண்ணீரை ஊற்றி தீயைஅணைக்க மயன்றனர்.

ஆயினும், தீ அருகில் இருந்த சிவலோகம் என்பவரது வீட்டின் கூரை மீது பரவி அந்த வீடும் தீ பிடித்து எரிந்தது. இதுகுறித்து தீயணைப்பு மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதில் 2 வீடுகளிலும் இருந்த டி,வி கம்ப்யூட்டர், இருசக்கர வானம் உள்பட ரூ1.½ லட்சம் மதிப்பலான பொருட்கள் எரிந்து நாசமானது.

Tags:    

Similar News