கோப்பு படம்
வீடு புகுந்து மின்விசிறி திருடியவர் சிக்கினார்
- புதுவை திருமுடி நகர் 2-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் மோகன்ராஜ்.
- இவர் வேறு வீடு மாற இருந்ததால் பழைய வீட்டில் உள்ள பொருட்களை அந்த வீட்டில் வைத்து விட்டு தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார்.
புதுச்சேரி:
புதுவையில் வீடு புகுந்து மின்விசிறி திருடிய நபர் கையும் களவுமாக சிக்கினார். புதுவை திருமுடி நகர் 2-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவர் வேறு வீடு மாற இருந்ததால் பழைய வீட்டில் உள்ள பொருட்களை அந்த வீட்டில் வைத்து விட்டு தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார்.
நேற்று மோகன்ராஜ் முன்பு குடியிருந்த வீட்டின் மாடியில் வசிக்கும் தனது மாமனாரை பார்க்க வந்தார். அப்போது இரவு 7.30 மணியளவில் வீட்டில் யாரோ நடமாடும் சத்தமும், பொருட்கள் உருட்டும் சத்தமும் வந்ததால் சந்தேகமடைந்த மோகன்ராஜ் கீழே இறங்கி வந்து பார்த்தார்.
அப்போது ஒருவர் வீட்டில் இருந்த டேபிள் மின் விசிறியை திருடிக்கொண்டு வெளியேறுவதை கண்டு மோகன்ராஜ் அதிர்ச்சியடைந்தார். உடனே அந்த நபரை கையும், களவுமாக பிடித்து பெரியகடை போலீசில் ஒப்படைத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த நபரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் சென்னையை சேர்ந்த சங்கர் என்பது தெரியவந்தது. இதையடுத்து சங்கரை போலீசார் கைது செய்தனர்.