புதுச்சேரி

கைது செய்யப்பட்ட ரவுடி அசோக்கை படத்தில் காணலாம்.

வாலிபரை வீச்சரிவாளால் வெட்டிய ரவுடி கைது

Published On 2022-09-19 14:32 IST   |   Update On 2022-09-19 14:32:00 IST
  • லாஸ்பேட்டையில் மோட்டார் சைக்கிளில் உரசி சென்ற தகராறில் வாலிபரை வீச்சரிவாளால் வெட்டிய ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
  • வாலிபர் திடீரென மறைத்து வைத்திருந்த வீச்சரிவாளை எடுத்து ஆகாசை கையில் வெட்டினார்.

புதுச்சேரி:

லாஸ்பேட்டையில் மோட்டார் சைக்கிளில் உரசி சென்ற தகராறில் வாலிபரை வீச்சரிவாளால் வெட்டிய ரவுடியை போலீசார் கைது செய்தனர்.

புதுவை லாஸ்பேட்டை குறிஞ்சி நகரை சேர்ந்தவர் ஆகாஷ் (வயது20).  இவர் லாஸ்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். லெனின் நகரில் சென்ற போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் ஆகாஷ் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிளில் உரசி சென்றதாக கூறபடுகிறது. இதனை ஆகாஷ் தட்டிக்கேட்டார்.

இதில் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றியது. அப்போது ஆத்திரமடைந்த அந்த வாலிபர் திடீரென மறைத்து வைத்திருந்த வீச்சரிவாளை எடுத்து ஆகாசை கையில் வெட்டினார்.

இதில் பலத்த காயமடைந்த ஆகாஷ் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்து புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஆகாசை வீச்சரிவாளால் வெட்டிய வாலிபர் லாஸ்பேட்டை சாமிபிள்ளை தோட்டம் லெனின் நகரை சேர்ந்த ரவுடி அசோக் என்ற செங்கோட்டையன் என்பது தெரியவந்தது. இதையடுத்து அசோக்கை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அசோக் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News